search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ban Sterlite"

    தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மக்களின் நினைவேந்தல் கூட்டத்தில் பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி கேட்பது நமது உரிமை. கேள்வி கேட்காவிட்டால் நம் கையை எடுத்து நம் கண்ணிலேயே குத்துவார்கள் என்றார். #Prakashraj
    சி.ஐ.டி நகரில் உள்ள கவிக்கோ அரங்கத்தில் ’மறக்க முடியுமா தூத்துக்குடியை’ என்ற தலைப்பில் தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மக்களின் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்று பேசியதாவது:-

    ‘‘ரியல் எஸ்டேட் போல தமிழகம் மாறி வருகிறது. அனைத்து கட்சிகளும் ஒரே மாதிரியாகத்தான் செயல்படுகின்றன. மக்கள் அவர்களை வேண்டாம் என்று முடிவு எடுத்து பல காலங்கள் ஆகிவிட்டது. காது இல்லாதவர்களிடம் பேசுவது வீண். என்னை யார் என்ன வேண்டுமானாலும் பேசலாம். அதைப்பற்றி நான் கவலைபட மாட்டேன்.

    தூத்துக்குடியில் நடந்தவற்றையும், நடப்பவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். நாட்டு மக்களை அச்சத்தில் வைத்து இருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். அப்படி பயமுறுத்தி ஆள்பவர்களின் முடிவு மோசமானதாக இருக்கும்.



    நான் ஏன் நேரடி அரசியலுக்கு வர மறுக்கிறேன் என்றால் தேர்தல் அரசியலில் பங்கெடுத்தால் மக்களுக்கு நல்லது செய்ய முடியாது. நான் அரசியலில் தான் இருக்கிறேன். ஆனால் அரசியல்வாதியாக இல்லை. சுயநலமில்லாமல் மக்களுக்கான உரிமையை பேச நினைக்கிறேன். என்னை போன்றோரின் குரல் மக்களுக்கு தேவை. கேள்வி கேட்பது நமது உரிமை. கேள்வி கேட்காவிட்டால் நம் கையை எடுத்து நம் கண்ணிலேயே குத்துவார்கள்’’.

    இவ்வாறு அவர் பேசினார். #Prakashraj #TuticorinShootOut #BanSterlite

    தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்ட நடிகை நிலானி குன்னூரில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். #SterliteProtest
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தூத்துக்குடியில் நடத்தப்பட்ட பேரணியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்களில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தொலைக்காட்சி நடிகை நிலானி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது.

    போலீஸ் உடை அணிந்து நிலானி அந்த வீடியோவில் பேசும் போது, இது தற்செயலாக நடந்தது இல்லை. திட்டமிட்ட படுகொலை. இறந்தவர்களில் 8 பேர் போராட்டத்திற்காக முன்நின்றவர்கள். அவர்களை திட்டமிட்டே கொன்றுள்ளனர். என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார். இதையடுத்து நடிகை நிலானி மீது 4 பிரிவுகளில் தியாகராய நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 



    இந்த நிலையில், நிலானி இன்று குன்னூரில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். #SterliteProtest #Nilani

    தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு சந்தித்து ஆறுதல் கூற வேண்டும் என்பதை விஜய்யிடம் இருந்து ரஜினி கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினார். #Rajinikanth #Vijay
    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22-ந் தேதி தூத்துக்குடியில் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக புறப்பட்டு சென்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனை கொண்ட ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. இதையடுத்து நீதிபதி அருணா ஜெகதீசன் நேற்று தூத்துக்குடிக்கு வந்து விசாரணையை தொடங்கினார்.

    இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் குடும்பத்துக்கு நடிகர் விஜய் நேற்று நள்ளிரவில் நேரில் சென்று ஆறுதல் கூறினார். அப்போது அவர் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் கூறியதுடன், நிதியுதவியும் அளித்தார்.



    விஜய்யின் தூத்துக்குடி சந்திப்புக்கு பிறகு இன்று செய்தியாளர்களை சந்தித்த அமீர் கூறும்போது, 

    காலா படத்தின் புரமோஷனுக்காக தான் ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றார் என்றும், நடிகர் விஜய்யும், தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட  மக்களை சந்தித்திருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு சந்தித்து ஆறுதல் கூற வேண்டும் என்பதை நடிகர் விஜய்யிடம் இருந்து ரஜினி கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினார். #Rajinikanth #Vijay 

    தூத்துக்குடியில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் அளித்த ரஜினிகாந்த், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் வழங்கினார். #Rajinikanth #SterliteProtest
    அரசியல் அறிவிப்புக்கு பின்னர் முதல் முறையாக தூத்துக்குடிக்கு பயணம் மேற்கொண்டுள்ள ரஜினிகாந்த் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நேரில் சந்தித்தார். 

    அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் அழைத்து ஆறுதல் கூறிய ரஜினிகாந்த், அவர்களின் குடும்பதினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கினார். இதில் முதற்கட்டமாக 9 பேருக்கு ரூ. 2 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் உதவித்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. 



    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், 

    மக்களின் அமைதியான போராட்டத்தின் போது, சமூக விரோதிகளால் வன்முறை வெடித்தது. இதில் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். ஜெயலலிதா அதனை சரியாக செய்திருந்தார். ஸ்டெர்லைட் ஆலையை இனி திறக்கக் கூடாது. 

    தமிழகம் போராட்டக் களமாக மாறிருக்கிறது. தூத்துக்குடியில் நடந்த அசம்பாவிதத்துக்கு உளவுத்துறையின் தவறே காரணம் என்றார். #Rajinikanth #SterliteProtest
    தூத்துக்குடியில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் அளித்த பின்னர் செய்தியார்களை சந்தித்த ரஜினி, உளவுத்துறை தோல்வியால் தான் தூத்துக்குடியில் வன்முறை ஏற்பட்டது என்றார். #Rajinikanth #SterliteProtest
    அரசியல் அறிவிப்புக்கு பின்னர் முதல் முறையாக தூத்துக்குடிக்கு பயணம் மேற்கொண்டுள்ள ரஜினிகாந்த் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நேரில் சந்தித்த ரஜினிகாந்த் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். 

    அப்போது ரஜினி பேசியதாவது, 

    ஸ்டெர்லைட் கலவரம் போன்று இந்த மாதிரியான சம்பவம் இனி நடக்கக் கூடாது. கலவரத்தின் போது பொதுச் சொத்துக்களை எரித்தது மக்கள் கிடையாது. இது சமூக விரோதிகளின் செயல், சமூக விரோதிகள் உள்ளே நுழைந்து போராட்டத்தை திசை திருப்பியிருக்கின்றனர். ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் அப்படித் தான் நடந்தது. 

    சமூக விரோதிகளின் இத்தகைய செயல்களை அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். அந்த விஷயத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை பாராட்டுகிறேன். அவர் சமூக விரோதிகளை அடக்கி வைத்திருந்தார். தற்போது ஆட்சியில் இருக்கும் அரசும் சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். 

    தொழிற்சாலையை மூட அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இனிமேல் அந்த ஆலையை திறக்க முடியாது. நீதிமன்றம் அல்லது வேறு எங்கு சென்றாலும் ஆலையை திறக்க அனுமதிக்கக் கூடாது. ஆலையை திறக்க வேண்டும் என்ற நினைப்பு கூட இருக்கக் கூடாது. 

    தமிழகம் போராட்டக் களமாக மாறியிருக்கிறது. தமிழகத்தில் அடிக்கடி போராட்டம் நடக்கிறது. அனைத்திற்கும் போராட்டம் என்பதும் தீர்வாகாது. போராட்டத்தில் ஈடுபடம் மக்கள் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும். சமூக விரோதிகளின் வசம் சிக்கி விடக்கூடாது. 

    பொறுப்பில் இருக்கும் அரசு மக்களுக்கு தேவையானதை சரியாக செய்ய வேண்டும். ஒரு ஆலையோ அல்லது வேறு ஒன்றோ ஆரம்பிப்பதற்கு முன்பே அதைப்பற்றி முழு சோதனை நடத்திய பின்னரே ஆரம்பிக்க வேண்டும். 

    தூத்துக்குடியில் அசாம்பாவிதம் நடந்தததற்கு உளவுத்துறை தான் பொறுப்பு. இது உளவுத்துறையின் தவறே. 

    இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள ஒரு நபர் விசாரணை ஆணையம் மீது நம்பிக்கையில்லை. அதேநேரத்தில் எந்த அனைத்து பிரச்சினைக்கும் ராஜினாமா செய்வது என்பது தீர்வாகாது. எல்லாத்திலும் அரசியல் பண்ணுகிறார்கள். நேரம் வரும் போது மக்கள் நியாயத்தை காட்டுவார்கள். 

    எந்த இடம் என்றாலும் காவலர்கள் மேல் கைவைப்பதை ஏற்க முடியாது. காவலர்களை அடித்தவர்களை சமூக விரோதிகளாக அறிவிக்க வேண்டும். அவர்களுக்கு தக்க தண்டனை வாங்கித் தர வேண்டும். 

    இவ்வுளவு பெரிய சம்பவம் நடந்ததற்கு அரசின் அலட்சியம் தான் காரணம். அரசுக்கு இது பெரிய பாடமாக இருக்கும் என்று நம்புகிறேன். 

    துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அறிவித்துள்ளேன் என்றார். #Rajinikanth #SterliteProtest

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க இன்று தூத்துக்குடி சென்ற ரஜினிகாந்த், நேரில் அவர்களுக்கு ஆறுதல் வழங்கினார். #SterliteProtest #Rajinikanth
    நடிகர் ரஜினிகாந்த் கடந்தாண்டு இறுதியில் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார். கட்சியை இன்னும் தொடங்கவில்லை என்றாலும், அதற்கான ஆரம்ப கட்ட பணியில் அவர் ஈடுபட்டு வருகிறார். காவிரி விவகாரம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு தன்னுடைய கருத்துக்களை தெரிவித்திருந்தார். 

    இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூற இன்று தூத்துக்குடி சென்றுள்ளார். தூத்துக்குடி விமான நிலையம் சென்ற ரஜினிக்கு அவரது ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். ரஜினியின் வருகையை ஒட்டி தூத்துக்குடி மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



    மருத்துவமனைக்கு வந்த ரஜினி காயமடைந்தவர்களை சந்தித்து நலம் விசாரித்து, நிதி மற்றும் தேவையான பொருட்களையும் வழங்கினார். பின்னர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.

    அரசியல் அறிவிப்புக்கு பின்னர் ரஜினி மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. #Rajinikanth #SterliteProtest #BanSterlite #SaveThoothukudi

    ஸ்டெர்லைட் போராட்டத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் சொல்வது தான் தனக்கு மகிழ்ச்சி என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். #Rajinikanth #SterliteProtest
    நடிகர் ரஜினிகாந்த் கடந்தாண்டு இறுதியில் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார். கட்சியை இன்னும் தொடங்கவில்லை என்றாலும். அதற்கான ஆரம்ப கட்ட பணியில் அவர் ஈடுபட்டு வருகிறார். காவிரி விவகாரம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு தன்னுடைய கருத்துக்களை தெரிவித்திருந்தார். 

    இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூற தான் தூத்துக்குடிக்கு செல்வதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். 

    சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் பேசியதாவது, 

    தூத்துக்குடியில் காயமடைந்தவர்களை சந்திக்க செல்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொன்னால்தான் எனக்கு மகிழ்ச்சி. நடிகரான என்னை பார்த்தால், தூத்துக்குடி மக்களும் மகிழ்ச்சி அடைவார்கள் என்று நம்புகிறேன். சட்டப்பேரவை கூட்டத்தொடரை திமுக புறக்கணித்தது குறித்து தான் கருத்து கூற விரும்பவில்லை என்றார். 



    தூத்துக்குடி சம்பவத்திற்கு திமுகதான் காரணம் என முதலமைச்சர் குற்றச்சாட்டு குறித்த பதில் அளித்த ரஜினி, திமுகவை அதிமுகவும், அதிமுகவை திமுகவும் விமர்சிப்பது தான் அரசியல், பழைய நிகழ்வுகளை பேசி பயனில்லை என்று கூறினார்.

    காலா படத்திற்கு கர்நாடகாவில் தடை விதித்திருப்பது குறித்து கேட்ட போது, கர்நாடக திரைப்பட வர்த்தக சபையுடன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை பேச்சு நடத்தி சுமூக தீர்வு காணும் என்றார்.
    #Rajinikanth #SterliteProtest #BanSterlite #SaveThoothukudi

    ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது, போராட்டத்தில் உயிரிழந்த ஆத்மாக்களுக்கு சமர்ப்பணம் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். #Sterlite #Rajini
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடக்கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் கடந்த 22 மற்றும் 23-ம் தேதி போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். 

    துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறும்போது, பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து இதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் பேட்டியளித்தார்.

    இதனை அடுத்து, பிற்பகலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் உயரதிகாரிகள் உடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு இன்று மாலை அரசாணை வெளியிட்டது.

    அரசாணை வெளியிடப்பட்ட சிலமணி நேரங்களில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆலைக்கு வெளியில் அரசின் நோட்டீஸை ஒட்டி, சீல் வைத்தார். இதற்கு அரசியல்வாதிகளும், முக்கிய பிரபலங்களும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

    இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறும்போது, ‘போராட்டத்தில் உயிரிழந்த ஆத்மாக்களுக்கு ஸ்டெர்லைட் வெற்றி சமர்ப்பணம். அப்பாவி மக்களின் இரத்தம் குடித்த இந்த மாதிரி போராட்டங்கள் வருங்காலத்தில் தொடரக்கூடாது என்று இறைவனை வேண்டுகிறேன்’ என்றார்.
    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு வழங்கியுள்ள அரசாணை தற்காலிக வெற்றி என்று நடிகர் ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார். #Sterlite #GVPrakash
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் நடத்திய போராட்டத்தில் கடந்த 22 மற்றும் 23-ம் தேதி போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். 

    இன்று காலை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அரசு மருத்துமனையில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போதும், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து இதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் பேட்டியளித்தார்.

    இதனை அடுத்து, பிற்பகலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் உயரதிகாரிகள் உடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு இன்று மாலை அரசாணை வெளியிட்டுள்ளது.

    பொதுமக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் மதிப்பளித்து இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக, இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    அரசாணை வெளியிடப்பட்ட சிலமணி நேரங்களில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆலைக்கு வெளியில் அரசின் நோட்டீஸை ஒட்டி, சீல் வைத்தார்.



    அரசாணை வெளியிட்டத்தற்கு நடிகர் ஜி.வி.பிரகாஷ், இது தற்காலிக வெற்றி என்று கூறியிருக்கிறார். மேலும், ‘உயிரைக் குடுத்து உரிமை காத்த போராளிகளின் உதிரம் பேசும் எம் மக்கள் வீர வரலாறு... அரசாணை தற்காலிக வெற்றி.. நிரந்தரவு தீர்வு நீதிமன்றத்தில் கிடைக்கும் வரை எதுவும் மாறாது, மாறவும் கூடாது..!!’ என்று கூறியிருக்கிறார்.

    ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் 13 பேர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சம்பவத்தில் இருந்து நடிகர் விவேக் மீள முடியாமல் இருக்கிறார். #Vivek
    தூத்துக்குடியில் ‘ஸ்டெர்லைட்’ ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22-ந்தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

    இதில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் பல அரசியல் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் போராட்டம் செய்து வருகிறார்கள். இந்நிலையில், நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில்,

    ‘ஏன் tweet செய்வதில்லை என்று கேட்கிறார்கள். மனம் மிக சோர்ந்து போய் இருக்கிறது. தூத்துக்குடி சம்பவத்தில் இருந்து மீள, நாட்கள் ஆகலாம். சிறு பையனின் உடலில் இருந்த தடியடி காயங்கள் என் பழைய ரணங்களைக் கீறி விட்டு விட்டனவே’ என்று பதிவு செய்திருக்கிறார்.
    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டை கண்டித்து சென்னையில், தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயல்பாட்டாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சினிமா இயக்குனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான பொது மக்களின் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இதற்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயல்பாட்டாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சேப்பாக்கம், விருந்தினர் மாளிகை அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.



    இதில் இயக்குனர்கள் பா.இரஞ்சித், பாலாஜி சக்திவேல், ராஜீவ் முருகன், சீனுராமசாமி, சசி, ராம், நவீன் குமாரசாமி, எஸ்.பி.ஜனநாதன், பாண்டிராஜ், நவீன், கமல் கண்ணன் ஆகியோரும், நடிகர் அரவிந்த் ஆகாஷ், பாடலாசிரியர் உமாதேவி, இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் துப்பாக்கி சூட்டை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர்.
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. #BanSterlite #SaveThoothukudi
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற பேரணியின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் பலியாகினர். மேலும் பலரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    பொதுமக்கள் கொல்லப்பட்டது தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தூத்துக்குடியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் செல்போன் இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி கலவரத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்க தலைவர் விக்ரமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,



    ‘‘தூத்துக்குடியில் நடந்த கலவரத்தில் 13 அப்பாவி மக்கள் உயிர்களை இழந்ததற்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு துப்பாக்கி சூட்டிற்கு காரணமான காவல்துறையின் அராஜக செயலை வன்மையாக கண்டிக்கிறோம். தூத்துக்குடி நகர மக்கள் 20 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிடுங்கள் என்று போராடுகிறார்கள். இதுவரை அதற்கு சரியான தீர்வு இல்லை.

    பேரிடர்களும், உயிரிழப்புகளும் நடக்க கூடாது என்றுதான் ஜெயலலிதா முதல்–அமைச்சராக இருந்தபோது ஆலையை மூடுவதற்கும், அந்த ஆலைக்கு வழங்கப்படும் மின் இணைப்பை துண்டிக்கவும் உத்தரவிட்டார். ஆனால் ஆலை நிர்வாகம் கோர்ட்டில் தடை உத்தரவு பெற்றது. ஆலையை நடத்த நிரந்தரமாக தடை போட்டு இருந்தால் இன்று 13 உயிர்களை இழந்து இருக்க மாட்டோம்.

    இந்த பிரச்சினைக்கு உடனே தீர்வு காண ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட வேண்டும். அதற்கான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசை இயக்குனர்கள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.’’

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது. #BanSterlite #SaveThoothukudi

    ×