search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "banana leaf fish recieps"

    கேளராவில் இந்த வாழை இலை மீன் வறுவல் மிகவும் பிரபலம். இன்று சூப்பரான இந்த வாழை இலை மீன் வறுவலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மீன்  - அரை கிலோ
    சின்ன வெங்காயம்  - 10
    மிளகாய் பொடி  - ஒரு ஸ்பூன்
    கரம்மசாலா பொடி   - 2 ஸ்பூன்
    பூண்டு   - 4
    இஞ்சி - சிறிது
    புதினா, கொத்தமல்லி இலை - சிறிது
    கறிவேப்பிலை  - 2 ஆர்க்கு
    தக்காளி - 2
    பச்சை மிளகாய் - 2
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய்   - 2 ஸ்பூன்



    செய்முறை :

    மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து உப்பு, மிளகாய் பொடி, கரம் மசாலா பொடி சேர்த்து நன்றாக கலந்து தனியாக வைக்க வேண்டும்.

    வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.

    அடுப்பில் வாணலியை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, பச்சைமிளகாய் போட்டு வதக்க வேண்டும்.

    சிறிது வதங்கிய உடன் பொடியாக நறுக்கிய புதினா, கொத்த மல்லி இலை தட்டிய இஞ்சி, பூண்டு இவைகளை போட்டு வதக்கி இறக்கி விட வேண்டும்.

    வாழை இலை எடுத்து நன்கு கழுவி வேண்டிய அளவு வெட்டி அதன் மேல் சிறிதளவு மசாலாவை வைத்து பரப்பி நடுவில் மீனை வைத்து மீனின் மேல் மீண்டும் மசாலாவைத் நன்றாக கலந்து இலையை மடக்கி பேக் செய்ய வேண்டும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள வாழைஇலை மீனை வைத்து இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

    சூப்பரான வாழை இலை மீன் வறுவல் ரெடி.

    குறிப்பு - மீனை மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சோத்து கலந்து 5 நிமிடம் தோசை கல்லில் போட்டு வறுத்து அதன் பின்னர் மசாலா சேர்த்து செய்யலாம். மீனை தோசை கல்லில் போட்டு வறுப்பதற்கு பதிலாக ஆவியில் வேக வைத்தும் செய்யலாம். டயட்டில் இருப்பவர்கள். வயதானவர்கள் இவ்வாறு செய்து சாப்பிடலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×