என் மலர்
நீங்கள் தேடியது "Bangladeshstampede"
வங்காளதேசம் நாட்டில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று இப்தார் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் வெயில் தாக்கம் மற்றும் தள்ளுமுள்ளுவில் சிக்கி 10 பெண்கள் உயிரிழந்தனர். #Bangladeshstampede
டாக்கா:
வங்காளதேசம் நாட்டின் சட்டோக்ராம் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் இரும்பு தொழிற்சாலை நடத்தி வருபவர்கள் இங்குள்ள ஒரு மதரசா திடலில் ஏழை மக்களுக்கு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இப்தார் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இங்கு இலவசமாக அளிக்கப்பட்ட சேலை உள்ளிட்ட பொருட்களை வாங்கி செல்வதற்கு சுமார் 35 ஆயிரம் மக்கள் திரண்டிருந்தனர்.
பலர் வெயிலின் தாக்கம் மற்றும் கூட்ட நெரிசலால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கி மயங்கி விழுந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அருகாமையில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 10 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க சட்டோக்ராம் மாவட்ட மாஜிஸ்திரேட் தலைமையில் ஐந்துநபர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. #Bangladeshstampede