என் மலர்
நீங்கள் தேடியது "bank error"
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் அரசு வங்கியில் உள்ள தங்களது கணக்குகளில் கோடிக்கணக்கான ரூபாய் விழுந்த மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள் திக்குமுக்காடினர். #Bankerror #Malappurammillionaires
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கோட்டக்கல் ஆரியவைத்திய சாலை என்ற மருத்துவ நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் மாதந்தோறும் தங்களது சம்பளத்தை ஸ்டேட் பேங்க் வங்கி கணக்கின் மூலம் பெற்று வந்தனர்.
இந்நிலையில், அவர்களில் 22 பணியாளர்களின் இந்த மாத சம்பளத்தில் ஒவ்வொருவருக்கும் 90 லட்சம் முதல் 19 கோடி ரூபாய் வரை வரவு வைக்கப்பட்டதை அறிந்து அவர்கள் மகிழ்ச்சி பெருக்கில் திக்குமுக்காடிப் போயினர்.
ஆனால், அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. கம்ப்யூட்டர் குளறுபடியால் ஏற்பட்ட இந்த தவறை உணர்ந்துகொண்ட வங்கி நிர்வாகம், தவறுதலாக பணப் பரிமாற்றம் செய்யப்பட்ட இந்த நபர்களின் வங்கி கணக்குகளை உடனடியாக முடக்கி விட்டதால் ஓரிரவு மட்டுமே நீடித்த அவர்களின் கோடீஸ்வர கனவு, மறுநாள் காலை புஸ்வாணமாகிப் போனது. #Bankerror #Malappurammillionaires