search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bapasi"

    • சிறந்த பதிப்பாளர்கள் எழுத்தாளர்களுக்கு விருதுகளை வழங்கி கெளரவித்தோம்.
    • முத்தமிழறிஞர் பதிப்பகத்தின் சார்பில் புதிதாக வெளியிடப்பட்டுள்ள 9 நூல்கள் உட்பட லட்சக்கணக்கான நூல்களைக் கொண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரியில் 47-வது புத்தகக் காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

    இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    47-வது சென்னை புத்தகக் கண்காட்சியை நந்தனம் ஒய்எம்சிஏ உடற்பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் இன்று தொடங்கி வைத்தோம்.

    தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்துச் செய்தியை எடுத்துரைத்து, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் & பதிப்பாளர் சங்கம் சார்பில் 'முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி' விருது மற்றும் தலா ரூ.1 லட்சத்தை 6 சிறந்த படைப்பாளிகளுக்கு வழங்கி வாழ்த்தினோம்.

    மேலும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் & பதிப்பாளர் சங்கம் சார்பில் சிறந்த பதிப்பாளர்கள் எழுத்தாளர்களுக்கு விருதுகளை வழங்கி கெளரவித்தோம்.

    திமுக இளைஞரணி சார்பில் தொடங்கப்பட்டுள்ள

    முத்தமிழறிஞர் பதிப்பகத்தின் சார்பில் புதிதாக வெளியிடப்பட்டுள்ள 9 நூல்கள் உட்பட லட்சக்கணக்கான நூல்களைக் கொண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

    உலகத்தமிழர்களின் அறிவுத்திருவிழாவாக நடைபெறவுள்ள சென்னை புத்தகக் காட்சி சிறக்கட்டும். புத்தக வாசிப்பு அறிவின் புதுப்புது கதவுகளை திறக்கட்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • நாதம் கீதம் புக் செல்லர்ஸ் முருகன் செயலாளராக தேர்வு.
    • நக்கீரன் பதிப்பகம் நக்கீரன் கோபால் துணைத் தலைவராகவும் (தமிழ்) தேர்வு.

    பபாசி என்று அழைக்கப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தேர்தல் இன்று மாலை மயிலாப்பூரில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

    இதில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) தலைவராக கவிதா பப்ளிகேஷன் சேது சொக்கலிங்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    நாதம் கீதம் புக் செல்லர்ஸ் முருகன் செயலாளராகவும், ஏசியன் பப்ளிகேஷன்ஸ் டபுள்யுஜே சுரேஷ் பொருளாளராகவும், நக்கீரன் பதிப்பகம் நக்கீரன் கோபால் துணைத் தலைவராகவும் (தமிழ்), சர்வோதய இலக்கியப் பண்ணை புருஷோத்தமன் துணைத் தலைவராகவும் (ஆங்கிலம்), பழனியப்பா பிரதர்ஸ் மு.துரைமாணிக்கம் இணைச் செயலாளராகவும், புலம் லோகநாதன் துணை செயலாளராகவும் (தமிழ்), ஃபார்வேடு மார்க்கெட்டிங் சாதிக் பாட்சா துணை செயலாளராகவும் (ஆங்கிலம்) தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

    செயற்குழு உறுப்பினர்களாக (தமிழ் -நான்கு பேர்) ஜலால் (இஸ்லாமிக் சொசைட்டி), செந்தில்நாதன்(பரிசல்), அருணாசலம் (அருண் பதிப்பகம்), கண்ணப்பன் (கண்ணப்பன் பதிப்பகம்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    இதேபோல், செயற்குழு உறுப்பினர்களாக (ஆங்கிலம்- நான்கு பேர்) பாலாஜி( பாலாஜி புக் செல்லர்ஸ்), சங்கர் (ஈஸ்வர் புக்ஸ்),

    ராம் குமார் ( ஆப்பிள் புக்ஸ்), அசோக் குமார் (மெட்ராஸ் புக் ஹவுஸ்) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    நிரந்தர புத்தகக் காட்சி உறுப்பினர்களாக (தமிழ்- இரண்டு பேர்) ஹரிபிரசாத் (ஆண்டாள் திரிசக்தி), மோகன் ( மயிலின் பதிப்பகம்) மற்றும் நிரந்தர புத்தகக் காட்சி உறுப்பினர் (ஆங்கிலம்-இரண்டு பேர்) சிவகுமார் (சிவா புக்ஸ்), யுவராஜ் (புக் வேர்ல்டு) ஆகியோரும் தேர்வாகியுள்ளனர்.

    ×