என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "bath soap"
- சோப்பில்லாமல் குளித்தால், குளித்தது போன்ற உணர்வே இல்லை.
- பாடிவாஷில் பி.ஹெச் அளவு மிதமானதாக இருக்கும்.
தினமும் எல்லோரும் பயன்படுத்தும், இன்றியமையாத ஒன்றாக ஆகிவிட்டது சோப். சோப்பில்லாமல் குளித்தால், குளித்தது போன்ற உணர்வே ஏற்படுவது இல்லை. அந்த அளவுக்கு சோப் நம் அன்றாட வாழ்வில் பழகிவிட்டது. தற்போது இதைப் பயன்படுத்துவதிலும், சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. இது அனைவருக்கும் ஏற்றுக்கொள்வது இல்லை. அதனால்தான் இப்போதெல்லாம் பாடிவாஷ் பயன்படுத்தச் சொல்லி அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள்.
பாடிவாஷ் ஏன் சிறந்தது?
பாடிவாஷில் உள்ள பி.ஹெச் அளவைவிட, சோப்பில் உள்ள பி.ஹெச் அளவு அதிகம். இது சிலரது சருமத்துக்கு ஒத்துக்கொள்ளாது. சருமத்தில் உள்ள இயற்கையான ஈரப்பதத்தை, அதிதீவிர ரசாயனங்கள் கலந்த சோப் நீக்கிவிடும். அதுபோல, இயற்கையாகவே சருமத்தில் சுரக்கும் எண்ணெயும் சோப் பயன்படுத்துவதால் நீங்கிவிடும். இதனால் சருமம் வறட்சியாகிவிடும்.
பாடிவாஷிலோ, பி.ஹெச் அளவு மிதமானதாக இருக்கும். சருமத்தைப் பெரிதாக பாதிக்காது; ஈரப்பதத்தை நீக்காது; சருமம், மென்மையாகவும் மிருதுவாகவும் இருக்க பாடிவாஷ் உதவும்.
எக்ஸிமா, சொரியாசிஸ், வறட்சியான சருமம் போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் சோப் பயன்படுத்தாமல், பாடிவாஷ் பயன்படுத்துவதே நல்லது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றோம். ஏனெனில், பாடிவாஷில் உள்ள மாய்ஸ்சரைசர், சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை மீட்டெடுத்துவிடும்.
பாடிவாஷ் பயன்படுத்துவதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. அதாவது, நிறைய பிராண்டுகள் பாடிவாஷுடன் லூஃபா என்கிற ஸ்க்ரப்பரைத் தருகின்றனர். இதை யாருமே பயன்படுத்தக் கூடாது. இந்த ஸ்க்ரப்பரைத் தேய்க்கத் தேய்க்க, சருமம் வெள்ளையாக மாறுவதுபோல தோன்றலாம்.
ஆனால், சருமத்தின் மேற்பரப்பில் உள்ள படிமங்களை உரித்துவிடும். சருமத்தைப் பாதுகாக்கும் படிமங்கள் நீக்கப்பட்டால், சூரியஒளி நேரடியாக சருமத்தில் படும். எனவே, ஸ்க்ரப்பரை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. இந்த நிலையில் சருமத்துக்கு நிரந்தரமான கறுப்பு படிமம் ஏற்பட்டுவிடலாம். அதை நீக்குவதும் கடினம்.
வேண்டவே வேண்டாம் ஸ்க்ரப்பர்
கடைகளில் ஆயுர்வேதிக், ஆர்கானிக் எனப் பல வகைகளில் ஸ்க்ரப்பர்கள் கிடைக்கின்றன. எந்த வகை ஸ்க்ரப்பராக இருந்தாலும், அவற்றைப் பயன்படுத்த வேண்டாம். கைகளால் தேய்த்துக் குளிக்கும் முறையையே மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றோம்.
பாடிவாஷ்… எப்படி பயன்படுத்துவது?
பிறந்த குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரும் பாடிவாஷ் பயன்படுத்தலாம். தேவையான அளவு பாடிவாஷை கப்பிலோ, கையிலோ ஊற்றிக்கொண்டு, தன் கைகளாலேயே உடல் முழுவதும் பூசி, தேய்த்து குளிக்கலாம்.
சில பாடிவாஷ்களில் சின்னச் சின்ன உருண்டைகள் போன்று சேர்ந்து வரும். அது சருமத்துக்கும் கேடு, சூழலுக்கும் கேடு. இதை அவசியம் தவிர்க்க வேண்டும். மாய்ஸ்சரைசர் அளவு அதிகமாக இருக்கும் பாடிவாஷ், வாசனை குறைவான பாடிவாஷ் ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
உலர் சருமப் பிரச்னை உள்ளவர்களுக்கு, மாய்ஸ்சரைசர் அளவு அதிகமாக இருக்க வேண்டும். அதேசமயம் வாசனை இல்லாத பாடிவாஷாகவும் இருக்க வேண்டும். 0-6 வயதுள்ள குழந்தைகளுக்கென பிரத்தியேகமாக நறுமணம் சேர்க்காத பாடிவாஷ் கிடைக்கிறது. அவற்றைப் பயன்படுத்தலாம்.
தேங்காய்ப்பால், பட்டர், ஆலிவ், கற்றாழை போன்றவை கலந்த பாடிவாஷ் சிறந்தவை.
பாடிவாஷை முகத்துக்குப் பயன்படுத்தலாமா?
சருமம், எண்ணெய் பசையானது, வறண்டது, இரண்டும் கலந்தது (காம்பினேஷன்), நார்மலானது என நான்கு வகைப்படும். முகத்தில் எண்ணெய் வழியும் பிரச்சினை இருப்போர், எண்ணெய்ப் பசை நீக்கும் ஃபேஸ் வாஷ் மற்றும் உடலுக்கு பாடிவாஷ் பயன்படுத்தலாம்.
வறண்ட சருமம், காம்பினேஷன் சருமம் இருப்பவர்கள் அவர்களது சருமத்துக்கேற்ற ஃபேஸ்வாஷ் அல்லது பாடிவாஷையேகூட முகத்துக்கும் பயன்படுத்தலாம்.
நார்மல் சருமம் கொண்டவர்கள், பாடிவாஷ் மட்டும் பயன்படுத்தினாலே போதும். விருப்பப்பட்டால் மட்டும், முகத்துக்கு ஃபேஸ்வாஷ் பயன்படுத்துங்கள்.
சோப் யார் பயன்படுத்தலாம்?
ஒரே சோப்பை குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்துவது சரியல்ல. ஒருவரிடம் இருக்கும் சருமப் பிரச்னை மற்றொருவருக்குப் பரவும் வாய்ப்பை சோப் ஏற்படுத்திவிடும். ஒரே சோப்பை அனைவரும் பயன்படுத்துவது சுகாதாரமானது கிடையாது.
ஒவ்வொருவரின் சருமம், வெவ்வேறு வகையைச் சார்ந்ததாக இருக்கும். தன்னுடைய சருமத்துக்கு எது பொருந்தும் என்பதை சரும மருத்துவரிடம் கேட்ட பிறகு சோப்பை தேர்ந்தெடுக்கலாம். சிலருக்கு முகத்தில் அதிகமாக எண்ணெய் வழியும். இவர்கள் சோப் பயன்படுத்தலாம். ஆனால், அதுவும் பி.ஹெச் அளவு 5.5 இருக்கிற சோப்பாகத் தேர்ந்தெடுப்பது நல்லது. மேலும், மருத்துவர் பரிந்துரைக்கும் சோப்பை பயன்படுத்துவது பாதுகாப்பானது.
கட்டுப்படுத்த முடியாத எண்ணெய்ப் பசை சருமத்துக்கு அதற்கேற்ற பிரத்தியேக சோப் பயன்படுத்தலாம். ஆனால், அதையும் ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம்.
- வீட்டிலேயே சோப் தயாரிக்கலாம்.
- பணிபுரிய விரும்பும் பெண்களுக்கு இது பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.
முதலில் நீங்கள் உங்கள் உடலுக்கு ஏற்ற அல்லது உங்கள் சருமத்திற்கு ஏற்ற சோப்புகளில் எந்த சோப்பை பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்று முடிவெடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் விரும்பும் சிகப்பழகையும், உடல் நறுமணத்தையும், மென்மையையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கக்கூடியதாக அந்த சோப் இருக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் தேவையான பொருட்களை சேர்த்து வீட்டிலேயே சோப் தயாரிக்கலாம். அதை நீங்கள் சந்தைப்படுத்தவும் செய்யலாம். வீட்டில் இருந்து பணிபுரிய விரும்பும் பெண்களுக்கு இது பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். முதலில் உங்கள் வீட்டில் உள்ளவர்கள், அருகில் உள்ளவர்கள் என கொடுத்து பரிசோதித்துவிட்டு பின்னர் சந்தைப்படுத்த தயார் ஆகலம். இப்படி விதவிதமான சோப்புகள் உள்ளன. வீட்டிலேயே தயாரிக்க கூடிய சில சோப் வகைகளை நாம் இந்த பதிவில் பார்க்கலாம்...
ஸ்கின் ஒயிட்டனிங் சோப்
மைசூர் பருப்பு 50 கிராம் எடுத்து மிக்சியில் பொடித்துக்கொள்ள வேண்டும். அதனுனர் ஒரு ஸ்பூன் காபி தூள், ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய், 2 விட்டமின் ஈ கேம்ஸ்யூல், ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ரெகுலர் சைஸ் டிரான்ஸ்பரண்ட் கிளிசரின் பேஸ் பார் சோப் வாங்கி அதை மெல்லிய ஸ்லைஸ்களாக துண்டாக்கி கொள்ள வேண்டும். ஸ்லைஸ் செய்த சோப் துண்டுகளை டபுள் பாய்லிங் முறையில் நன்கு சூடாக்கினால் அது உருகிவிடும். உருகிய சோப் கலவையுடன் நீங்கள் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள கலவையையும் சோப் கலவையில் சேர்த்து கலந்து அடுப்பில் இருந்து இறக்க வேண்டும். சூடு கைபொறுக்கும் பதமானதும் அதை உங்களுக்கு பிடித்த சோப் மோல்டுகளில் ஊற்றி அறைவெப்ப நிலையில் ஆறவிடவும். ஆறிய பிறகு மோல்டுகளில் இருந்து பிரித்து எடுக்கலாம்.
வேப்பிலை சோப்
ஒரு கைப்பிடி வேப்பிலைகளை எடுத்து அதனை நன்றாக கழுவி மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் இதனுடன் 2 வைட்டமின் ஈ எண்ணெய்யும் சேர்த்து கலந்து இதனை டிரான்ஸ்பரண்ட் கிளிசரின் பேஸ் பார் எடுத்து டபுள் பாய்லிங் முறையில் சூடாக்கி இந்த கலவையை அதனுடன் கலந்து சோப் மோல்டில் ஊற்றி எடுத்தால் வேப்பிலை சோப் தயார். இது நாம் வீட்டிலேயே தயாரிக்கும் சோப் என்பதால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது. வேப்பிலை சோப் உடலில் உள்ள நச்சுக்கிருமிகளை விரட்டவும், சருமத்தை பாதுகாக்கவும் பயன்படுகிறது.
கற்றாலை சோப்
சுத்தமான கற்றாலை ஜெல் ஒரு கப் எடுக்க வேண்டும். அதில் வைட்டமின் ஈ எண்ணெய் 2 கேப்ஸ்யூல் சேர்க்க வேண்டும், இதனுடன் பாதாம் ஆயில் ஒரு ஸ்பூன், தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன் மற்றும் இதனுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து க்ரீம் பதத்து கலந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை டிரான்ஸ்பரண்ட் கிளிசரின் பேஸ் பார் எடுத்து டபுள் பாய்லிங் முறையில் சூடாக்கி இந்த க்ரீமையும் அதனுடன் கலந்து சோப் மோல்டில் ஊற்றி எடுத்தால் கற்றாலை சோப் தயார். இந்த சோப் ஸ்கின் ஒயிட்டனிங்கிற்கும் பயன்படும். இதனை தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது உடலுக்கு நல்ல சைனிங் மற்றும் குளோவாக இருப்பதற்கும் உதவுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்