search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bears prediction"

    உக்ரைனில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற போகும் வேட்பாளரை ரஷிய கரடிகள் கணிக்கும் சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. #RussiaBearPrediction #UkrainianElection
    கிராஸ்னோயர்ஸ்க்:

    உலகின் பல்வேறு பகுதிகளிலும், குறிப்பாக ரஷ்யா, ஸ்வீடன், தென் கொரியா போன்ற நாடுகளில் விலங்குகளின் கணிப்பை அதிகம் நம்புகின்றனர். தேர்தல், விளையாட்டு என எதுவாக இருந்தாலும் விலங்குகளை வைத்து வெற்றிவாய்ப்பை கணிக்கின்றனர்.

    இந்த வகையில் ரஷ்யாவின் கிராஸ்னோயர்ஸ்க் நகரத்தில் விலங்குகள் பூங்காவில் பயான் என அழைக்கப்படும் கரடி தற்போது உக்ரைன் அதிபர் தேர்தலை கணித்து பிரபலமடைந்துள்ளது.

    இந்த கரடியின் முன்பு, உக்ரைன் அதிபர் தேர்தலில் போட்டியிடவிருக்கும் முன்னாள் அதிபர் யூலா டிமோஷெங்கோ, உக்ரைன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிபராக நடித்து, தற்போது போட்டியிடும்  வோலோதைமர் செலன்ஸ்கி மற்றும் உக்ரைனின் தற்போதைய அதிபர் பெட்ரோ போரோஷென்கோ ஆகியோரின் புகைப்படங்கள் கொண்ட கொடிகள் பழத்தில் வைக்கப்பட்டிருந்தன.

    இந்த கொடிகளில் முதலில் யூலாவின் கொடியின் அருகே சென்று நுகர்ந்து பார்த்த கரடி, பின்னர் அதனை தட்டி விட்டது. அதன் பின் செலன்ஸ்கி கொடியின் அருகே வந்தது. தேர்தல் கருத்துக் கணிப்பில் முண்ணனியில் இருக்கும் செலன்ஸ்கியின் பக்கம் பயானின் கவனம் திரும்பியது.



    இறுதியாக அதிபர் பெட்ரோவின் கொடியினை எடுத்து போட்டு விட்டு, அந்த பழத்தை உண்டது. இதன்மூலம் பெட்ரோ மீண்டும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

    அதே பூங்காவில் மற்றொரு பெண் கரடியான அவ்ரோராவை வைத்தும், உக்ரைன் அதிபர் தேர்தல் தொடர்பாக கணிப்பு நடத்தப்பட்டது. இதில், செலன்ஸ்கியை அந்த கரடி தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.  #RussiaBearPrediction #UkrainianElection
    ×