என் மலர்
நீங்கள் தேடியது "Beauty"
- செல்போன், கணினியை அதிக நேரம் பார்ப்பதால் கருவளையம் வரக்கூடும்.
- கருவளையத்தை எளிதாக நீக்க சித்த மருந்துகள் உதவும்.
ஆண்கள் மற்றும் பெண்களில் சிலருக்கு கண்களின் கீழும், கன்னங்களின் இரு பக்கமும் கருவளையம் காணப்படும். இதை எளிதாக நீக்க சித்த மருந்துகள் உதவும்.
ஜாதிக்காய்-1, கோஷ்டம் சிறிதளவு எடுத்துக்கொள்ளுங்கள். (நாட்டு மருந்து கடைகளில் இவை கிடைக்கும்) இவற்றை நன்றாக பொடித்து அத்துடன், 5 பாதாம் சேர்த்து தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள். இதை முகத்தில் பூசி சுமார் 2 மணி நேரம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர முகத்தில் வரும் அனைத்துவித கருப்பு, கரும்புள்ளிகள் மாறும்.
வாரம் இருமுறை சோற்றுக் கற்றாழை ஜெல்லுடன் எலுமிச்சை சாறு கலந்து, முகத்தை மசாஜ் செய்ய வேண்டும். இது முகத்திற்கு இயற்கை சூரிய எதிர்ப்பு கவசமாகத் திகழும்.
குங்குமாதிலேபம்: இது சித்த மருந்து கடைகளில் கிடைக்கும். இதை இரவு நேரத்தில் முகத்தில் பூசி தூங்கலாம். காலையில் முகம் கழுவிடலாம்.
கேரட், பப்பாளி பழம், தர்பூசணி பழம், மாதுளை, பாதாம், பிளாக்ஸ் விதைகள் சாப்பிட்டு வந்தால் முகம் வசீகரமாகும்.
- ஐஸ் கட்டியை வைத்து முகத்தில் மசாஜ் செய்வதால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் போய்விடும்.
- வெளியில் சென்று வீட்டிற்கு வந்ததும் முகத்தில் ஐஸ் கட்டி மசாஜ் செய்தால் நல்லது.
முகத்தை அழகுப்படுத்த நாம் நிறைய பேசியல் செய்கிறோம். அப்படி பேசியல் செய்யும் போது ஐஸ் கட்டிகளும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இது பல பேருக்குத் தெரியாது. பேசியல் செய்த பிறகு ஐஸ் கட்டிகளை வைத்து மசாஜ் செய்தால், முகமானது பார்க்க பிரகாசமாக, முகச்சுருக்கம் இல்லாமல் இளமையாக இருப்பது போல் இருக்கும் என்று அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் வீட்டில் பேசியல் செய்த பிறகு ஐஸ் கட்டிகளை வைத்து மசாஜை எந்த நேரத்திலும் செய்யலாம் என்றும், எவ்வாறு மசாஜ் செய்ய வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
1. முதலில் முகத்திற்கு ஏற்ற பேஸ் பேக்கை தேர்ந்தெடுத்து முகத்தில் தடவ வேண்டும். பேஸ் பேக்கானது இயற்கையானதாக இருக்க வேண்டும். வேண்டுமென்றால் கடலை மாவுடன், முட்டையின் மஞ்சள் கரு, ரோஸ் வாட்டர், எலுமிச்சை பழச்சாறு மற்றும் ஐஸ் கிரீமை போட்டு கலக்கி முகத்தில் தடவலாம். ஐந்து நிமிடத்திற்குப் பிறகு ஐஸ் கட்டியை வைத்து மசாஜ் செய்யவும். மசாஜ் செய்யும் போது நெற்றியில் இருந்து தொடங்க வேண்டும். பின் மெதுவாக கண்ணுக்கு அருகில் செய்ய வேண்டும். முக்கியமாக கண்ணுக்கு அருகில் பண்ணும் போது கவனமாக செய்ய வேண்டும். பின் அதனை ஈரமான துணியால் துடைத்து எடுத்து விடவும்.
2. மற்றொன்று சிறிது ரோஸ்மேரி ஆயில், ஆலிவ் ஆயில் மற்றும் ரோஸ் வாட்டரை ஒரு பௌலில் விட்டு, பின் ஒரு ஐஸ் கட்டியை அதில் நினைத்து முகத்தில் துடைக்க வேண்டும். இப்படி செய்தால் முகமானது மென்மையாக இருக்கும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்தால் முகத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
மேலும் எந்த பேஸ் பேக்கை முகத்திற்கு போட்டாலும், இறுதியில் ஐஸ் கட்டியை வைத்து மசாஜ் செய்யுங்கள். முகமானது பொலிவுடன் அழகாக இருக்கும்.
மறக்கக்கூடாதவை
1. மசாஜ் செய்தால் குறைந்தது 2-4 நிமிடமாவது செய்து, பின் சுத்தமான நீரால் கழுவ வேண்டும். ஐஸ் கட்டி போட்டு முகம் எரிவது போல் இருந்தாலும், சிவப்பு நிறத்தில் மாறினாலும், ஐஸ் கட்டி போடுவதை நிறுத்தவும்.
2. ஐஸ் கட்டிகள் மிகவும் குளிர்ச்சியானவை, அதை போட்டு முகத்தில் எரிச்சலோ அல்லது முகம் சிவப்பு நிறத்தில் மாறினாலோ 30-45 நிமிடத்தில் போக வேண்டும். இல்லையென்றால் அது அலர்ஜி என்று அர்த்தம். பின் அதனை செய்ய வேண்டாம்.
3. ஐஸ் கட்டி பயன்படுத்த கஷ்டப்படுபவர்கள் ஐஸ் பேக் அல்லது ஒரு சுத்தமான துணியை முகத்தில் போர்த்தி அதன் மேல் ஐஸ் கட்டியை வைத்து துடைக்கவும். துணியானது சுத்தமாகவும், மென்மையாகவும் இருக்க வேண்டும்.
4. ஐஸ் கட்டியானது முகத்திற்கு சிறந்த ஒன்று. ஐஸ் கட்டியை வைத்து முகத்தில் மசாஜ் செய்வதால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் போய்விடும். மேலும் வெளியில் சென்று வீட்டிற்கு வந்ததும் முகத்தில் ஐஸ் கட்டி வைத்து மசாஜ் செய்தால் நல்லது.
- பாதம் மற்றும் குதிகால் ஆகியவற்றில் தனி கவனம் செலுத்தி சுத்தம் செய்ய வேண்டும்.
- நகங்களைச் சுற்றியுள்ள இறந்த செல்கள், தோல்களையும் நீக்க வேண்டும்.
தினமும் முக அழகை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் பல பெண்கள், வாரத்துக்கு ஒரு முறை கூட பாதங்களின் பராமரிப்புக்கு நேரம் ஒதுக்குவது இல்லை. இவ்வாறு பாதங்களை கவனிக்காமல் இருந்தால், நாளடைவில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்று, சரும வெடிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். கைகளைப் போலவே, கால்களிலும் நகங்களை நீளமாக வளர்த்தல் கூடாது.
சாக்ஸ் மற்றும் ஷூக்களில் உள்ள அழுக்குகள், கால் நகங்களின் இடுக்குகளில் படிந்து அங்கு கிருமித்தொற்றை ஏற்படுத்தக்கூடும். எனவே தினமும் சோப்பு போட்டு கால்களைக் கழுவ வேண்டும். குளிக்கும்போது நகங்கள், பாதம் மற்றும் குதிகால் ஆகியவற்றில் தனி கவனம் செலுத்தி சுத்தம் செய்ய வேண்டும். நகங்களைச் சுற்றியுள்ள இறந்த செல்கள் மற்றும் தோல்களையும் நீக்க வேண்டும்.
இதற்கு மென்மையான பிரஷ்களை பயன்படுத்தலாம். தினமும் ஷூ அணிபவர்களின் பாதங்களில் இருந்து வெளியேறும் வியர்வை, ஷூக்களில் படிந்து, அதன்மூலம் கிருமித் தொற்று ஏற்படலாம். இதைத் தவிர்க்க வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஷூக்களை வெயிலில் நன்றாக உலர வைத்து பயன்படுத்துவது நல்லது.
பாதங்கள் ஈரப்பதமாக இருக்கும் போது எளிதில் பூஞ்சைத் தொற்று ஏற்படும். இதனால் அரிப்பு, எரிச்சல், தோல் உரிதல் மற்றும் சில சமயங்களில் வலி மிகுந்த கொப்புளங்களும் ஏற்படலாம். இவற்றைத் தவிர்ப்பதற்கு பாதங்களை உலர்வாக வைத்திருக்க வேண்டும். குறிப்பாக விரல்களுக்கு இடையே உள்ள பகுதிகளை உலர்வாக வைத்திருப்பது முக்கியம். நகங்களை சீராக வெட்டுவதற்கு ஏற்ற நகவெட்டி பயன்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு முறை நகங்களை வெட்டிய பிறகும் அதனை சுத்தம் செய்வது அவசியம். உங்களுக்கென்று தனியாக ஒரு நகவெட்டி வைத்துக்கொள்வது சிறந்தது. பாதங்களுக்கு சரியான அளவில் காலணிகளைத் தேர்ந்தெடுங்கள். முடிந்தவரை ஹீல்ஸ் போன்ற காலணிகளை அன்றாடம் உபயோகிப்பதைத் தவிர்ப்பது நல்லது. முகம் மற்றும் கைகளுக்கு மாய்ஸ்சுரைசர் உபயோகிப்பதை போல பாதங்களுக்கும் பயன்படுத்த வேண்டும்.
வறட்சியான பாதங்களில் வெடிப்பு, தோல் உரிதல் போன்ற பாதிப்புகள் உண்டாகும். எனவே பாதங்களை சுத்தப்படுத்தியதும் கோகோ வெண்ணெய் அல்லது பெட்ரோலியம் ஜெல்லி போன்ற மாய்ஸ்சுரைசர்களை பூசலாம். மாதத்திற்கு இரண்டு முறை கால்களை 15 முதல் 20 நிமிடங்கள் வரை வெதுவெதுப்பான நீரில் வைக்கவும். இது சருமத்தை மென்மையாக்கும்.
பின்பு பாதங்களை ஸ்கிரப்பர் அல்லது பியூமிஸ் கல்லைக் கொண்டு லேசாக தேய்த்து இறந்த செல்களை நீக்கவும். பிறகு நன்றாக மசித்த ஒரு வாழைப்பழத்தில், ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறு கலந்து பாதம் முழுவதும் மாஸ்க் போல போடவும். 20 நிமிடங்கள் கழித்து மிதமான சூடுள்ள தண்ணீரில் கழுவவும். பின்பு மாய்ஸ்சுரைசர் தடவவும். இதனால் பாதங்கள் மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- பாதம் வெடிப்பினை ஆரம்பித்திலேயே கவனிக்காவிட்டால், பிளவு ஆழமாக சென்று பின் மறைவது கடினமாகிவிடும்.
- இந்த ஸ்கரப்பினால் பாதங்களையும், குதிகால்களையும் நன்றாக தேயுங்கள்.
ஏனோ பெண்கள் முகம், கைகளை பராமரிப்பது போல, பாதங்களை கண்டு கொள்வது கூட இல்லை. தோற்றத்தை எத்தனைஅழகு படுத்திக் கொண்டாலும், பாதம் வெடித்து, பொலிவின்றி இருந்தால், மொத்த மெனக்கெடலும் வீண். பாதம் வெடிப்பினை ஆரம்பித்திலேயே கவனிக்காவிட்டால், பிளவு ஆழமாக சென்று பின் மறைவது கடினமாகிவிடும். ஆகவே தினமும் குளிக்கும் நேரத்தில் பாதங்களுக்கென ஒரு சில நிமிடங்கள் செலவிட்டால் போதும். வெடிப்பின்றி தடுக்கலாம். ஃப்யூமின் கல்லைனைக் கொண்டு தினமும் தேய்த்தால், பாதத்தில் இருக்கும் இறந்த செல்கள் அகன்று விடும்.
தேவையானவை :
வெள்ளை சர்க்கரை - அரை கப்
சமையல் சோடா - 1 டீஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - 1 டீஸ்பூன்
தேன்- 1 டீஸ்பூன் பாதாம் அல்லது லாவெண்டர் எண்ணெய் - 2 துளி
செய்முறை
ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை போடுங்கள். அதன் பின் ஆலிவ் எண்ணெய் ஊற்றி நன்றாக கலக்குங்கள். பின்னர் சமையல் சோடாவை போடவும். இறுதியில் தேனை சேர்த்து, கட்டிகள் இல்லாதபடி நன்றாக கலக்குங்கள். பின்னர் பாதாம் லாவெண்டர் போன்ற ஏதாவது வாசனை எண்ணெயை இதில் சேர்த்து கலக்குங்கள். பிறகு இதனை பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஸ்க்ரப் 15 நாட்களுக்கு வரும்.
சர்க்கரை பாதத்தில் உள்ள கடினத்தன்மையை நீக்கி, மிருதுவாக்கும்.
சமையல் சோடா தொற்றுக்களை அகற்றும். சருமத்தில் தங்கியிருக்கும் இறந்த செல்களை நீக்கிவிடும். சருமத்தின் அமில மற்றும் காரத் தன்மையை சமன் செய்யும்.
தேன் ஈரப்பதம் அளித்து, பாதத்தில் உள்ள வறட்சியை போக்கிவிடும்.
ஆலிவ் எண்ணெய் சருமத்திற்கு ஊட்டம் அளித்து, அழகாக்கிறது.
தினமும் குளிப்பதற்கு முன் இந்த ஸ்கரப்பினால் பாதங்களையும், குதிகால்களையும் நன்றாக தேயுங்கள். 10 நிமிடம் அப்படியே விட்டு பிறகு குளிக்கச் செல்லலாம். இது பாதம் மற்றும் கைகளுக்கு மிருதுத்தன்மை தருகிறது. கருமை அகன்று, அழுக்குங்கள் நீங்கி, வெடிப்புகள் மறைந்துவிடும்.
- பொதுவாகவே காலில் உள்ள தோல் தடிமனாக இருக்கும்.
- பாதங்களை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்வது நல்லது.
தோல் வறட்சியும், அதிக உடல் எடையும்தான் பாத வெடிப்புக்கான முக்கியமான காரணிகள். நம் உடலில் நீர்ச்சத்து குறையும்போது தோல் வறண்டு, பாதத்தில் வெடிப்பு உண்டாகும். குளிர்காலத்தில், இயல்பாகவே தோலில் வறட்சி ஏற்படும். அதனால் பாதத்தில் வெடிப்பு ஏற்படக்கூடும்.
பொதுவாகவே காலில் உள்ள தோல் தடிமனாக இருக்கும். அதற்குள் ஒரு கொழுப்பு அடுக்கு இருக்கும். உடல் எடை அதிகமாக இருந்தால், அந்த அடுக்கு இடம்மாறி தோலில் வெடிப்பு உண்டாகும்.
வெதுவெதுப்பான தண்ணீரில், தினமும் பாதத்தைக் கழுவி வந்தாலே வெடிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம். அதோடு காலையிலும் இரவிலும் பாதத்தைத் தண்ணீரில் நன்றாக கழுவினால் வெடிப்பு வரும் வாய்ப்பு குறைவு.
கற்றாழை, தேங்காய் எண்ணெய் தடவலாம். ஆனால் ஒரு சிலருக்கு தொற்று ஏற்பட்டு, புண்கள் அதிகமாகி, கடுமையான வலியுடன் வெடிப்புகள் இருக்கும். அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் லேசான வெடிப்புகள் ஏற்பட்டாலே, உடனடியாக மருத்துவரிடம் பரிசோதித்து தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பாதவெடிப்புகளுக்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால், கால் முழுவதும் தொற்று பரவுவதற்கு வாய்ப்பிருக்கிறது. தோல் முற்றிலுமாக கெட்டுவிடும்.
வெடிப்புகள் அதிகமாக உள்ளவர்கள், திறந்தநிலையில் இல்லாமல் மூடிய செருப்புகளையே அணிய வேண்டும். உடலில் நீர்ச்சத்துக் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தவிர, உடல் பருமனாக இருப்பவர்கள், எடை குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மற்றவர்களைக் காட்டிலும், சர்க்கரை நோயாளிகள் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும்.
பாத வெடிப்பு உள்ளவர்கள் மட்டுமல்ல, அனைவருமே பாதங்களை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்வது நல்லது. கால்களில் நகங்களை வெட்டும்போது முழுமையாக வெட்டிவிடாமல் லேசாக நகம் இருக்குமாறு வெட்ட வேண்டும். முழுமையாக வெட்டினால், சதைப் பகுதிக்குள் நகம் வளர்ந்து வலி உண்டாகும். அதேபோல், நகங்களுக்கு இடையே காணப்படும் இடைவெளி எப்போதும் உலர்ந்த தன்மையோடு இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். ஈரத்தன்மையோடு இருந்தால் தொற்றுகள் உண்டாக வாய்ப்பு இருக்கிறது.
- பொலிவான சருமத்தை வழங்குகிறது.
- கரும்புள்ளிகள் மறைந்து பளிச்சென்று இருக்கும்.
இந்த கேழ்வரவு ஃபேஸ் பேக் உங்களது முகத்தில் உள்ள துளைகளை ஆழமாக சுத்தப்படுத்தி, இறந்த சரும செல்களை நீக்கி, பளபளப்பான சருமத்தை கொடுக்கிறது. இது முகப்பருவை தடுக்கிறது. உங்களுக்கு பொலிவான சருமத்தை வழங்குகிறது. உங்கள் சருமத்திற்கு தீவிர ஊட்டச்சத்தை அளிக்கிறது. உங்களது சருமத்திற்கு பளபளப்பு மற்றும் பொலிவை அளிக்கிறது.
ஒரு சிறிய கிண்ணத்தில் 2 ஸ்பூன் கேழ்வரகு எடுத்து அதனை பால் ஊற்றி ஊற வைக்க வேண்டும். அரைமணிநேரம் கழித்து அதனை ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் முகத்தை பாலில் பஞ்சு தொட்டு முகத்தை துடைத்துவிட்டு இந்த ஃபேஸ்பேக்கை முகத்தில் போட்டு அந்த பேக் காய்ந்தவுடன் ஈரமான துணி கொண்டு துடைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து பளிச்சென்று இருக்கும்.
பயன்கள்
* ஸ்க்ரப் கம் ஃபேஸ் மாஸ்க்
* சருமத்தை நன்றாக எக்ஸ்ஃபோலியேட் செய்கிறது
* அதிகப்படியான எண்ணெய், அழுக்கு மற்றும் அசுத்தங்களை நீக்குகிறது
* சருமத்தை இயற்கையாக புத்துணர்ச்சியடையச் செய்கிறது
* சாதாரண மற்றும் எண்ணெய் சருமத்திற்கு ஏற்றது
- உடலில் தேவையற்ற முடியின் வளர்ச்சியை நீக்க பயன்படுத்தப்படுகிறது.
- முடி அகற்றுவதற்கு இயற்கையால் அளிக்கப்பட்ட ஒரு பரிசு.
பொன்னதரம் என்பது மஞ்சள் நிற கல் ஆகும். இது ஆயுர்வேத மருத்துவத்தில் உடலில் தேவையற்ற முடியின் வளர்ச்சியை நீக்க பயன்படுத்தப்படுகிறது. முடி அகற்றும் பயன்பாட்டிற்காக இந்த கல் நசுக்கப்பட்டு தூள் செய்யப்படுகிறது, இது முடி அகற்றுவதற்கு இயற்கையால் அளிக்கப்பட்ட ஒரு பரிசு.

உதட்டுக்கு மேல், முகம் மற்றும் கை, கால்களில் உள்ள தேவையில்லாத, வேண்டாத முடிகளை நிரத்தரமாக நீக்குவதற்கு இந்த பொன்னதரத்தை எடுத்து பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியுடன் பால் அல்லது ரோஸ்வாட்டர் சேர்த்து குழைத்து எடுத்து அதனை எங்கெல்லாம் தேவையில்லாத, வேண்டாத முடிகளை நீக்க வேண்டுமோ அந்த இடங்களில் தினமும் இரவு மற்றும் வாரத்திற்கு 2 முறை நன்றாக ஸ்க்ரப் செய்ய வேண்டும். அவ்வாறு தொடர்ந்து செய்துவரும்போது நிரந்தர தீர்வு கிடைக்கும்.

பொன்னதரத்தின் பயன்கள்
* ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில், முகத்திலுள்ள முடியை அகற்றுவதற்கான சிறந்த தீர்வாக பொன்னதரம் கருதப்படுகிறது.
* உயர் தரம் கொண்ட பொன்னதரம் தூள் உடல் மற்றும் முகம் இரண்டிலும் தேவையற்ற முடியை அகற்றுவதற்கான சிறந்த தயாரிப்பு ஆகும். இது போன்ற ஒரு சிறந்த மற்றும் இயற்கையான முடி அகற்றுதல் தயாரிப்பை நீங்கள் பயன்படுத்துவதால் ஒரு வாரத்தில் அதன் பலனைப் பெறுவீர்கள்.
* பெரும்பாலான அழகுசாதனப் பொருட்களில் ரசாயனங்கள் உள்ளன, அவை பயன்படுத்திய பிறகு வலி அல்லது ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தும். ஆனால், பொன்னதரம் ஒரு இயற்கை தயாரிப்பு, இது எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. பயன்பாட்டிற்குப் பிறகு மென்மையான மற்றும் மிருதுவான தோலை நீங்கள் உணருவீர்கள்.
* முடி நீக்கும் இயற்கை தயாரிப்பு தோல் எரிச்சலில் இருந்து உங்களை விடுதலை அளிக்கிறது.
* இது எந்த வலியையும் ஏற்படுத்தாமல் அதன் வேரிலிருந்து முடியை நீக்குகிறது.
* கரடுமுரடான முடியை கூட எந்த இடையூறும் இல்லாமல் அகற்ற பொன்னதரம் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்பாட்டில் உள்ளது.
* தேவையற்ற முடியை அகற்ற பெரும்பாலான பெண்கள் பயன்படுத்தும் ரேஸர் சில பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது, ஆனால் உண்மை என்னவென்றால், இயற்கையின் பண்புகளைக் கொண்ட இந்த பொன்னதரம் எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.
* பொன்னதரம் என்று அழைக்கப்படும் அழகான முடி அகற்றும் தூள் இயற்கையாகவே தேவையற்ற முடியை பாதுகாப்பாகவும், எளிதாகவும், மென்மையாகவும் நீக்குகிறது. இந்த நிலையான தயாரிப்பு உடலில் தேவையற்ற முடியை அகற்ற இயற்கையான மற்றும் நிரந்தர தீர்வாக இருக்கும்.
* எந்தவொரு பக்க விளைவுகளும் இல்லாமல் வீட்டிலேயே தேவையற்ற உடல் முடியை அகற்றவும், குறைந்த விலையில் தரமான வெளியீட்டை வழங்கவும் இந்த தயாரிப்பு உங்களை அனுமதிக்கிறது.
- உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
- உடலுக்கு குளிர்ச்சி அளிக்க வல்லது.
செம்பருத்தி ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைத்து, அதிகப்படியாக சேர்வதை தடுக்கும். உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொள்வதால் சோர்வு நீங்கும். காய்ந்த இதழ்களை தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து டீயாக அருந்தினால் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். உடலுக்கு குளிர்ச்சி அளிக்க வல்லது. சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
தேவையானபொருட்கள்:
செம்பருத்தி இதழ் (காய்ந்தது ) – 5 இதழ்,
தண்ணீர் 1 கப் – 150 மி.லி,
நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் – 1 ஸ்பூன்.
செய்முறை:
பாத்திரத்தில் 150 மி.லி தண்ணீரை கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் செம்பருத்தி இதழை போட்டு ௫ நிமிடங்கள் கொதித்தபின் வடிகட்டி நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து குடிக்கவும். ஒரு நாளைக்கு 2 – 3 தடவை குடிக்கலாம். காலை உணவுக்கு பின் குடிப்பது உடலுக்கு நல்லது.
மற்றொருமுறை:
ஒரு கப் தண்ணீரில் புதிதாக பூத்த 4 செம்பருத்தி பூக்களை சேர்த்து அதனுடன் நான்கு துளசி இலை, சுக்கு, ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்கவிடவும். வடிகட்டி நாட்டுச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து பருகலாம். காலை நேரத்தில் பருக உடலும் மணமும் பலப்படும்.
பலன்கள்
* மன அழுத்தம் மற்றும் வேலை பளு அதிகமாக இருக்கும் நாட்களில் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்படும். இதனால் உடலின் உள்ளுறுப்புகள் பாதிப்படையும். செம்பருத்தி டீ, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதயம் சுருங்கி விரிவதற்கு வலிமையைத் தருகிறது.
சூடான செம்பருத்தி டீ, ஒரு கப் காலை உணவு உண்பதற்கு முன் வெறும் வயிற்றில் குடிப்பதால் நல்ல பலனைக் காணலாம்.
செம்பருத்தி டீயில் தேன் கலந்து பருகுவது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. பல்வேறு ஊட்டச்சத்துகள் இந்த டீயில் உள்ளது. இந்த டீ கருப்பை கட்டிகளைக் கரைக்கும் ஆற்றல் கொண்டது.
* தற்போது ப்ளாக் டீ, க்ரீன் டீ போன்றவை உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில் உள்ளதால் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. செம்பருத்தி செடியில் இருந்து செய்யப்படும் செம்பருத்தி டீ அந்த வரிசையில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.
செம்பருத்தி பூவிற்கு, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அற்புத தன்மை உள்ளது. காய்ச்சலால் அவதிப்பட்டு அதிக சளி உள்ளவர்கள், ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை செம்பருத்தி டீயைப் பருகலாம்.
* பெண்களின் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி போன்றவற்றைப் போக்க செம்பருத்தி டீயைப் பருகலாம். கர்ப்ப காலங்களில் செம்பருத்தி டீ பருகுவதால், ஹார்மோன்கள் சமச்சீராக இருக்க உதவுகின்றன.
* கர்ப்பப்பை கட்டிகள் இருக்கும் பெண்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி இந்த செம்பருத்தி டீயை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு மிக விரைவாகவே நல்ல மாற்றங்கள் உண்டாகும்.
- சரும பராமரிப்பில் முக்கியமானது பாதங்களுக்கான பராமரிப்பு.
- மென்மையாக தேய்த்து மசாஜ் செய்யவும்.
சரும பராமரிப்பில் முக்கியமானது பாதங்களுக்கான பராமரிப்பு. பாதங்களில் ஏற்படும் வறட்சி, வெடிப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகளால் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். பாதங்களில் படியும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை அவ்வப்போது நீக்குவதன் மூலம் அவற்றை சுகாதாரமாகவும், அழகாகவும் பராமரிக்கலாம். இதற்கு உதவும் ஸ்கிரப்களை இயற்கையான பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே தயாரிக்க முடியும். அதைப்பற்றிய சில குறிப்புகள்:

எலுமிச்சை ஸ்கிரப்:
2 டீஸ்பூன் சர்க்கரை, 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 5 துளிகள் எலுமிச்சை எண்ணெய் சேர்த்து கலக்கவும், இந்த ஸ்கிரப்பை பாதங்களில் பூசி 5 நிமிடங்கள் கழித்து வட்ட இயக்கத்தில் மென்மையாக தேய்த்து மசாஜ் செய்யவும். இந்த ஸ்கிரப் வறண்ட சருமத்தை மென்மையாக்கி பாதங்களுக்கு ஈரப்பதத்தை வழங்கும்.

எப்சம் சால்ட் ஸ்கிரப்:
2 டீஸ்பூன் எப்சம் உப்பு, 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், 4 துளிகள் பெப்பர்மிண்ட் எண்ணெய் சேர்த்து கலக்கவும். இதை பாதத்தில் பூசி மசாஜ் செய்யவும். 10 நிமிடங்கள் கழித்து பாதங்களை தண்ணீரில் கழுவவும். பின்பு பாதங்களில் மாய்ஸ்சரைசர் பூசவும். பெப்பர்மிண்ட் எண்ணெய் பாத வலியை நீக்கும். தேங்காய் எண்ணெய் பாதங்களை மென்மையாக்கி ஈரப்பதம் அளிக்கும். அனைத்து வகையான சருமத்துக்கும் இது ஏற்றது.

ஆலிவ் எண்ணெய் ஸ்கிரப்:
1 டீஸ்பூன் பழுப்பு சர்க்கரை, 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய், 2 துளிகள் கெமோமில் அல்லது பெப்பர்மிண்ட் எண்ணெய், 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து, நன்றாகக் கலக்கவும். இந்த கலவையை பாதங்களில் பூசி 20 நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும். பின்பு பாதங்களை கழுவி மாய்ஸ்சரைசர் பூசவும்.

காபி ஸ்கிரப்:
2 டீஸ்பூன் காபி தூள், 2 டீஸ்பூன் சர்க்கரை, 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து, கெட்டியான பசையாக தயார் செய்யவும். அதை பாதம் முழுவதும் பூசி 15 முதல் 20 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். அதன் பிறகு பாதங்களை கழுவவும். இந்த ஸ்கிரப், பாதங்களில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கும்.

ஓட்ஸ் ஸ்கிரப்:
2 டீஸ்பூன் உப்பு, 2 டீஸ்பூன் ஓட்ஸ், 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா, 3 டீஸ்பூன் தண்ணீர் சேர்த்து, பசை போல தயாரிக்கவும். இதை பாதங்களில் பூசி 10 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். பிறகு அதை சுத்தம் செய்து விட்டு மாய்ஸ்சரைசர் பூசவும். இந்த ஸ்கிரப், சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை முழுமையாக நீக்கும்.
பால் ஸ்கிரப்:
அகலமான டப்பில் 2 கப் பாலுடன் 1 கப் வெதுவெதுப்பான தண்ணீரை கலக்கவும். அதில் பாதங்கள் மூழ்குமாறு வைக்கவும். 15 நிமிடங்களுக்கு பின்னர் பாதங்களை தண்ணீரில் கழுவவும். பின்பு 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், 3 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதை பாதங்களில் பூசி மென்மையாக மசாஜ் செய்யவும். பின்னர் பாதங்களை தண்ணீரில் கழுவவும். பாலில் உள்ள லாக்டிக் அமிலம் இறந்த சரும செல்களை அகற்றும்.
- சருமத்தை இளமையாக மாற்றக்கூடிய சிகிச்சை முறையே பேஷியல்.
- தோற்றத்தை மேம்படுத்த இந்த பேஷியல் உதவும்.
முகத்தில் படிந்திருக்கும் அழுக்குகளையும், இறந்த செல்களையும் நீக்கி, திசுக்களுக்கு தேவையான ஈரப்பதத்தை அளித்து, சருமத்தை இளமையாக மாற்றக்கூடிய அழகு சிகிச்சை முறையே பேஷியல். இதில் பல வகைகள் இருந்தாலும், தற்போது டிரெண்டிங்கில் இருப்பது 'ஹைட்ரா பேஷியல்'. சருமத்தின் நிறம், தோற்றத்தை மேம்படுத்த இந்த பேஷியல் உதவும்.
'ஹைட்ரா பேஷியல்' என்பது அதற்கென பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட கருவியின் மூலம் செய்யப்படும் அழகு சிகிச்சையாகும். இதில் எல்.இ.டி. ஒளி பயன்படுத்தப்படுகிறது. இது முகத்தில் தேங்கி இருக்கும் அழுக்குகளை ஆழமாக சுத்தம் செய்து மெருகூட்ட உதவுகிறது.

இந்த சிகிச்சையை ஒருமுறை செய்யும்போதே முகப்பொலிவு அதிகரிக்கும் என்பது இதன் கூடுதல் சிறப்பாகும். ஹைட்ரா பேஷியல் முறையில் சருமத்தை சுத்தப்படுத்துதல், முகத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை அகற்றுதல், வறண்ட சருமத்துக்கு நீரேற்றம் அளித்தல், அழகை மேம்படுத்தும் சீரத்தை (திரவ மருந்து) சருமத்துக்குள் செலுத்துதல் என ஒரு அமர்வில் முகத்திற்கு 4 வகையான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சிகிச்சை முறையில் 3 படிகள் உள்ளன. முதல் படியில், 2 வகையான நிற ஒளிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில், நீல நிற ஒளி முகத்தில் இருக்கும் பருக்களை நீக்க உதவுகிறது. சிவப்பு நிற ஒளி சருமத்தில் உள்ள சுருக்கங்களை சீரமைக்கிறது.
இரண்டாவது படியில், சருமத் துளைகளில் உள்ள அழுக்குகள் வலி இல்லாமல் உறிஞ்சப்பட்டு நீக்கப்படுகின்றன. இதில் சருமத்தை மென்மையாக்கும் வகையில், மொய்ஸ்சுரைசர்கள் மூலம் ஊட்டம் அளிக்கப்படுகிறது.
இது பிரத்யேகமான கருவியைக் கொண்டு சுழற்சி முறையில் செய்யப்படும். இதற்கு ஆன்டி-ஆக்சிடன்டுகள், சீரம் (திரவ மருந்து) ஒட்சிசனேற்றிகள், பெப்டைடுகள், ஹைலூரோனிக் அமிலம் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.
மூன்றாவது படியில் சருமத்தை பளபளக்கச் செய்யும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சைக்கு பின்னர் சருமத்தின் நிறம், தன்மை, பொலிவு ஆகியவை மேம்படும்.
ஒருமுறை இந்த பேஷியல் செய்தபின்பு, சில வாரங்கள் வரை சருமப் பொலிவு நீடித்திருக்கும். இதற்கு ஏற்ற வகையில், வீட்டில் தரமான முக கிரீம்களை பயன்படுத்த வேண்டும்.
ஹைட்ரா பேஷியலின் நன்மைகள்:
* முகப்பருக்கள், பருக்களால் முகத்தில் உண்டாகும் கருமை நிற வடுக்கள் ஆகியவற்றை நீக்கும். இறந்த செல்களை நீக்கி சருமத்தை மென்மையாகவும், பொலிவாகவும் மாற்றும்.
* சருமத்தின் நிறத்தையும், தோலின் கட்டமைப்பையும் மேம்படுத்தும். ஹைட்ரா பேஷியல் சிகிச்சை முறை தளர்வடைந்த சருமத்தை உறுதியாகவும், இறுக்கமாகவும் மாற்றும்.
* முகப்பரு வருவதற்கு காரணமான அழுக்குகள் மற்றும் அதிகப்படியான எண்ணெய் பசையை சருமத்தின் துளைகள் வழியாக சென்று சுத்தம் செய்யும். பெரிய துளைகள் இறுக்கப்படுவதால், அவற்றின் வழியாக மீண்டும் அழுக்கு மற்றும் எண்ணெய் சேராமல் தடுத்து, சருமத்தின் பொலிவை அதிகரிக்கும்.
* இந்த சிகிச்சை முறையில் சருமத்தில் செலுத்தப்படும் கிளைகோலிக் அமிலம், சாலிசிலிக் அமிலம் மற்றும் முக்கிய தாவர சாறுகளின் கலவைகள் ஆழமாக ஊடுருவி முக அழகை அதிகரிக்கும்.
- தலைமுடியை தினமும் பராமரிக்க வேண்டியது அவசியமாகும்.
- ஹேர்பின்கள் தலைமுடியின் வெளிப்புற அடுக்கை சேதப்படுத்தும்.
சருமத்தைப் போலவே தலைமுடியையும் தினமும் பராமரிக்க வேண்டியது அவசியமாகும். அலங்காரத்துக்காக கிளிப்புகள், ஹேர்பின்கள் போன்றவற்றை பயன்படுத்தும்போது தலைமுடியும். அதன் வேர்க்கால்களும் சேதமடைய நேரிடலாம். இதனால் தலைப்பகுதியில் எரிச்சல், காயம், வலி உண்டாகக் கூடும். இதுமட்டுமல்லாமல் தலைமுடி உடைவது. உதிர்வது போன்ற பிரச்சினைகளும் உண்டாகும்.
கரடுமுரடான ஹேர்பின்கள் தலைமுடியின் வெளிப்புற அடுக்கை சேதப்படுத்தும். கிளிப்புகள், கொண்டை ஊசிகள் அல்லது கொக்கிகளை தொடர்ச்சியாக பயன்படுத்தும்போது அவை தலைமுடியின் வேர்க்கால்களை வலுவிழக்கச் செய்யும். முனைப்பகுதியில் ரப்பர் பூச்சு கொண்ட ஹேர்பின்கள் மற்றும் கிளிப்புகளை பயன்படுத்துவதன் மூலம் முடியின் வேர்க்கால்கள் பாதிக்கப்படுவதை தடுக்க முடியும்.
கிளிப்புகளை இறுக்கமாக அணிவதன் காரணமாக உச்சந்தலையில் ரத்த ஓட்டம் பாதிக்கும். இதன் மூலம் கூந்தல் சேதம் அடைவதோடு, அடிக்கடி தலைவலியும் உண்டாகும். தூங்கச் செல்வதற்கு முன்பு தலைமுடியில் அணிந்திருக்கும் ஹேர்பின்கள், கொண்டை ஊசிகள் ஆகியவற்றை அகற்றுவது முக்கியமானதாகும். இல்லாவிடில் அவற்றில் உள்ள கூர்மையான பாகங்கள் கூந்தலை சேதப்படுத்தும். தலைமுடியை தளர்வாக பின்னிக்கொண்டு தூங்குவது நல்லது.
தலைமுடியை சுருளச் செய்வதற்காக கிளிப்புகள் பயன்படுத்துபவர்கள், அவற்றை ஹேர் டிரையர் மூலம் அதிகமாக சூடுபடுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அதன் அதிகப்படியான வெப்பம். தலைமுடியை சேதம் அடையச் செய்யும்.
எலாஸ்டிக் பேண்டுகள் பார்ப்பதற்கு மென்மையானவையாகத் தெரிந்தாலும், அவற்றை அணிவதன் மூலமாகவும் தலைமுடி பாதிப்படைய நேரிடலாம். எலாஸ்டிக் பேண்டுகள் அணியும்போது தலைமுடி இறுக்கமாக இழுக்கப்படும். இதன்மூலம் முடியின் வேர்க்கால்கள் சேதமடைவது, கூந்தல் உதிர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
நேரடியாக எலாஸ்டிக் பேண்டுகளை கூந்தலில் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. இவற்றை கழற்றும்போது தலைமுடி இழைகளை அறுந்து சேதப்படுத்தும். இவற்றுக்கு பதிலாக துணியின் உள் பகுதியில் வைத்து தைக்கப்பட்ட எலாஸ்டிக் பேண்டுகளை உபயோகிக்கலாம்.
தலைமுடியை இறுக்கமாக இழுத்து சீவுவதையோ, பின்னுவதையோ தவிர்க்க வேண்டும். ஹேர் பேண்டுகளை தலைமுடியில் இறுக்கமாகக் கட்டுவது. முடியின் இழைகளை சிதைத்து, பலவீனம் அடையச் செய்யும்.
- சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது.
- பாடிலோஷன் சருமத்தை மிருதுவக்குகிறது.
பாடி லோஷன் சரும வறட்சிக்காகவும் சரும பாதுகாப்பிற்காகவும் இன்று ஆண், பெண் என இரு தரப்பினரும் அதிகம் பயன்படுத்துகின்றனர். பாடி லோஷனைப் பயன்படுத்துவது சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. சருமத்தை மிருதுவக்குகிறது.
மேலும் சருமத்திற்கு வாசனையைத் தருகிறது. இதனால் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க முடியும். முழங்கை போன்ற கருமையான பகுதிகளில் தடவும்போது கருமை படிப்படியாகக் குறைகிறது. இறுதியாக சருமத்தை பொலிவடையச் செய்கிறது.
கவனிக்க வேண்டியவை
* உடல் முழுவதுமே சிலர் பாடிலோஷனை பயன்படுத்துகிறார்கள். அது நல்லதுதான். ஆனால் குறிப்பாக, சூரிய ஒளி படும் முகம், கழுத்து, கை, கால்களில் தடவ வேண்டியது அவசியம்.
* அனைத்து விதமான சருமம் கொண்டவர்களும் பாடிலோஷனைப் பயன்படுத்தலாம். குறிப்பாக வறண்ட சருமம் கொண்டவர்கள் அவசியம் பயன்படுத்துங்கள்.
* மிகவும் வறண்ட சருமம் கொண்டவர்கள் தண்ணீர் போன்று இருக்கக்கூடிய பாடிலோஷன்களை பயன்படுத்த வேண்டும்.
* எண்ணெய் சருமம் கொண்டவர்கள் க்ரீம் வகை பாடிலோஷன்களை பயன்படுத்தலாம்.
* அடுத்ததாக உங்கள் சருமத்திற்கு ஏற்றவாறு முடிந்தவரை ரசாயனம் கலக்காத தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் கொண்டு செய்யக்கூடிய பாடிலோஷன்களை பயன்படுத்துங்கள்.
* குளித்தவுடனேயே உடல் முழுவதும் பாடிலோஷனை அப்ளை செய்ய வேண்டும். ஈரப்பதம் இருக்கும்போது போட்டால் நன்றாக உறிஞ்சி உடல் வறண்டு போகாமல் தடுக்கும்.
* முதலில் கீழிருந்து அதாவது காலில் இருந்து தொடங்கி உடல் முழுவதும் அப்ளை செய்ய வேண்டும். முழங்கை, கால்களில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். வட்ட வடிவில் தேய்ப்பதே சரியான முறையாகும்.
* கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தை சரிசெய்ய பாடிலோஷன் அவசியமான ஒன்றுதான். முடிந்தவரை இயற்கை முறையில் இயற்கையான பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட லோஷன்களை பயன்படுத்தி சருமத்தை பராமரியுங்கள்.
பாடிலோஷன் நல்லதா?
பாடிலோஷன் சருமத்திற்கு பல்வேறு வகையில் நன்மை தருகிறது. சருமப் பராமரிப்பில் முக்கியமானது என்று கூறலாம். எனினும், சிலருக்கு, சில பாடிலோஷன் தயாரிப்புகள் அலர்ஜியை ஏற்படுத்தலாம். அவ்வாறு இருந்தால் தோல் மருத்துவரை அணுகி உங்களுடைய சருமத்திற்கு ஏற்றவாறு தேர்வு செய்து கொள்ளுங்கள். முடிந்தவரை ரசாயனம் அதிகம் கலக்காத தயாரிப்புகளைப் பயன்படுத்துவது நல்லது. சருமத்தை ஈரப்பதமாக வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு தேங்காய் எண்ணெயை கூட பயன்படுத்தலாம்.