search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "beauty Tipes"

    தினமும் லிப்ஸ்டிக்கை போடுவதால் உதடுகள் பொலிவிழந்து போவதோடு, உடலின் உள்ளுறுப்புகளும் பாதிப்படைய ஆரம்பமாகும். அத்தகைய லிப்ஸ்டிக்கை போடுவதால் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி பார்ப்போம்.
    இன்று பெண்கள் பலரும் தங்கள் உதடுகளை அழகாக வெளிக்காட்ட அன்றாடம் தவறாமல் லிப்ஸ்டிக் போடுவார்கள். லிப்ஸ்டிக்கை போடுவதால் உதடுகள் பொலிவிழந்து போவதோடு, உடலின் உள்ளுறுப்புகளும் பாதிப்படைய ஆரம்பமாகும். அத்தகைய லிப்ஸ்டிக்கை போடுவதால் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி பார்ப்போம்.

    லிப்ஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள்

    * லிப்ஸ்டிக்கில் குரோமியம், காட்மியம் மற்றும் மக்னீசியம் அதிக அளவில் இருப்பதால் தினமும் லிப்ஸ்டிக்கைப் பயன்படுத்தினால் உடலில் உள்ள உறுப்புகள் பாதித்து கடுமையான நோய் ஏற்பட வழிவகுக்கின்றது.

    * லிப்ஸ்டிக்கில் காட்மியம் சிறுநீரகத்தில் படிந்து அவை நாளடைவில் சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தும். மேலும் ஒரு நாளைக்கு பலமுறை லிப்ஸ்டிக் போட்டுவதினால் வயிற்றில் கட்டிகள் வளர ஆரம்பிக்கும்.

    * லிப்ஸ்டிக்கை அன்றாடம் பயன்படுத்தி வந்தால் உடலில் உள்ள நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதோடு, மூளையும் பாதிப்பிற்குள்ளாகும். இதற்கு முக்கிய காரணம் லிப்ஸ்டிக்குகளில் நரம்புகளை அழிக்கக்கூடிய ஈயம் அதிகமாக இருப்பதுதான்.

    * உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு மிக முக்கிய காரணமாக லிப்ஸ்டிக் உள்ளது. மேலும் இதனால் உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது.

    * லிப்ஸ்டிக் தயாரிப்பில் பெட்ரோகெமிக்கல்கள் பயன்படுத்தப்படுவதால் இவை நாளமில்லா சுரப்பிகளில் சீர்குலைவை ஏற்படுத்தி இனப்பெருக்கம், வளர்ச்சி, புலனாய்வு திறன் போன்றவற்றை அழிக்கும்.

    * உடலில் புற்றுநோயைத் தூண்டும் ஃபார்மால்டிஹைடு லிப்ஸ்டிக் அதிக அளவு உள்ளது. மேலும் இதனால் மூச்சுத்திணறல், இருமல், கண்கள் மற்றும் சரும எரிச்சல் போன்ற இதர பக்க விளைவுகளும் ஏற்படும்.

    * லிப்ஸ்டிக் உள்ள முக்கிய பொருளான கனிம எண்ணெய் சருமத்துளைகளை அடைக்கும் தன்மை கொண்டது, இதனை தினமும் பயன்படுத்தி வருவதினால் உதடுகளின் இயற்கை அழகு பாதிக்கும்.
    ×