என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Beautytips"

    • கோடையில் கொப்புளங்கள், வேர்க்குரு, கட்டிகள் ஏற்படுவது சகஜம் தான்.
    • தினமும் கோடையில் பழச்சாறினை அருந்துவது நல்லது.

    தினமும் இருமுறையாவது குளிக்கலாம். காலையில் குளித்த பின்பு மாலையில் தான் அடுத்த குளியல் அமைய வேண்டும். மாலைக் குளியலால் நாள் முழுவதும் ஏற்பட்ட வெயிலின் தாக்கம், அசதி, அலுப்பு குறையும். நாட்டு மருந்து கடையில் சந்தனாதி தைலம், பிருங்காமலாதி தைலம், திரிபலா தைலம் போன்ற தைல எண்ணெய்கள் கிடைக்கும். மேற்கூறிய தைல எண்ணெய்களில் ஏதாவது ஒன்றினைத் ( நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஓ.கே தான் ) தலையில் தடவிக் குளித்து வரலாம். காலையில் எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு வெயிலில் அலைந்தால் தலைவலி ஏற்படும். மாலையில் செய்யும் எண்ணெய்க் குளியலால் தூக்கம் நன்றாக வரும். பாலில் அரைத்த வெள்ளை மிளகு, தேங்காய்ப் பாலில் அரைத்த சீரகம், நீரில் அரைத்த கசகசா இவற்றையும் உடலில் தேய்த்துக் கொண்டு குளிக்கலாம்.

    கோடைக் காலத்திற்கு ஏற்ற உணவுகளான இளநீர், பனை நுங்கு, தர்ப்பூசணி, முலாம்பழம், வெள்ளரிப் பிஞ்சு போன்றவற்றை பகல் உணவுக்குப் பின் ஒன்றிரண்டு மணி நேரம் கழித்து உண்பது நல்லது. இந்த உணவுகள் கோடையில் உடலுக்கு நன்மை செய்வதால் தோலுக்கும் ( சருமம் ) மிகுந்த ஆரோக்கியத்தினை, பளபளப்பினைத் தருகின்றது. தினமும் கோடையில் பழச்சாறினை அருந்துவது நல்லது.

    தினமும் நீராவி முகருவதினைச் செய்தால் முகத்துவாரங்கள் விரிவடைந்து அழுக்குகள் வெளியேறும். உலர்ந்த சருமம் உள்ளவர்கள் 5 நிமிடமும், எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்கள் 10 நிமிடமும் கொதிக்கும் நீரிலிருந்து எழும் நீராவியை நுகருவது நல்லது.

    கோடையில் கொப்புளங்கள், வேர்க்குரு, கட்டிகள் ஏற்படுவது சகஜம் தான். வெப்பத்தால் ஏற்படும் சரும அலர்ஜி, சருமம் வறண்டு போவதற்கு காரணங்கள் எண்ணெய் தேய்த்துக் கொள்ளாதது, மாங்காய், மாம்பழம் அதிகம் உண்பது போன்றவற்றாலும் சரும பாதிப்புகள் உருவாகும். இவற்றுக்கு சீரகம், ஓமம், கார்போக அரிசி இவற்றைத் தேங்காய் பாலில் அரைத்து உடலில் தடவி சிறிது நேரம் குளித்தால் நல்லது.

    கோடையில் தோலில் அரிப்பும், சினப்பும் ஏற்பட்டால் முன்னிரவில் கசகசாவை ஸ்பூன் எடுத்து தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் அரைத்து தேங்காய்ப் பாலுடன் கலந்து தேய்த்துக் குளித்தால் அரிப்பு குறையும்.

    அருகம்புல் சாறு கொண்டு தயாரிக்கப்படும் அருகம் புல் தைலம் மேல் பூச்சாக பயன்படுத்தினால் அரிப்பு, உடல் சூடு குறையும்.

    வெயிலில் பயன்படுத்த சில முகத் தேய்ப்புகள் (Scrubs):

    1. உலர்ந்த ஆரஞ்சுத் தோல், சமைத்த ஓட்ஸ் + பாதாம் பருப்பு இவை ஒவ்வொன்றும் ஒரு கப் எடுத்து மிக்ஸியில் பொடித்து கலந்து கொள்ளவும். பொடியை சிறிது எடுத்து வெதுவெதுப்பான நீரில் குழைத்து முகத்தில் தடவி 15 நிமிடம் அல்லது அரை மணி நேரம் கழித்து கழுவவும். இதனால் அழுக்குகள் நீங்கும்.

    2. உலர்ந்த சருமத்திற்கேற்ற 'மாஸ்க்': இரண்டு தேக்கரண்டி அளவு பால் எடுத்துக் கொண்டு அத்துடன் இரண்டு மேஜைக் கரண்டி தேன் கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து கழுவவும். சம அளவு ரோஜா பன்னீர், கிளிசரின் எடுத்து இரண்டு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் Moisturiser ஆக பயன்படுத்தலாம்.

    3. எண்ணெய்ப் பசை உள்ள சருமத்திற்கு ஒரு தக்காளியிலிருந்து எடுக்கப்பட்ட கூழுடன், முல்தானி மட்டி சேர்த்துக் குழைத்து முகத்தில் தடவிக் கொள்ளவும். முகத்தில் இந்த கலவை உலர்ந்து போகும் வரை விட்டு, பிறகு குளிர்ந்த நீரால் கழுவவும்.

    4. இயல்பான ( நார்மல் ) சருமத்திற்கு மஞ்சள் பொடியை பாலில் குழைத்துத் தடவி, அரை மணி அல்லது ஒரு மணி நேரம் கழித்துத் கழுவவும். சந்தனப் பொடியுடன் ரோஜா பன்னீர் சேர்த்து குழைத்து தடவி வரவும். கருமை திட்டுக்களையும் இந்த கலவை போக்கும். இரவு முழுவதும் இந்த கலவை முகத்தில் இருக்கட்டும்.

    • கூந்தலை நேராக்க உதவும் வீட்டு வைத்திய முறைகள்.
    • போதிய ஊட்டச்சத்து இல்லாததால் தலைமுடி பாதிப்படைகிறது.

    இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக பலரும் பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். போதிய ஊட்டச்சத்து இல்லாமை பராமரிப்பு இல்லாதது போன்றவை தலைமுடி ஆரோக்கியத்தை பாதிக்கிறது.

    இதுதவிர முடியை நேராக்குவதற்கு பலரும் ஸ்ட்ரெய்ட்னரை பயன்படுத்துகின்றனர். முடியை நேராக்குவதற்கு அதிக வெப்பம் பயன்படுத்தப்படுகிறது. ஆனாலும் இது நீண்ட நாட்களுக்கு பலன் அளிக்காது.


    இயற்கையாகவே வீட்டில் நாம் பயன்படுத்தும் பொருட்களை வைத்தே தலைமுடியை ஸ்ரெய்ட்னிங் செய்யலாம். இதில் முடியை நேராக்கவும், முடி சார்ந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் வீட்டு வைத்திய முறைகள் உதவுகின்றன. அந்த வகையில் தலைமுடியை சேதப்படுத்தாமல் நீண்ட நேரான கூந்தலுக்கு உதவும் சில வீட்டு வைத்திய குறிப்புகளை பார்க்கலாம்.


    கற்றாழை ஹேர் மாஸ்க்

    தலைமுடிக்கு கற்றாழை பயன்படுத்தும் போது அது தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது. தலை முடியை மிருதுவாக்குகிறது.

    முதலில் அரை கப் வெதுவெதுப்பான எண்ணெய் மற்றும் அரை கப் கற்றாழை எடுத்துக்கொள்ள வேண்டும். இவை இரண்டையும் கலந்து தலைமுடிக்கு தேய்த்து 30 முதல் 40 நிமிடங்கள் வரை வைத்து பின்னர் கழுவலாம்.


    வாழைப்பழ ஹேர் பேக்

    வாழைப்பழம், தயிர், ஆலிவ் எண்ணெய் போன்ற 3 பொருட்கள் அனைத்துமே இயற்கை கண்டிஷனர்களால் நிரம்பியதாகும். நன்றாக பழுத்த வாழைப்பழங்களுடன் ஆலிவ் எண்ணெய், தயிர் மற்றும் தேன் கலந்து பிசைந்து பேஸ்ட் பதத்திற்கு செய்ய வேண்டும். இந்த ஹேர் மாஸ்க்கை தலைமுடியில் பூசி சிறிது நேரம் கழித்து வாஷ் செய்ய வேண்டும்.


    பால் மற்றும் தேன் ஹேர் மாஸ்க்

    பால் புரதச்சத்து நிறைந்தது என்பதால் இது தலைமுடியை மென்மையாக்குகிறது. முடியின் தண்டையும் பலப்படுத்துகிறது. பாலுடன் தேன் கலந்து தலையில் தேய்த்து சுமார் 2 அல்லது 3 மணிநேரம் கழித்து கழுவலாம்.


    முட்டை, ஆலிவ் ஆயில்:

    முட்டையும், ஆலிவ் ஆயிலும் தலைமுடிக்கு ஊட்டமளித்து நன்மைகளை அளிக்கிறது. இது தலைமுடியை நேராக்குவதற்கு உதவுகிறது. 2 முட்டை மற்றும் ஆலிவ் எண்ணெய் ஊற்றி கலந்து உச்சந்தலையில் தடவ வேண்டும். இதனை ஒரு மணிநேரம் அப்படியே வைத்திருந்து பின்னர் வாஷ் செய்யலாம். இந்த ஹேர் மாஸ்க் தலைமுடியை நேராக்கவும், மென்மையாக்கவும் உதவுகிறது.


    விளக்கெண்ணெய் ஹேர் மாஸ்க்

    முதலில் விளக்கெண்ணெயை சூடாக்கி தலையில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் இதை சுற்றி சூடான அல்லது ஈரமான துண்டை தலையில் போர்த்தி அரைமணிநேரம் கழித்து மென்மையான ஷாம்பு போட்டு வாஷ் செய்ய வேண்டும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஹார்மோன் மாற்றங்களால் முகப்பரு ஏற்படுகிறது.
    • எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு முகப்பரு அதிகமாக ஏற்படும்.

    ஹார்மோன் மாற்றங்களால் முகப்பரு ஏற்படுகிறது. அதனால் தான் பருவ வயதினருக்கு முகப்பரு பிரச்சனை அதிகமாக இருக்கும். இந்த பருவத்தில் ஆண்ட்ரோஜன் என்ற பாலின ஹார்மோன் உடலில் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது.

    இது மட்டுமில்லாமல் மோசமான வாழ்க்கை முறையாலும் முகப்பரு பிரச்சனை ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இது சருமத்தின் கீழ் பகுதியின் உள்ள செபாசியஸ் என்னும் சுரப்பியை தூண்டி அதிக எண்ணெயை உற்பத்தி செய்கிறது.


    இதனால் சருமத்தின் எண்ணெய் பசை அதிகரிக்கும். இதனுடன் தூசி, பாக்டீரியாக்கள், இறந்த செல்கள் சேர்ந்து பருக்கள் ஏற்படுகிறது. அதிக முகப்பரு காரணமாக சிலர் நிகழ்ச்சி மற்றும் கொண்டாட்டங்களுக்கு செல்வதற்கும் போட்டோ எடுப்பதற்கும் கூட அஞ்சுகின்றனர்.


    எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள்:

    சாதாரண சருமத்தை விட எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு முகப்பரு அதிகமாக ஏற்படும். ஆகையால் எண்ணெய் பசை சருமம் இருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் முகத்தை ஒரு நாளைக்கு மூன்று முறை சுத்தம் செய்ய வேண்டும்.

    முக்கியமாக வெளியில் சென்று விட்டு வந்தவுடன் கண்டிப்பாக முகம் கழுவ வேண்டும்.

    இதற்கு கற்றாழையால் செய்யப்பட்ட ஃபேஸ் வாஷ்களை பயன்படுத்தலாம். முகம் கழுவும் போது முகத்தில் சிறிது மசாஜ் செய்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவ வேண்டும். தொடர்ந்து இதை செய்யும் போது முகப்பரு ஏற்படுவது குறையும்.

    சில நேரங்களில் வெயிலில் செல்வதாலும் முகப்பரு ஏற்படலாம். எனவே பகலில் வெளியில் செல்வதற்கு முன்பு சன்ஸ்கிரீன் லோஷனை பயன்படுத்தலாம்.


    கிரீன் டீ ஃபேஸ் பேக்:

    கிரீன் டீயில் உள்ள ரசாயன கலவையில், சருமத்திற்கு நன்மை செய்யும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் ஆன்டி- மைக்ரோபியல் பண்புகள் நிறைந்துள்ளது. அவை முகத்தில் உள்ள முகப்பருக்களை நீக்குவதாக கூறப்படுகிறது.

    ஒரு கிண்ணத்தில் கிரீன் டி தூளை போட்டு அதனுடன் சிறிது தேன் கலந்து முகத்தில் போட்டு வர முகப்பரு மற்றும் தழும்புகள் மறையும்.


    ஆப்பிள் சீடர் வினிகர்:

    ஆப்பிள் சீடர் வினிகரில் முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் பண்புகள் நிறைந்துள்ளன. ஆப்பிள் சீடர் வினிகரை பஞ்சில் தொட்டு முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ, முகப்பரு பிரச்சினை தீரும்.


    கடல் உப்பு ஸ்க்ரப்:

    பருவ வயதினர் வாரந்தோறும் முகத்தை ஸ்க்ரப் செய்வது அவசியம். ஒரு கிண்ணத்தில் சிறிது நாட்டு சர்க்கரை, காபி தூள், கடல் உப்பு மற்றும் ஓட்ஸ் ஆகியவற்றை போட்டு முகத்தில் தேய்த்து வர கரும்புள்ளிகள், பருக்கள் வராமல் இருக்கும்.

    விட்டமின் ஏ அதிகம் உள்ள பழங்கள், காய்கறிகள், முட்டை, மீன் ஆகியவற்றை உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி, தியானம், நடைபயிற்சி போன்றவற்றை வாழ்க்கையில் நடைமுறைபடுத்திக்கொள்ள வேண்டும்.

    செய்யக்கூடாதவை:

    செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் அதிக நேரம் செலவிடுவதால் மன அழுத்தம் ஏற்பட்டு, முகப்பரு பிரச்சனை ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஆகையால் மின்னணு சாதனங்கள் பயன்படுத்துவதை குறைக்க வேண்டும். எண்ணெயில் பொறித்த உணவுகள், குளிர்பானங்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சரும அரிப்புக்கு தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம்.
    • நீரிழப்பைக் கட்டுப்படுத்த சருமத்தை ஈரப்பதமாக்குவது அவசியமாகும்.



    தேங்காய் எண்ணெய்

    குளிர்ந்த காலநிலையின் போது சரும அரிப்புக்கு தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். இது ஒரு இயற்கையான மென்மையாக்கலாக அமைகிறது. இது வறண்ட சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது.

    மேலும், இது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. குளிர்ந்த காலநிலையில் உணர்திறன் வாய்ந்த சருமம் உட்பட அனைத்து தோல் வகைகளுக்கும் ஏற்றதாக தேங்காய் எண்ணெய் அமைகிறது.


    அடிக்கடி ஈரப்பதமாக்குவது

    குளிர்ந்த காலநிலையில் ஏற்படும் நீரிழப்பைக் கட்டுப்படுத்த சருமத்தை ஈரப்பதமாக்குவது அவசியமாகும். இதற்கு குளித்த உடனேயே நறுமணம் இல்லாத மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் ஈரப்பதத்தை அடைக்கலாம். இவை சருமத்தை நீரேற்றமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

    அதன்படி, ஹைலூரோனிக் அமிலம், செராமைடுகள் அல்லது கிளிசரின் போன்ற உட்பொருட்களைக் கொண்ட மறைவான மாய்ஸ்சரைசர்களைப் பயன்படுத்தலாம். மாய்ஸ்சரைசர்களை பயன்படுத்துவது, சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவுகிறது.

    ஈரப்பதமூட்டிகளைப் பயன்படுத்துவது

    வீட்டிற்குள் காற்றின் ஈரப்பதத்தை அதிகரிக்க, ஈரப்பதமூட்டியைப் பயன்படுத்தலாம். மேலும், இது சரும வறட்சியைத் தடுக்க உதவுகிறது. எனவே, படுக்கையறை அல்லது வசிக்கும் இடத்தில் ஈரப்பதமூட்டியை இணைப்பது, உட்புற வெப்பத்தை பயன்படுத்தினாலும், சருமத்தின் இயற்கையான ஈரப்பதத்தை பராமரிக்க உதவுகிறது.


    ஓட்ஸ் குளியல்

    ஓட்ஸ் குளியல் இயற்கையான அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டதாகும். இது சரும எரிச்சலைத் தணிக்க உதவுகிறது. மேலும், ஓட்மீல் குளியல் சருமத்தில் அரிப்புகளை நீக்குவது மட்டுமல்லாமல், ஈரப்பத இழப்பைத் தடுக்க ஒரு பாதுகாப்பு தடையை வழங்குகிறது.

    ஆய்வு ஒன்றில், ஓட்மீல் சாறுகள் அழற்சி எதிர்ப்பு செயல்பாடுகள் மற்றும் ஆக்சிஜனேற்ற எதிர்ப்புப் பண்புகள் நிறைந்ததாகும். இது லேசான, மிதமான அரிப்பு மற்றும் வறண்ட சருமம் உள்ள பெண்களுக்கு உதவுவதாகக் கூறப்படுகிறது.


    கற்றாழை ஜெல்

    கற்றாழை ஜெல்லில் உள்ள சருமத்தை ஆற்றும் பண்புகள் வீக்கமடைந்த சருமத்தை அமைதிப்படுத்தவும், அரிப்பைக் குறைக்கவும் உதவுகிறது. ஆய்வில், கற்றாழை ஜெல்லில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளது. இது வீக்கமடைந்த அரிக்கும் தோலழற்சியை அமைதிப்படுத்துகிறது. இது அரிப்பிலிருந்து நிவாரணம் தருகிறது.


    நீரேற்றமாக இருப்பது

    குளிர்காலத்தில் சரும அரிப்புக்கான மேற்பூச்சு சிகிச்சைகள் போலவே உள்ளிருந்தும் நீரேற்றமாக இருப்பது அவசியமாகும். உடலை நீரேற்றமாக வைத்திருப்பதன் மூலம் சருமத்தின் ஈரப்பதத்தை பராமரிக்க முடியும். மேலும், இது சருமத்தின் ஒட்டுமொத்த நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துகிறது. கூடுதலாக, இது வறட்சி மற்றும் அரிப்புகளை குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது.

    ×