search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "beer bottle attack"

    • மதுபாட்டிலை மேலே எறிந்ததை தட்டி கேட்டதால் ஆத்திரம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே பாச்சல் போஸ்ட்மேன் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார் (வயது 21), கூலி தொழி லாளி. இவர் நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் மாக்கனூர் கூட்ரோடு அருகில் உள்ள கடையில் மீன் வாங்க சென்றார்.

    அப்போது கடையின் எதிரில் நின்று கொண்டு இருந்த பரிசன் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (25) என்பவர் காலி பீர் பாட்டிலை தூக்கி எரிந்த போது உதயகு மார் மீது விழுந்தது.

    இதுகுறித்து உதயகுமார் கேட்கும் போது சூர்யா மற்றும் மராட்டியன் வட்டம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (24) ஆகி யோருக்கு வாய் தகராறு ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த சூர்யா பீர்பாட்டிலால் உதயகுமார் தலை மீது தாக் கியுள்ளார் மேலும் ராஜேஷ் உதயகுமாரின் தலை மற்றும் முதுகு ஆகிய இடங்களில் கல்லால் தாக்கினார். இதில் படு காயம் அடைந்த உதயகுமார் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் காதர் கான் மற்றும் போலீசார் கட்டிட தொழிலாளிகள் சூர்யா, ராஜேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    தகராறில் வாலிபரை பீர் பாட்டிலால் குத்திய நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.
    திருச்சி:

    திருச்சி சங்கரன் பிள்ளை காலனியை சேர்ந்தவர் முகில்குமார் (வயது 20). இவரது நண்பர்கள் சசிகுமார் (29), தினேஷ் (24) மற்றும் ஆளவந்தான். இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு பேசாமல் இருந்து வந்தனர். இந் நிலையில் சசிகுமார், முகில்குமாருக்கு போன் செய்து சமாதானம் பேச அழைத்தார். இதனை தொடர்ந்து முகில்குமார் சிந்தாமணியில் உள்ள ஒரு டீக்கடைக்கு சென்றார். அங்கு நண்பர்கள் 3 பேரும் அங்கு வந்தனர். அப்போது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. 

    இதில் ஆத்திரமடைந்த தினேஷ் பீர் பாட்டிலை உடைத்து முகில்குமாரை குத்தினார். உடனே பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

    இது குறித்து கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து சசிகுமார் மற்றும் தினேஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய ஆளவந்தானை தேடி வருகின்றனர்.
    மதுரை தெற்குவாசலில் குடிபோதையில் நண்பர்களால் வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

    மதுரை:

    மதுரை கீரைத்துறை கிருதுமால் நதிக்கரை சாலையைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகன் சதீஷ்குமார் (வயது 17). திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்தார்.

    இவர் அதே பகுதியைச் சேர்ந்த முத்து என்ற சூர்யாவிடம் கடன் வாங்கினார். அதை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தவில்லை.

    இந்த நிலையில் தீபாவளி விடுமுறையில் சதீஷ்குமார் மதுரை வந்திருந்தார். அவரை முத்து போனில் தெற்குவாசலுக்கு வருமாறு அழைத்தார்.

    தெற்குவாசல் பாலத்தின் கீழ் சதீஷ்குமாருடன், நண்பர்களான முத்து ஜெயபால், அண்ணாமலை, மோகன், மதியழகன் ஆகியோர் மது குடித்தனர்.

    அப்போது கடனை முத்து திருப்பிக்கேட்டார். அதில் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம்-மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முத்து, சதீஷ்குமாரை பீர் பாட்டிலாலும், கத்தியாலும் குத்தினார்.

    இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்த சதீஷ்குமார், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். அதன்பிறகு நண்பர்கள் ஓடிவிட்டனர்.

    இது குறித்து தெற்குவாசல் போலீசுக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சதீஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய முத்து உள்ளிட்ட நண்பர்கள் 5 பேரை தேடி வருகிறார்கள்.

    புகளூரில் துணி துவைத்த போது ஏற்பட்ட தகராறில் இளம்பெண்ணைபீர் பாட்டிலால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    வேலாயுதம்பாளையம்:

     கரூர் மாவட்டம் புகளுர், ஹைஸ்கூல் மேட்டைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மனைவி ராதா (வயது 28).இவர் பழனிமுத்து நகர் அருகே அரசமர வாய்க்காலில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது  புகளுர்பழனி முத்து நகரைச் சேர்ந்த ஞானசேகரன் (23) என்பவர் அப்பகுதிக்கு வந்து ராதாவிடம் தகராறில் ஈடுபட்டார். 

    இதனால் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஞானசேகரன் அருகில் கிடந்த பீர்பாட்டிலை உடைத்து ராதாவை குத்தினார்.  இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். 

    இது குறித்து தகவல் அறிந்ததும் வேலாயுதம்பாளையம் போலீசார் விரைந்து  சென்று ராதாவை மீட்டு சிகிச்சைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். பின்னர் ராதா மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து  போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குபதிவு செய்து ஞானசேகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுவையில் பீர் குடிக்கும் தகராறில் டெம்போ டிரைவரை குத்தி கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை முத்திரையர் பாளையம் சேரன் நகர் சோழன் வீதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் சந்துரு (வயது 26). இவர் சொந்தமாக டெம்போ வைத்து ஓட்டி வருகிறார். காலையில் இருந்து மதியம் வரை சந்துரு டெம்போ ஓட்டுவார்.

    அதன் பிறகு மற்ற நேரங்களில் அவரது நண்பர் தியாகு டெம்போவை ஓட்டுவார்.

    நேற்று மதியம் சந்துரு டெம்போவை தியாகுவிடம் ஒப்படைத்து விட்டு சென்றார். நேற்று இரவு வரை அவர் வீட்டுக்கு வர வில்லை.

    எனவே, வீட்டில் உள்ளவர்கள் அவரை தேடினார்கள். இன்று காலை கதிர்காமம் தட்சிணாமூர்த்தி நகரில் தனியார் பள்ளி அருகே உள்ள மைதானத்தில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்த சந்துருவின் தாயார் தனது மகனாக இருக்கலாம் என்று கருதி அங்கு சென்று பார்த்தார். அதில் சந்துருதான் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.

    கோரிமேடு இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலையரசன், வடிவழகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தா, சூப்பிரண்டு ரச்சனாசிங் ஆகியோரும் நேரில் பார்வையிட்டனர்.

    சந்துருவுடன் கழுத்து மற்றும் முகம் பகுதியில் பீர் பாட்டிலால் சரமாரியாக குத்தப்பட்டு இருந்தது. அந்த பாட்டில் அருகே உடைந்து கிடந்தது.

    சந்துரு ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் அருகிலேயே ஸ்டாண்டு போட்டு நிறுத்தப்பட்டு இருந்தது. அதில், மாட்டு சாணத்தை கரைத்து ஆங்காங்கே தடவப்பட்டு இருந்தது.

    கைரேகை தெரிய கூடாது என்பதற்காக அவ்வாறு செய்யப்பட்டு இருந்தது தெரிந்தது. போலீசார் கொலையாளிகள் யார்? என கண்டுபிடிக்க விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது நேற்று மாலை சந்துருவுடன் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அவரது நண்பர் சங்கர் மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறினார்கள்.

    சங்கரும் டெம்போ டிரைவராக இருந்து வந்தார். இருவரும் அடிக்கடி ஒன்றாக சென்று மது குடிப்பது வழக்கம்.

    எனவே, கொலைக்கும், சங்கருக்கும் தொடர்பு இருக்கலாம் என கருதி போலீசார் அவரை அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது நான்தான் சந்துருவை கொலை செய்தேன் என்று கூறினார்.

    நேற்று மதியத்தில் இருந்தே சந்துருவும், சங்கரும் மது குடித்துள்ளனர். முதலில் வேறு ஒரு இடத்தில் 2 பாட்டில் பீர் குடித்தனர். அதன் பிறகு இரவு 5 பீர் பாட்டில்களை இருவரும் வாங்கி வந்தனர்.

    கொலை நடந்த இடத்தில் வைத்து பீரை குடித்தார்கள். இந்த பீர் முழுவதையும் சந்துருதான் காசு போட்டு வாங்கி இருந்தார். இருவருக்கும் போதை தலைக் கேறிய நிலையில் சங்கரிடம் சந்துரு நான் தான் உனக்கு அடிக்கடி மது வாங்கி தருவேன். நீ எப்போதும் ஓசியிலேயே குடிக்கிறாய் என்று கூறி உள்ளார்.

    இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த சங்கர் பீர் பாட்டிலை எடுத்து சந்துருவின் முகத்திலும், கழுத்து பகுதியிலும் சரமாரியாக குத்தினார்.

    இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சந்துரு அந்த இடத்திலேயே உயிர் இழந்தார். அவர் இறந்து விட்டதை அறிந்ததும் தடயத்தை மறைப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சாணத்தை கரைத்து தடவினார்.

    சங்கரை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகிறார்கள்.

    சந்துருவின் பூர்வீக ஊர் மரக்காணம் ஆகும். 12 வருடங்களுக்கு முன்பு அவர்கள் குடும்பத்துடன் புதுவைக்கு வந்தனர். வருகிற தை மாதம் அவரது உறவினர் பெண்ணோடு திருமணம் செய்ய ஏற்பாடு நடந்து வந்தது.

    திருமண ஏற்பாடு நடந்ததால் சமீப காலமாக குடிப்பதை குறைத்து வந்துள்ளார். ஆனாலும், நேற்று நண்பருடன் குடிக்க சென்று கடைசியில் உயிரை பறி கொடுத்துள்ளார்.

    புதுவையில் மதுக்கடையில் ஏற்பட்ட மோதலில் வாலிபருக்கு பீர் பாட்டில் குத்து விழுந்தது.

    புதுச்சேரி:

    புதுவை ரெட்டியார்பாளையம் சரவணன் நகரை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது26). சுமை தூக்கும் தொழிலாளி. இவர் நேற்று புதுவை சோனாம்பாளையத்தில் உள்ள ஒரு மதுக்கடையில் மதுகுடித்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு மதுகுடித்து கொண்டிருந்த வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்த மீனவர் ராஜேந்திரனுக்கும், பிரபாகரனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரபாகரனை தாக்கினார். மேலும் ராஜேந்திரன் பீர் பாட்டிலை எடுத்து பிரபாகரனை குத்தினார். இதில் பிரபாகரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    பின்னர் இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி ஆகியோர் வழக்குபதிவு செய்து ராஜேந்திரன் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகிறார்கள்.

    பாகூர் அருகே மதுக்கடையில் ஏற்பட்ட மோதலில் வாலிபரை பீர்பாட்டிலால் குத்திய 3 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.

    பாகூர்:

    பாகூர் அருகே குருவிநத்தம் சித்தேரியில் உள்ள ஒரு தனியார் மதுபான கடையில் மருதாடு கிராமத்தை சேர்ந்த மனநலம் பாதித்த 45 வயது பெண் துப்புரவு தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். நேற்று அந்த பெண் மதுக்கடையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட போது அங்கு மதுகுடித்து கொண்டு இருந்த குருவிநத்தம் கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் (வயது23), ரமேஷ்(25), மற்றும் சாவடியை சேர்ந்த பிரகாஷ் (28) ஆகியோர் அந்த பெண்ணிடம் தகராறு செய்தனர்.

    அப்போது அந்த பெண்ணுக்கு ஆதரவாக நத்தப்பட்டு கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் (25) என்பவர் அந்த கும்பலிடம் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த அய்யப்பன் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து ராஜசேகரை சரமாரியாக தாக்கினர். மேலும் அய்யப்பன் பீர் பாட்டிலை உடைத்து ராஜசேகரை குத்தினார்.

    இதில் படுகாயம் அடைந்த ராஜசேகர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்குபதிவு செய்து அய்யப்பன் உள்ளிட்ட 3 பேரையும் தேடி வருகிறார்கள்.

    ×