என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Belagavi"

    • பெலகாவி-மிரஜ் வழித்தடத்தில் அனைத்து ரெயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
    • 3 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெலகாவி பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் இருந்து மீரஜ் நோக்கி இரும்புதாது ஏற்றிக்கொண்டு ஒரு சரக்கு ரெயில் இன்று காலை புறப்பட்டது. இந்த ரெயில் பெலகாவி பகுதியில் தடம் புரண்டு விபத்தானது.

    இதுப்பற்றி தெரியவந்ததும் ரெயில்வே உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது தடம் புரண்ட ரெயிலை மீட்கும் பணி சுமார் 3 மணி முதல் 4 மணி நேரம் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த விபத்து காரணமாக பெலகாவி-மிரஜ் வழித்தடத்தில் அனைத்து ரெயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. சீரமைப்பு பணிகள் முடிந்ததும் மீண்டும் ரெயில் சேவை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விபத்து காரணமாக அந்த வழியாக வந்து கொண்டு இருந்த 3 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டது.

    • சுஃபியான் தற்போது பெலகாவியின் பிஐஎம்எஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான தேசாய்யை தேடி வருகின்றனர்.

    கர்நாடகாவின் பெலகாவியில் நடைபாதையில் கடை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் வியாபாரியின் மூக்கை சக வியாபாரி நறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பெலகாவி நகரின் காடே பஜாரின் காஞ்சர் கல்லி என்கிற பகுதியில் தனது கடையை அமைக்க 42 வயதான சுஃபியான் பதான் விரும்பினார். அதற்கான முயற்சியில் ஈடுபட்டபோது, மற்றொரு வியாபாரியான அயன் தேசாயுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

    இது வாக்குவாதமாக தொடங்கி பின்னர் இருவருக்கிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

    சண்டையின்போது, அயன் தேசாய் திடீரென கத்தியை எடுத்து சுஃபியானின் மூக்கை நறுக்கினார். இதில், சுஃபியான் பலத்த காயமடைந்தார். மேலும், இந்த கைகலப்பின்போது சமீர் பதான் என்ற நபரும் காயமடைந்துள்ளார்.

    இந்நிலையில், சுஃபியான் தற்போது பெலகாவியின் பிஐஎம்எஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான தேசாய்யை தேடி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிவமோகாவிற்கு பக்தர்கள் மினி பஸ்ஸில் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
    • டிரைவர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் பைடாகி பகுதியில் இன்று [ஜூன் 28] வெள்ளிக்கிழமை அதிகாலை புனே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு டிரக் வாகனம்  மீது பயணிகள் சென்ற மினி பஸ் மோதிய விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பெலகாவி மாவட்டத்தில் சாவாடத்தி பகுதியில் உள்ள எல்லம்மா கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தங்களது சொந்த ஊரான சிவமோகாவிற்கு பக்தர்கள் மினி பஸ்ஸில் சென்றுகொண்டிருந்தபோது அதிகாலை 4 மணி அளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

    இந்த விபத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில் பஸ் ஓட்டும்போது டிரைவர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    ×