என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "belgium"

    நெதர்லாந்து நாட்டில் நடைபெற்றுவரும் ஹாக்கி சாம்பியஸ் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற இந்தியா, பெல்ஜியம் இடையேயான லீக் ஆட்டம் 1-1 என டிரா ஆனது. #IndiaKaGame #INDvBEL #BELvIND #HCT2018

    பிரிடா:

    37-வது சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி நெதர்லாந்து நாட்டில் உள்ள பிரிடா நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த லீக் போட்டியில் இந்திய அணி, பெல்ஜியம் அணியை எதிர்கொண்டது. 

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் பாதிநேர ஆட்டத்தின் 15-வது நிமிடத்திற்குள் இந்திய அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் இந்திய வீரர் ஹர்மன்பிரீத் சிங் கோல் அடித்தார். ஆனால் பெல்ஜியம் அணி முதல் பாதிநேர ஆட்டத்தில் கோல் அடிக்கவில்லை. இதனால் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது.



    தொடர்ந்து நடந்த இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் பெல்ஜியம் அணியினர் தொடர்ந்து கோல் போட முயற்சித்தனர். ஆனால் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு பெல்ஜியம் அணியினரை கோல் போட விடாமல் தடுத்தனர். ஆட்டத்தில் இறுதி கட்டத்தில் 59-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணிக்கு ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதில் அந்த அணியின் லாயில் லைய்பேர்ட் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது.

    அதன்பின் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. இதனால் இந்த போட்டி 1-1 என டிராவில் முடிந்தது. முன்னதாக நடந்த மற்றொரு லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி 4-1 என அர்ஜெண்டினாவை வீழ்த்தியது. #IndiaKaGame #INDvBEL #BELvIND #HCT2018
    2-வது இடம் பிடித்தால் அரையிறுதி வரை எளிதாக இருக்கும் என்பதால் இங்கிலாந்து, பெல்ஜியம் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து தொடரில் லீக் ஆட்டங்கள் இன்றுடன் முடிவடைகிறது. இன்று ‘ஜி’ மற்றும் ‘எச்’ பிரிவில் இடம்பிடித்துள்ள 8 அணிகள் தங்கள் கடைசி லீக் ஆட்டத்தில் மோதுகின்றன.

    ‘ஜி’ பிரிவில் நடைபெறும் ஒரு ஆட்டத்தில் இங்கிலாந்து - பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகள் மூலம் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. இங்கிலாந்து 8 கோல்கள் அடித்துள்ளது. 2 கோல்கள் வாங்கியுள்ளது. பெல்ஜியமும் அதேபோன்றுதான். இரு அணிகளுக்கு இடையிலான மஞ்சள் அட்டை வாங்கிய வித்தியாசம் அடிப்படையில் இங்கிலாந்து முதல் இடம் பிடித்துள்ளன.



    இன்றைய போட்டி டிராவில் முடிந்தால் இங்கிலாந்து முதல் இடத்தில் நீடிக்க வாய்ப்புள்ளது. பெல்ஜியம் 2-வது இடம்பிடிக்கும். ஆனால் ‘ஜி’ பிரிவில் முதல் இடம் பிடித்தால் அடுத்த சுற்றுகள் கடினமாக இருக்கும். அதேவேளையில் 2-வது இடம் பிடித்தால் எளிதாக இருக்கும் வகையில் அட்டவணை உள்ளது.

    இங்கிலாந்து, பெல்ஜியத்தில் 2-வது இடம் பிடிக்கும் அணி நாக்அவுட் சுற்றில் கொலம்பியா, ஜப்பான் அல்லது செனகல் அணியை எதிர்கொள்ள வேண்டும். காலிறுதியில் சுவிட்சர்லாந்து அல்லது ஸ்வீடனை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அரையிறுதியில் ஸ்பெயின், ரஷியா, குரோசியா அல்லது டென்மார்க் ஆகியவற்றில் ஒரு அணியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.



    விளையாட்டில் விட்டுக்கொடுக்க முடியாத சூழ்நிலை உருவாகும். அதுவேளையில் எளிதாக இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டும் என்ற விருப்பமும் இருக்கும். இதனால் இரண்டு அணிகளுக்கும் இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.
    உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவுக்கு வரும் நிலையில் இன்றைய ஆட்டங்கள் குறித்து காண்போம். #FIFA2018 #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இன்றுடன் லீக் சுற்று ஆட்டம் முடிவுக்கு வருகிறது. ‘எச்’ பிரிவில் நடைபெறும் கடைசி லீக் ஆட்டம் ஒன்றில் ஜப்பான்-போலந்து அணிகள் சந்திக்கின்றன. ஜப்பான் அணி இந்த ஆட்டத்தில் டிரா செய்தாலே அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடலாம். ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட போலந்து அணி ஜப்பானை வீழ்த்தினால் அது ஆறுதல் வெற்றியாக அமையும். இதேபிரிவில் மற்றொரு ஆட்டத்தில் செனகல்-கொலம்பியா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் செனகல் டிரா கண்டாலே அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்து விட முடியும். கொலம்பியா அணியை பொறுத்தமட்டில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும்.

    ‘ஜி’ பிரிவில் நடக்கும் ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து-பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் ஏற்கனவே பெற்ற 2 வெற்றியின் மூலம் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. எனவே தனது பிரிவில் முதலிடத்தை பிடிப்பது யார்? என்பதற்கே இரு அணிகளும் மல்லுக்கட்டும். இதே பிரிவில் அரங்கேறும் பனாமா-துனிசியா இடையிலான ஆட்டம் சம்பிரதாயத்துக்கு தான். ஏற்கனவே இரு அணிகளும் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டதால் ஆறுதல் வெற்றியை சுவைக்கவே இந்த ஆட்டம் உதவும். #FIFA2018 #WorldCup2018
    ரஷியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் பெல்ஜியம் அணி 5-2 என்ற கோல் கணக்கில் துனிசியாவை வீழ்த்தியது. #FIFA2018 #WorldCup2018 #BELTUN

    மாஸ்கோ:

    உலக கோப்பை கால்பந்து தொடர் போட்டிகள் ரஷியாவில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று மூன்று லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

    முதல் லீக் ஆட்டத்தில் ஜீ பிரிவில் இடம்பிடித்துள்ள பெல்ஜியம் - துனிசியா அணிகள் மோதின. பெல்ஜியம் அணிக்கு போட்டி தொடங்கிய ஆறாவது நிமிடமே ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதில் அந்த அணியின் கேப்டன் ஈடன் ஹசார்ட் கோல் அடித்தார். அதன்பின் 16-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் ரொமெலோ லகாகு கோல் அடித்தார். இதனால் பெல்ஜியம் அணி 2-0 என முன்னிலை பெற்றது.


     பெனால்டி வாய்ப்பில் கோலடித்த ஈடன் ஹசார்ட்

    அதைத்தொடர்ந்து 18-வது நிமிடத்தில் துனிசியா வீரர் டைலன் புரோன் கோல் அடித்தார். இருப்பினும் பெல்ஜியம் அணி 2-1 என முன்னிலை வகித்தது.



    முதல் பாதிநேர ஆட்டத்தில் கூடுதலாக வழங்கப்பட்ட காயத்திற்கான நேரத்தில் பெல்ஜியம் விரர் ரொமெலோ லகாகு மீண்டும் கோல் அடித்தார். துனிசியா வீரர்கள் முதல் பாதிநேர ஆட்டத்தில் மேற்கொண்டு கோல் அடிக்காததால், இடைவேளையின் போது பெல்ஜியம் 3-1 என முன்னிலை வகித்தது.

    தொடர்ந்து இரண்டாவது பாதிநேர ஆட்டம் நடைபெற்றது. இரண்டாவது பாதிநேர ஆட்டத்திலும் பெல்ஜியம் வீரர்களே ஆதிக்கம் செலுத்தினர். 51-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் கேப்டன் ஈடன் ஹசார்ட் தனது இரண்டாவது கோலை அடித்தார். இதனால் பெல்ஜியம் அணி 4-1 என முன்னிலை பெற்றது.


    ஈடன் ஹசார்ட் மற்றும் ரொமெலோ லகாகு

    அதன்பின் துனிசியா அணியினர் தொடர்ந்து கோல் போட முயற்சித்தனர். ஆனால் அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. 90-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் மிக்கி பட்ஷுவாயி கோல் அடித்தார். இது பெல்ஜியம் அணிக்கு மேலும் முன்னிலை கொடுத்தது.


    பெல்ஜியம் வீரர் மிக்கி பட்ஷுவாயி அடித்த கோல்

    இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் கூடுதலாக வழங்கப்பட்ட காயத்திற்கான நேரத்தில் துனிசியா வீரர் வாபி காஸ்ரி கோல் அடித்தார். அதன்பின் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. இறுதியில் பெல்ஜியம் அணி 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    அடுத்ததாக நடைபெறும் லீக் போட்டிகளில் கொரியா குடியரசு - மெக்சிகோ, ஜெர்மனி - ஸ்வீடன் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #BELTUN 
    உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் பனாமாவை 3-0 என பெல்ஜியம் அணி வீழ்த்தியது. #WorldCup2018 #FIFA2018 #BELPAN

    சோச்சி:

    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஸ்வீடன் அணி, தென்கொரியாவை வீழ்த்தியது. இரண்டாவது ஆட்டத்தில் ‘ஜி’ பிரிவில் இடம்பிடித்துள்ள பெல்ஜியம் - பனாமா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

    இப்போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. இதனால் இடைவேளையின் போது ஆட்டம் 0-0 என சமனில் இருந்தது. 


    பெல்ஜியம் அணியின் டிரைஸ் மெர்டன்ஸ்

    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டம் தொடங்கிய 47-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் டிரைஸ் மெர்டன்ஸ் கோல் அடித்தார். இதனால் பெல்ஜியம் அணி 1-0 என முன்னிலை பெற்றது.

    அதைத்தொடர்ந்து பெல்ஜியம் அணியின் ரொமெலோ லகாகு 69 மற்றும் 75-வது நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்தார். இதனால் 3-0 என பெல்ஜியம் அணி முன்னிலை பெற்றது. 



    பனாமா அணியினர் இறுதிவரை மேற்கொண்டு எந்த கோலும் அடிக்கவில்லை. இதனால் பெல்ஜியம் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 3 புள்ளிகளை தட்டிச் சென்றது. அடுத்ததாக நடைபெற உள்ள லீக் போட்டியில் துனிசியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை சென்கின்றன. #WorldCup2018 #FIFA2018 #BELPAN
    உலக கோப்பை கால்பந்து பயிற்சி ஆட்டத்தில் கோஸ்டாரிகா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெல்ஜியம் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.#FIFO2018 #Belgium #CostaRica
    பிரசெல்ஸ்:

    உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நாளை மறுநாள் (14-ந் தேதி) தொடங்குகிறது. ஒரு மாதம் வரை இந்த கால்பந்து திருவிழா நடக்கிறது.

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் அணிகள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றன.

    பிரசெல்சில் நடந்த பயிற்சி ஆட்டம் ஒன்றில் பெல்ஜியம் - கோஸ்டாரிகா அணிகள் மோதின. இதில் பெல்ஜியம் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    பெல்ஜியம் தரப்பில் லுகாகு 2 கோலும் (42 மற்றும் 50-வது நிமிடங்கள்) மெர்டன்ஸ் (31-வது நிமிடம்), பட்சுயி (64-வது நிமிடம்) தலா 1 கோலும் அடித்தனர். கோஸ்டாரிகா தரப்பில் ரூயிஸ் (24-வது நிமிடம்) கோல் அடித்தார்.

    பெல்ஜியம் கடந்த 8 போட்டியில் தோல்வியை தழுவாமல் வலிமையாக இருக்கிறது. அந்த அணி உலக கோப்பையில் ‘ஜி’ பிரிவில் உள்ளது. தோல்வியை தழுவிய கோஸ்டாரிகா ‘இ’ பிரிவில் உள்ளது.

    செனகல் - தென்கொரியா மோதிய பயிற்சி ஆட்டத்தில் செனகல் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    இன்றைய ஆட்டங்களில் ஜப்பான் - பராகுவே, போலந்து - லிதுனியா அணிகள் மோதுகின்றன. #FIFO2018 #Belgium #CostaRica
    பெல்ஜியம் நாட்டின் லீய்ஜ் நகரில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு போலீசார் உயிரிழந்தனர். எதிர் தாக்குதலில் கொலையாளியும் உயிரிழந்தான்.
    புருசெல்ஸ்:

    பெல்ஜியம் நாட்டின் தலைநகரான புருசெல்ஸ் நகரில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் லீய்ஜ் என்னும் அழகிய நகரம் அமைந்துள்ளது.

    பிரெஞ்சு மொழி பேசும் மக்கள் அதிகமாக வாழும் இந்நகரின் மையப்பகுதியில் உள்ள பள்ளி அருகே (உள்நாட்டு நேரப்படி) இன்று காலை 10.30 மணியளவில் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் அவ்வழியாக சென்ற இரு போலீசாரை சுட்டுக் கொன்றான்.


    உடன்வந்த போலீசார் நடத்திய எதிர் தாக்குதலில் அந்த கொலையாளியும் சுட்டுக் கொல்லப்பட்டான். போலீசாரை கொன்ற மர்ம நபர் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். #Belgiumshooting 
    ×