என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Best Police Station"
- டி.ஐ.ஜி. முத்துசாமி ஈரோடு மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களை ஆய்வு செய்தார்
- ஈரோடு மாவட்டத்தில் சிறந்த போலீஸ் நிலையமாக அந்தியூர் போலீஸ் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது
அந்தியூர்
தமிழகத்தில் 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறந்த காவல் நிலையத்திற்கான விருது வழங்கப்படுகிறது.அதற்காக கடந்த ஆண்டு டி.ஐ.ஜி. முத்துசாமி ஈரோடு மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களை ஆய்வு செய்தார்.
அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் சிறந்த போலீஸ் நிலையமாக அந்தியூர் போலீஸ் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வின் மூலம் மாவட்டத்தில் அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு சிறந்த பெருமை கிடைத்து ள்ளது. அந்தியூர் போலீஸ் நிலைய த்தில் வழக்கு பதிவு செய்வது முதல் குற்றவாளி களை பிடிப்பது காவல் நிலையத்தை தூய்மையாக வைத்திருப்பது,
பெண் கைதிகள் குழந்தைகளுடன் வரும் சூழ்நிலை ஏற்பட்டால் அந்த குழந்தைகள் விளை யாடு வதற்கு போதிய விளையாட்டு பொம்மைகள் காவல் நிலையத்தின் மேல்மாடியில் தனியறையில் வைத்திருப்பது, காவல் நிலையம் முன் பூங்காக்கள் வைத்து பராமரித்து இரு ப்பது உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை திறன்பட செய்திருப்பதன் அடிப்ப டையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
இதனை பெறுவதற்காக அந்தியூர் போலீஸ் நிலை யத்தில் இருந்து.நிலைய பொறுப்பு அதிகாரி சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி சென்னை செல்ல உள்ளார். அவருக்கு டி.ஜி.பி. சைலேந்தி ரபாபு விருது வழங்க உள்ளார்.
- சிறந்த போலீஸ் ஸ்டேஷன்கள் தேர்வு செய்யும் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னையில் நடக்கும் குடியரசு தின விழாவில், விருது வழங்கப்படும்.
திருப்பூர் :
தமிழகத்தில் சிறந்த போலீஸ் ஸ்டேஷனாக, திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 2022ம் ஆண்டுக்கான சிறந்த போலீஸ் ஸ்டேஷன்கள் தேர்வு செய்யும் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், திருப்பூர் மாநகரில் உள்ள திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் முதலாவதாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவதாக, திருச்சி மாநகரில், போர்ட் போலீஸ் ஸ்டேஷன், மூன்றாவதாக திண்டுக்கல் மாவட்டத்தில், திண்டுக்கல் தாலுகா போலீஸ் ஸ்டேஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக டி.ஜி.பி., அலுவலக செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. சென்னையில் நடக்கும் குடியரசு தின விழாவில், விருது வழங்கப்படும். மேலும், 2020ம் ஆண்டில் நடந்த போட்டியில், திருப்பூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தற்போது, இரண்டாவது முறையாக, மாநகர போலீசில் மற்றொரு ஸ்டேஷன் தேர்வாகி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்