என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhupesh Baghel"

    சத்தீஸ்கரில் பூபேஷ் பாகெல் தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டு, 9 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். #Chhattisgarh #ChhattisgarhCabinet
    ராய்ப்பூர்:

    சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜனதா வசம் இருந்த ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. இதில், சத்தீஸ்கர் முதல்-மந்திரியாக பூபேஷ் பாகெல் கடந்த 17-ம் தேதி பதவியேற்றார். அன்றைய தினம் டிஎஸ் சிங் தேவ், தம்ரத்வாஜ் சாகு ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

    இந்நிலையில், பூபேஷ் பாகல் தனது அமைச்சரவையை இன்று விரிவாக்கம் செய்துள்ளார். ஒரு பெண் எம்எல்ஏ உள்ளிட்ட 9 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



    ராய்ப்பூரில் உள்ள போலீஸ் அணிவகுப்பு மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சர்கள் இந்தியில் உறுதிமொழி கூறி பதவியேற்றனர்.

    சத்தீஸ்கரில் ராமன் சிங் தலைமையிலான பாஜக அரசை வீழ்த்தி, 15 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Chhattisgarh #ChhattisgarhCabinet

    சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக பூபேஷ் பாகேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். #ChhattisgarhCM
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநில சட்டசபையில் உள்ள 90 தொகுதிகளுக்கு இருகட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 11-ம் தேதி எண்ணி அன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

    இந்த தேர்தலில் அம்மாநிலத்தை ஆட்சி செய்த பா.ஜ.க. கடுமையான தோல்வியை சந்தித்தது. காங்கிரஸ் வேட்பாளர்கள் 68 இடங்களில் வெற்றி பெற்றனர். 15 இடங்களை மட்டுமே பா.ஜ.க.வால் பிடிக்க முடிந்தது.



    தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் அளவுக்கு அசுர பலத்தை பெற்ற காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று ராய்ப்பூர் நகரில் நடந்தது. 

    டெல்லியில் இருந்துவந்த அக்கட்சியின் மேலிட பார்வையாளர் டி.எஸ். சிங் டியோ முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக பூபேஷ் பாகேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இதன் மூலம் அம்மாநிலத்தின் மூன்றாவது முதல் மந்திரியாகவும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டாவது முதல் மந்திரியாகவும் பூபேஷ் பாகேல் நாளை மாலை 5 மணியளவில் பதவி ஏற்கிறார். #bhupeshbaghel #Chattisgarh
    ×