என் மலர்
நீங்கள் தேடியது "Bibin Rawat"
பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்தால் காஷ்மீரில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என முப்படை தலைவர் பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
புதுடெல்லி:
கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு இந்தியா - சீன ராணுவ வீரர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, எல்லையில் இரு நாடுகளும் படைகளை குவித்தன.
அதன்பின், படைகளை விலக்கிக் கொள்வது தொடர்பாக இந்தியா- சீனா இடையே 13 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. எனினும், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாமல் உள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் பாதுகாப்புக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என முப்படைகளின் தலைவர் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், இந்தியாவின் பாதுகாப்புக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கடந்த ஆண்டு எல்லையை பாதுகாக்க விரைந்த பல்லாயிரக்கணக்கான வீரர்கள் நீண்ட காலத்திற்கு முகாமிற்கு திரும்ப முடியாத நிலை உள்ளது. நம்பிக்கையின்மை மற்றும் வளர்ந்து வரும் சந்தேகம் ஆகியவை எல்லைப் பிரச்சினையைத் தீர்க்க தடையாக உள்ளன என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்...அமித் ஷா தலைமையில் 29-வது தெற்கு மண்டல கவுன்சில் கூட்டம்