search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bicycle competition"

    • அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டிகள் நடைபெற உள்ளது.
    • வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகலினை போட்டி தொடங்கும் இடத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டுப்பிரிவால் அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இடையே மாவட்ட அளவிலான அண்ணா சைக்கிள் போட்டிகள் நடைபெற உள்ளது.

    அதன்படி நாளை காலை 7 மணிக்கு நாகை மீன்வள பொறியியல் கல்லூரியிலிருந்து தொடங்கி கங்களாஞ்சேரி ரோடு பெருஞ்சாத்தான்குடி வரை சைக்கிள் போட்டி நடத்தப்பட உள்ளது.

    போட்டிகள் 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ. தூரமும், 13 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு 10 கி.மீ. தூரமும், 15 வயதிற்குட்பட்ட மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், 15 வயதிற்குட்பட்ட மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரமும் நடத்தப்பட உள்ளது.

    3 பிரிவுகளாக நடத்தப்படும் போட்டிகளில் கலந்து கொள்ள இந்தியாவில் தயாரான சைக்கிள்கள் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும்.

    இப்போட்டியில் நாகை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

    இப்போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறுபவர்களுக்கு தலா ரூ. 5ஆயிரமும், 2-ம் இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.3 ஆயிரமும் , 3-ம் இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.2ஆயிரமும், 4 முதல் 10-ம் இடம் வரை பெறுபவர்களுக்கு தலா ரூ.250 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

    வெற்றி பெறுபவர்களுக்கான பரிசுத்தொகை அவரவர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளதால் போட்டியில் கலந்து கொள்பவர்கள்அவரவர் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகலினை போட்டி தொடங்கும் இடத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.எனவே போட்டியில் நாகை மாவட்டத்தை சேர்ந்த 13, 15 மற்றும் 17 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள் அதிக அளவில் கலந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட சைக்கிள் போட்டிகள் நடக்க இருக்கிறது.
    • மதுரையில் வருகிற 14-ந்தேதி நடக்கிறது.

    மதுரை

    முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளை யொட்டி மாணவ-மாணவி களுக்கான மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டிகள் வருகிற 14-ந்தேதி எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.

    13,15,17 வயதிற்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியே போட்டிகள் நடத்தப்படும். போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ -மாணவிகள் தங்கள் சொந்த சைக்கிள் களை கொண்டு வர வேண்டும். இந்தியாவில் தயாரிக் கப்பட்ட சாதாரண கைப் பிடி கொண்ட சைக்கிள் களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். கியர் சைக்கிள், ரேஸ் சைக்கிள்கள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படாது.

    மாணவ-மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியர் ஒப்புதல் பெற்ற வயது சான்றிதழ்கள், ஆதார் அட்டை, பள்ளி அடையாள அட்டை ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவ-மாணவிகள் வருகிற 11-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங் கில் நேரில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் ரொக்கப்பரிசும், 4 முதல் 10 வரை இடம் பிடிப்ப வர்களுக்கு ரூ.250 ஊக்கப் பரிசும் வழங்கப்படும்.

    இந்த தகவலை மதுரை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • அரசு பள்ளியில் சைக்கிள் போட்டி நடைபெற்றது.
    • சப்-இன்ஸ்பெக்டர்கள் தொடங்கி வைத்தனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வருவாய் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டி 14, 17, 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு தனித்தனியாக நடைபெற்றது. இதனை விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், அன்பழகன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த போட்டி வி.கைகாட்டி-முனியங்குறிச்சி பாதையில் ஆரம்பிக்கப்பட்டு விக்கிரமங்கலம் பஸ் நிலையம் அருகே நிறைவடைந்தது. இந்த போட்டியில் கலந்து கொண்டவர்கள் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டி சென்றனர். இதில் வெற்றி பெற்ற 12 மாணவ-மாணவிகளுக்கு விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அறிவழகன் பரிசுகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது."

    • சைக்கிள் போட்டி 3 பிரிவு களில் நடத்தப்படுகிறது. 13 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாணவர்களுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 10 கிலோ மீட்டர் தூரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • 15 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும், 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும் நிர்ண யிக்கப்பட்டு உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நெல்லை சார்பில் பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி வருகிற 15-ந் தேதி காலை 7 மணிக்கு நடத்தப்பட உள்ளது.

    இந்த போட்டி 3 பிரிவு களில் நடத்தப்படுகிறது. 13 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாணவர்களுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 10 கிலோ மீட்டர் தூரமும் நிர்ணயிக் கப்பட்டுள்ளது.

    15 வய துக்கு உட்பட்டோர் பிரிவில் மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும், 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும் நிர்ண யிக்கப்பட்டு உள்ளது.

    இந்த போட்டி பாளை யங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் தொடங்கி, டி.ஐ.ஜி. பங்களா வழியாக திருச்செந்தூர் சாலையில் நடக்க உள்ளது.

    இந்த போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் பரிசாக வழங்கப்படும். அதேபோல் 4-வது முதல் 10-வது இடம் வரை பிடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.250 வழங்கப்படும்.

    இந்த போட்டிக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. போட்டியில் பங்கேற்கும் மாணவ-மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து வயது சான்றிதழ் பெற்று கண்டிப்பாக வருகிற 13-ந்தேதிக்குள் நெல்லை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பதிவு செய்ய வேண்டும்.

    போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் இந்தியாவில் தயாரான சாதாரண கைப்பிடி கொண்ட சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    அண்ணா பிறந்தநாளையொட்டி நடைபெற்ற மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
    கரூர்:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கரூர் மாவட்டப்பிரிவின் சார்பில் முன்னாள் தமிழக முதல்- அமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவையொட்டி மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி கரூர் தாந்தோன்றிமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டிகளை கரூர் மாவட்ட கல்வி அதிகாரி கனகராசு கொடியசைத்து தொடங்கி வைத்தார். 13, 15, 17 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் மாணவ-மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன. 10, 15, 20 கிலோ மீட்டர் என 3 பிரிவுகளில் போட்டி நடைபெற்றது.

    போட்டிகள் தொடங்கியதும் மாணவ- மாணவிகள் சைக்கிளில் ஆர்வத்துடன் இலக்கை நோக்கி சென்றனர்.இந்த போட்டிகளில் மொத்தம் 78 மாணவர்களும், 62 மாணவிகளும் கலந்துகொண்டனர். அதனை தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி புண்ணியமூர்த்தி செய்திருந்தார். 
    ×