என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bigboss"

    • இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் டேனி.
    • இவர் நடித்திருந்த செங்களம் வெப் தொடர் சமீபத்தில் வெளியானது.

    தமிழ் திரையுலகில் பொல்லாதவன், பையா, ரௌத்திரம் படத்தில் நடித்த டேனி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். அதன்பின்னர் மியாவ், மரகத நாணயம், ரங்கூன், இரண்டாம் குத்து, மாநாடு உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரின் பாராட்டுக்களை பெற்றார். இவர் நடித்திருந்த செங்களம் வெப் தொடர் சமீபத்தில் வெளியானது.



    இந்நிலையில் நடிகர் டேனி, நடிப்பு பயிற்சி பட்டறையின் மூலம் பல நடிகர்களை உருவாக்க திட்டமிட்டுள்ளார். இதற்கு விஜய் சேதுபதி, ஜி.வி.பிரகாஷ், ராதா ரவி, சீமான், வெற்றிமாறன், தம்பி ராமையா உள்ளிட்ட பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து அதன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த நடிப்பு பயிற்சி பட்டறை வருகிற மே 19, 20, 21ம் தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது. டேனியின் நடிப்பு பயிற்சி பட்டறைக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    • பிக்பாஸ் தமிழ் சீசன்-6 சில தினங்களுக்கு முன்பு கோலாகலமாக தொடங்கியது.
    • விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த சீசனில் தினம் தினம் ஒரு பிரச்சனைகள் வெடிக்கின்றது.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் மகேஸ்வரி, அமுதவாணன், ரக்ஷிதா மஹாலக்ஷ்மி, ராபர்ட் மாஸ்டர், ஷாந்தி, ஜிபி முத்து, அசீம், விக்ரமன், ஜனனி, ஏடிகே, ராம் ராமசாமி, மணிகண்டன், ஷிரினா, ஆயிஷா, சிவன் கணேசன், அசல், தனலட்சுமி, நிவா, குயின்சி, கதிரவன் உள்ளிட்ட 20 நபர்கள் வீட்டின் உள்ளே சென்றனர். கடந்த வாரம் நடிகை மைனா வீட்டினுள் நுழைந்தார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தினம் தோறும் ஒவ்வொரு பிரச்சனையுடன் புரோமோக்கள் வெளியாகிறது.


    இந்நிலையில் 13-வது நாளான இன்று வெளியாகியிருக்கும் இரண்டாவது புரோமோவில் அசீமை அனைவரும் குற்றம்சாட்டுகின்றனர். பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் முன் சில சிவப்பு கார்டுகள் இருக்கின்றனர். இந்த கார்டுக்கு தகுதியானவர் இந்த வீட்டில் யார் என்பதை தேர்ந்தெடுங்கள் என்று தொகுப்பாளர் கமல்ஹாசன் கூறுகிறார்.


    அப்போது முதலில் வந்த விக்ரமன் சிவப்பு கார்டை அசீமிற்கு கொடுத்துவிட்டு ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு கண்ணியம் இருக்கு. அந்த கண்ணியத்தை அந்த மனிதருக்கு கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து என்று கூறுகிறார். தொடர்ந்து பலரும் ரெட் கார்டை அசீமிற்கு பல காரணங்களுக்காக கொடுக்கின்றனர். இதனுடன் இந்த புரோமோ முடிவடைகிறது.


    இதற்கு முந்தைய நாளில் விக்ரமனை அசீம் ஒருமையில் வாடா போடா என்று பேசியதன் மூலம் பிக்பாஸ் வீட்டினுள் பூகம்பம் வெடித்தது. இதன் வெளிப்பாடாகவே தற்போது வெளியாகியுள்ளது புரோமோ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


    • தமிழில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ்
    • விரைவில் ஆறாவது சீசன் தொடங்கப்படவுள்ளது.

    தமிழில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ளதை அடுத்து விரைவில் ஆறாவது சீசன் தொடங்கப்படவுள்ளது. மேலும் இதற்கான போட்டியாளர்கள் தேர்வும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.


    பிக்பாஸ்

    இந்த நிகழ்ச்சியின் ஐந்து சீசன்களும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதைத் தொடர்ந்து ஆறாவது சீசனும் அவரே தொகுத்து வழங்குவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் புதுமையான முயற்சியாக பொதுமக்கள் பங்கேற்பதற்கான வாய்ப்பை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வழங்கியுள்ளனர்.


    பிக்பாஸ்

    இந்த போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான தகுந்த காரணங்களுடன் கூடிய ஒரு காணொளி காட்சியை (self taped video) பதிவு செய்து அவர்கள் ( vijay.startv.com) குறிப்பிட்டுள்ள தளத்திற்கு சென்று பதிவு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பினால் பொதுமக்கள் பலரும் ஆர்வமாக தங்களது காணொளி காட்சியை பதிவு செய்து வருகின்றனர்.

    டிவி நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்து கொள்ள சம்மதமா? என்று தொலைபேசி அழைப்பு வந்ததாக சமீபத்தில் உத்தரகாண்ட் முதல்வரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சஸ்பெண்ட் ஆன பெண் ஆசிரியர் தெரிவித்துள்ளார். #BigBoss
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் முதல்வர் திரிவேந்திர ராவத் தலைமையில் பொதுமக்களிடம் குறை கேட்கும் ஜனதா தர்பார் கூட்டம் நடைபெற்றது. அப்போது, அங்கு வந்த தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பகுகுணா, பணியிட மாறுதல் கேட்டு மனு அளித்தார்.

    அந்த மனுவில், தாம் உத்தரகாசியில் ஒரு ஊரகப் பகுதி அரசுப் பள்ளியில் 25 ஆண்டுகளாக ஆசிரியராக உள்ளதாகவும், தமது கணவர் 3 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டதால் தமது பிள்ளைகள் வசிக்கும் டேராடூனுக்கு இடம் மாற்றம் செய்து தருமாறும் கோரினார்.

    ஆனால், சட்டப்படி அதற்கு வழி இல்லை என முதல்வர் கூறவே, அதனை ஏற்க மறுத்த ஆசிரியர் பகுகுணா முதல்வருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் கோபமடைந்த திரிவேந்திர ராவத் பகுகுணாவை கைது செய்யவும், பணிநீக்கம் செய்யவும் உத்தரவிட்டார். கடும் எதிர்ப்புக்கு பின் ஆசிரியர் பகுகுணாவை காவல்துறை விடுவித்துவிட்டனர். ஆனால், பணி நீக்க நடவடிக்கை தொடர்கிறது.

    இந்நிலையில், தனக்கு பிரபல பிக்பாஸ் நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து போன் வந்ததாகவும், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சம்மதமா? என அவர்கள் கேட்டதாக தெரிவித்துள்ளார். எனது குழந்தைகளை கவனித்து கொண்டு வீட்டோடு இருக்கவே விரும்புகிறேன் என கூறி அழைப்பை துண்டித்ததாக பகுகுணா கூறியுள்ளார்.
    ×