என் மலர்
நீங்கள் தேடியது "Bikini Photo"
ரஷ்ய தொழில் அதிபரான ஆன்ட்ரூ கோட்சீயை திருமணம் செய்த பிறகு படங்களில் நடித்து வரும் நடிகை ஸ்ரேயா வெளியிட்டுள்ள பிகினி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #ShriyaSaran
திருமணத்துக்கு பின் கவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தும் நடிகைகள் பட்டியலில் இணைந்து இருக்கிறார் ஸ்ரேயா.
ஸ்ரேயா தனது காதலரான ரஷ்ய தொழில் அதிபரான ஆன்ட்ரூ கோட்சீயை கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு அவர் ரஷ்யாவில் செட்டில் ஆகவில்லை.
மாறாக இந்தியாவில் தங்கி தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். கணவருடன் வெளிநாடுகளில் ஊர் சுற்றுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். தற்போது அவர் குரோஷியாவில் உள்ள ஹவார் தீவுக்கு சென்றுள்ளார்.
அங்கு தான் பிகினியில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பிங்க் நிற பிகினி புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. #ShriyaSaran