என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » bishop franco mulakkal
நீங்கள் தேடியது "bishop franco mulakkal"
கேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பிஷப் பிராங்கோ முல்லக்கல் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #KeralaNun #FrancoMulakkal
திருவனந்தபுரம்:
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பிஷப்பாக இருந்தவர் பிராங்கோ. இவரது கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த கேரள மாநிலம் கோட்டயம் குரு விலங்காடு கன்னியாஸ்திரிகள் மடத்தை சேர்ந்த ஒரு கன்னியாஸ்திரி தன்னை பிஷப் பிராங்கோ மிரட்டி கற்பழித்து விட்டதாக பரபரப்பு புகார் கூறினார்.
மேலும் பிராங்கோவை கைது செய்ய கோரி அந்த மடத்தை சேர்ந்த கன்னியாஸ்திரிகளும் போராட்டத்தில் குதித்தனர். இதைத்தொடர்ந்து பிஷப் பிராங்கோ கடந்த அக்டோபர் மாதம் 24-ந்தேதி கைது செய்யப்பட்டார்.
24 நாள் சிறைவாசத்திற்கு பிறகு பிராங்கோ தற்போது ஜாமீனில் வெளிவந்து உள்ளார். ஆனாலும் அவர் மீதான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதில் போலீசார் தாமதம் செய்வதாக கூறி மீண்டும் கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் பிஷப் பிராங்கோ மீது பாலா முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 1400 பக்கம் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில் 83 சாட்சியங்களும் இணைக்கப்பட்டு உள்ளது.
இயற்கைக்கு மாறான உறவு, சிறை வைத்து மிரட்டல் உள்பட 5 பிரிவுகளில் பிராங்கோ மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. இந்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் பிராங்கோவுக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. #KeralaNun #FrancoMulakkal

கன்னியாஸ்திரி கற்பழிப்பு புகாரை தொடர்ந்து கேரள ஐகோர்ட்டில் பிஷப்-க்கு முன்ஜாமீன் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக வக்கீல் தெரிவித்தார். #BishopFranco #keralanun
திருவனந்தபுரம்:
இதுபற்றி கோட்டயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பிஷப் பிராங்கோ முல்லக்கல்லை நாளை (19-ந்தேதி) போலீசார் முன்பு விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்று சம்மனும் அனுப்பி இருந்தனர்.
இதை ஏற்று விசாரணைக்கு ஆஜராவதாக பிஷப்பும் கூறி உள்ளார். மேலும் தனது பிஷப் பொறுப்புகளையும் அவர் மூத்த பாதிரியார் ஒருவரிடம் ஒப்படைத்துள்ளார். இந்த நிலையில் பிராங்கோ முல்லக்கல்லின் வக்கீல் விஜயாபானு கூறியதாவது:-
பிஷப் பிராங்கோ முல்லக்கல் சார்பில் கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்ய ஏற்பாடுகள் நடைபெறுகிறது. அதேசமயம் போலீஸ் விசாரணைக்கு பிஷப் ஆஜராக எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. திட்டமிட்டபடி நாளை அவர் போலீஸ் விசாரணைக்கு ஆஜராவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிஷப் மீதான புகார் பற்றி விசாரணை நடத்தி வரும் கோட்டயம் போலீஸ் அதிகாரி ஹரிசங்கர் கூறியதாவது:-
பஞ்சாப் போலீஸ் மூலம் நாளை போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று பிஷப் பிராங்கோ முல்லக்கல்லுக்கு ஏற்கனவே தகவல் கொடுத்து விட்டோம். அவர் கைது செய்யப்படுவாரா? என்பது பற்றி அவருக்கு எதிரான ஆதாரங்களை விஞ்ஞானப் பூர்வமாக ஆய்வு செய்த பின்னர்தான் முடிவு செய்ய முடியும். நாளை அவரிடம் நடைபெறும் விசாரணையின் இறுதியில்தான் இது தொடர்பான நடவடிக்கை பற்றி முடிவு செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில் பாலியல் புகார் கூறிய கன்னியாஸ்திரிக்கு ஆதரவாகவும் பிஷப்பை கைது செய்ய கோரியும் கொச்சியில் 5 கன்னியாஸ்திரிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. இன்று 10-வது நாளாக இந்த போராட்டம் தொடர்கிறது.
இந்த போராட்டத்தில் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் சகோதரி நேற்று பங்கேற்றார். அவர் பிஷப்பை கைது செய்யும் வரை தான் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
போராட்டம் நடைபெறும் இடத்தில் அவர் படுத்த நிலையில் தொடர்ந்து போராடி வருகிறார். அவரை நாட்டின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியான அன்னா மல்கோத்ரா (வயது 92) சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இன்றும் பல்வேறு அமைப்பினரும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். #BishopFranco #keralanun
×

X