என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » bjp workers
நீங்கள் தேடியது "BJP workers"
பாராளுமன்ற தேர்தலில் அத்வானி எம்.பி.யாக உள்ள காந்திநகர் தொகுதியில் அமித் ஷா போட்டியிட வேண்டும் என குஜராத்தில் உள்ள பாஜக பிரமுகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். #LSpoll #BJPworkers #AmitShah #Advani #GandhinagarLSpoll
அகமதாபாத்:
பாஜக மூத்த தலைவரான லால் கிஷன் அத்வானி குஜராத்தில் உள்ள காந்திநகர் பாராளுமன்ற தொகுதி எம்.பி.யாக பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் அமித் ஷா போட்டியிட வேண்டும் என இம்மாநிலத்தை சேர்ந்த பாஜக பிரமுகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, காந்திநகர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேஜல்பூர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகிக்கும் கிஷோர் சவுகான் கூறுகையில், ‘தேசிய தலைவரான அமித் ஷா, காந்திநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும் என எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் ஒருமனதாக விரும்புகின்றனர். அவர்களின் விருப்பத்தை மாநில தேர்தல் பார்வையாளர்களுக்கு நாங்கள் தெரிவித்திருக்கிறோம்.
காந்திநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சார்கேஜ் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக முன்னர் பதவி வகித்தவர் என்ற வகையில் இங்குள்ள அனைவரையும் அமித் ஷாவுக்கு நன்றாக தெரியும்’ என குறிப்பிட்டார்.
இதே கருத்தை வலியுறுத்திய பாஜக தேர்தல் பார்வையாளர்களில் ஒருவரான பிரிதிவிராஜ் பட்டேல், காந்திநகர் தொகுதியில் போட்டியிட இதுவரை யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை. எனவே இங்கு அமித் ஷா போட்டியிட வேண்டும் என்று நாங்கள் அனைவரும் விரும்புகிறோம் என தெரிவித்தார்.
பாஜக மூத்த தலைவர் அத்வானி 1991, 1996 நீங்கலாக காந்திநகர் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக 6 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. #LSpoll #BJPworkers #AmitShah #Advani #GandhinagarLSpoll
பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் பாரதீய ஜனதாவை தேர்ந்தெடுத்தால் வளர்ச்சிப்பணிகள் தொடரும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்தார். #BJP #NarendraModi
வாரணாசி:
பாராளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேசத்தில் உள்ள தனது வாரணாசி தொகுதிக்கு ஒரே மாதத்தில் 2-வது முறையாக நேற்று சென்றார்.
அங்கு அவர் 15, 16-ம் நூற்றாண்டில் பிரபலமாக விளங்கிய பக்தி இயக்கத்தை சேர்ந்த குரு ரவிதாஸ் பிறப்பிட வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். நாட்டிலேயே முதன்முதலாக டீசல் என்ஜினை மின்சார என்ஜினாக மாற்றி இயக்கப்படுகிற ரெயிலை அவர் பச்சைக்கொடியசைத்து தொடங்கியும் வைத்தார்.
இதையொட்டி முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் முன்னிலையில் நடந்த இந்த விழாவிலும், தொடர்ந்து ஒரு பொதுக்கூட்டத்திலும் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் கடந்த 2016-ம் ஆண்டு இதே நாளில் இங்கு வந்தேன். குருவின் ஆசிகளைப் பெற்றேன். நாம் அனைவரும் குரு ரவிதாஸ் காட்டிய பாதையை பின்பற்றினால், நமது சமூகத்தில் பெருமளவுக்கு ஊழல் இருக்காது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இது நடக்காமல் போய் விட்டது.
குரு ரவிதாஸ், சாதியின் அடிப்படையில் எந்த விதமான பாகுபாடும் இருக்கக்கூடாது என்று வலியுறுத்தினார். சாதிய பாகுபாடு இருக்கிறவரையில், மக்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள முடியாது. சமூக நல்லிணக்கம் சாத்தியப்படாது. சமத்துவம் உறுதி செய்ய முடியாது.
தங்களது சுய நலத்துக்காக சாதி பாகுபாடுகளை உருவாக்கி, அதை மேம்படுத்துகிறவர்களை மக்கள் அடையாளம் காட்ட வேண்டும்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக சாதி பாகுபாட்டினை இப்போது வரை சமூகத்தில் இருந்து ஒழித்துக்கட்ட முடியவில்லை. புதிய இந்தியா இதில் மாற்றத்தைக் காணப்போகிறது. இளைஞர்களுக்கு உதவப்போகிறது. ஏழை மக்களுக்கு நாங்கள் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளோம். இதன் மூலம் ஒடுக்கப்பட்டவர்கள் கண்ணியமாக வாழ வழி பிறந்துள்ளது.
ஊழல்வாதிகளை எங்கள் அரசு தண்டிக்கிறது. நேர்மையானவர்களுக்கு பரிசு அளிக்கிறது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் பலம் வாய்ந்த எங்கள் அரசை தேர்ந்தெடுத்தீர்கள். அதன் காரணமாக இந்த நாடு முன்னேற்றத்தை கண்டது. நீங்களும் சமூக, பொருளாதார நிலையில் முன்னேறுவதற்கு பல திட்டங்களைப் பெற்று பலன்அடைந்தீர்கள். அதே போன்று வரக்கூடிய தேர்தலிலும் நீங்கள் செயல்பட வேண்டும். பாரதீய ஜனதாவை தேர்ந்தெடுத்தால், வளர்ச்சிப்பணிகள் தொடரும்.
காங்கிரஸ் ஆட்சியின்போது கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறியது போன்று நடைபெறவில்லை. அது போலியானது என்பதை மக்கள் அம்பலப்படுத்த வேண்டும்.
இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்துக்கு, வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் நல்லதொரு உதாரணம். ஆனால் அதையும் சிலர் விமர்சிப்பது வேதனை அளிக்கிறது.
இப்படிப்பட்டவர்களுக்கு (எதிர்க்கட்சிகளுக்கு) மக்கள் நாடாளுமன்ற தேர்தலில் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜனதா தொண்டர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது அவர் எதிர்க்கட்சி தலைவர்களை பொய் எந்திரங்கள் என வர்ணித்தார். #BJP #NarendraModi
புதுடெல்லி:
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதால் பிரதமர் நரேந்திர மோடி, பாரதீய ஜனதா கட்சி தொண்டர்களுடன் நேரடியாகவும், காணொலி காட்சி மூலமாகவும் கலந்துரையாடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
அந்த வகையில் அவர் 5 நாடாளுமன்ற தொகுதிகளை சேர்ந்த பாரதீய ஜனதா கட்சி தொண்டர்களுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது அவர், கட்சித் தொண்டர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அவரிடம் ஒரு தொண்டர், “நீங்கள் எப்போதெல்லாம் இந்தியாவை காப்பதற்கு நடவடிக்கை எடுக்கிறீர்களோ, அப்போதெல்லாம் கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் கட்சிகள் ஒன்று சேர்கின்றனவே, இதற்கு என்ன சொல்கிறீர்கள்?” என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பிரதமர் மோடி பதில் அளிக்கையில், “எதிர்க்கட்சிகளின் கூட்டணி பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களின் எதிர்மறையான வேலைகளால், நாட்டில் நடைபெறுகிற நற்பணிகளை அங்கீகரிக்காத தன்மையினால், ராணுவத்தை பற்றி தவறாக பேசுவதால் மக்கள் அவர்களை வெறுக்கிறார்கள்” என்று கூறினார்.
மற்றொரு கேள்விக்கு அவர் பதில் அளித்தபோது, “சில எதிர்க்கட்சி தலைவர்கள் பொய் சொல்லும் எந்திரங்களாக உள்ளனர். அவர்கள் வாயைத் திறந்தால் ஏ.கே.47 ரக துப்பாக்கிகளைப் போல பொய்களை சுடுகிறார்கள். ஆனால் நீங்கள் மக்களிடம் போய் உண்மையான தகவல்களை சொல்லி, அவர்களின் பொய்களை கலையுங்கள்” என்று குறிப்பிட்டார்.
சில எதிர்க்கட்சி தலைவர்கள் ஒரே நாளிலே பல மாதிரி வேஷம் போடுகிறார்கள் எனவும் பிரதமர் மோடி சாடினார்.
“அதே நேரத்தில் மக்கள் உண்மைகளை அறிவார்கள். நமது கட்சித் தொண்டர்களில் ஒருவர், 100 பேரிடம் போய்ப் பேசினால், அவரது நம்பிக்கை பல மடங்கு வளரும்” என குறிப்பிட்டார்.
மத்திய அரசு, பாரதீய ஜனதா கட்சி ஆளுகிற மாநில அரசுகள் பற்றியும் பிரதமர் மோடி குறிப்பிடத் தவறவில்லை.
இதுபற்றி அவர் கூற வந்தபோது, “நாங்கள் எல்லோரும் நாட்டின் தலைவிதியை மாற்றுவதற்காக உழைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் எதிர்க்கட்சியோ குடும்ப ஆட்சியைப் பற்றித்தான் கவலை கொள்கிறது. எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்று சேருகிறார்கள் என்றால் அவர்கள் தங்கள் மகன்களுக்கு எதையாவது விட்டுச்செல்ல வேண்டும் என்று விரும்புகிறார்கள்” என கூறினார்.

திருவனந்தபுரத்தில் உள்ள சசிதரூரின் அலுவலகம் நேற்று தாக்கப்பட்டது. பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் அணியினர் இந்த தாக்குதலை நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
திருவனந்தபுரம்:
மத்தியில் பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனம் திருத்தி எழுதப்படும் என்றும், இந்தியா ‘இந்து பாகிஸ்தான்’ஆகிவிடும் என்றும் திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் சமீபத்தில் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது கருத்துக்கு பாரதீய ஜனதா கண்டனம் தெரிவித்தது.
இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள சசிதரூரின் அலுவலகம் நேற்று தாக்கப்பட்டது. பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் அணியினர் இந்த தாக்குதலை நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுபற்றி தனது டுவிட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ள சசிதரூர், “பாரதீய ஜனதாவின் இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள எனது தொகுதி அலுவலகத்துக்கு வந்து பெயர் பலகை, நுழைவாயில் கதவு, சுவர் உள்ளிட்ட இடங்களில் கருப்பு நிற என்ஜின் எண்ணெயை ஊற்றி தாக்குதல் நடத்தியதோடு, நான் பாகிஸ்தானுக்கு போகவேண்டும் என்று கோஷம் எழுப்பிவிட்டு சென்று இருக்கிறார்கள். இந்த சம்பவம் பாரதீய ஜனதாவின் உண்மையான முகத்தை காட்டுகிறது” என்று அதில் குறிப்பிட்டு உள்ளார்.

×

X