என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » bjpleaderss1800crore
நீங்கள் தேடியது "BJPleaderss1800crore"
கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா ஆட்சிக்காலத்தில் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு ரூ.1800 கோடி லஞ்சம் அளிக்கப்பட்டதாக வெளியான தகவலை லோக்பால் விசாரிக்க காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. #Congressseeksprobe #Rs1800crorepayoffs #BJPleaderss1800crore
புதுடெல்லி:
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா இல்லத்தில் வருமான வரித்துறை சோதனையின்போது கைப்பற்றப்பட்ட டைரியில் காணப்பட்ட விபரம் என்று எடியூரப்பாவின் கையொப்பத்துடன் பிரபல ஆங்கில பத்திரிகை ஒரு பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து வருமான வரித்துறை அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ள இந்த டைரியின் சில பக்கங்களின் நகல்களில் எடியூரப்பா லஞ்சமாக சம்பாதித்த பணத்தில் இருந்து சுமார் 1800 கோடி ரூபாய் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி உள்ளிட்ட பாஜக முக்கிய தலைவர்களுக்கு அளிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, ’கடந்த 2017-ம் ஆண்டில் கைப்பற்றப்பட்ட இந்த டைரியில் காணப்படும் ஆதாரங்களின் அடிப்படையில் இதில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின்மீது மோடி தலைமையிலான மத்திய அரசு இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்?’ என கேள்வி எழுப்பினார். லஞ்சப்பணம் பங்குபோடும் விவகாரம் தொடர்பாக சில தலைவர்கள் எடியூரப்பாவுடன் நடத்திய உரையாடல்களையும் அவர் படித்துக் காட்டினார்.
இந்த லஞ்சப்பணத்தை பாஜக தலைவர்கள் வாங்கினார்களா?, இல்லையா? என்பதை பிரதமர் மோடி உடனடியாக தெளிவுப்படுத்த வேண்டும். இந்த ஆதாரத்தில் தகுந்த முகாந்திரம் இருப்பதால் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்கள் அனைவரிடமும் புதிதாக நியமிக்கப்பட்ட லோக்பால் நீதிபதி விசாரணை நடத்த வேண்டும் எனவும் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா வலியுறுத்தியுள்ளார். #Congressseeksprobe #Rs1800crorepayoffs #BJPleaderss1800crore
×

X