search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Black Belt"

    • மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மொத்தம் 61 மாணவர்களுக்கு இன்று பிளாக் பெல்ட் வழங்கப்பட்டது.

    நடிகர் சூர்யாவின் மகன் தேவ், கராத்தே பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில், சென்னை அசோக் நகரில் உள்ள ஜென் கராத்தே அசோசியேசன் சார்பில் தங்களிடம் கராத்தே பயின்ற மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில், பங்கேற்ற சூர்யாவின் மகன், கராத்தேவில் பிளாக் பெல்ட் பெற்றார். மகன் தேவ்-ன் சண்டை காட்சியை நடிகர் சூர்யா மற்றும் சிவக்குமார் ஆகியோர் மொபைலில் வீடியோ எடுத்தனர்.

    இதில் மொத்தம் 61 மாணவர்களுக்கு இன்று பிளாக் பெல்ட் வழங்கப்பட்டது. அதில் நடிகர் சூர்யா மகன் தேவ்-ம் பிளாக் பெல்ட் பெற்றார்.

    • தமிழ்நாட்டை சேர்ந்த ஏழு இளம் வீரர்கள் ஜப்பானில் பிளாக் பெல்ட் வென்றனர்.
    • முறையாக கராத்தே கற்று பிளாக் பெல்ட் அடைய 10 ஆண்டுகள் வரை ஆகும்.

    டோக்கியோவில் நடைபெற்ற 2023 ஜே.கே.எஃப். (JKF) டான் கிரேடிங் தேர்வுகளில் இந்தியா சார்பில் பங்கேற்று, கராத்தேவில் மிக உயர்ந்த அங்கீகாரமான பிளாக் பெல்ட்களைவென்று இளம் இந்திய வீரர்கள் அசத்தியுள்ளனர்.

    அரகாவா ஸ்டான்லி வாடோ-காய் இந்தியா பயிற்சி மையத்தை சேர்ந்த சென்செய் டொனால்ட் டைசனிடம் கராத்தே பயிற்சி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த ஏழு இளம் வீரர்கள் ஜப்பானில் பிளாக் பெல்ட்களை வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளனர். இவர்களில் 12 வயது ஜெய்ஸ்ரீ அக்ஷயா மற்றும் 14 வயது ஆர்யன் சதீஷ் புதிய சாதனையை படைத்துள்ளனர்.

    ஜே.கே.எஃப். என அழைக்கப்படும் ஜப்பான் கராத்தே கூட்டமைப்பின் சர்வதேச நிபுணர்களால் இத்தேர்வுகள் நடத்தப்பட்டன. உலகின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் மரியாதைக்குரிய கராத்தே அமைப்பாக இது போற்றப்படுகிறது.

    தனது மாணவர்கள் பிளாக் பெல்ட் வென்றது பற்றி பேசிய சென்செய் டைசன், "ஒரு மாணவர் முறையாக கராத்தே கற்று பிளாக் பெல்ட்டை அடைய ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரை ஆகும். மேலும், பிளாக் பெல்ட் எங்கிருந்து ஒருவர் பெறுகிறார் என்பது மிகவும் முக்கியம். எனது அனைத்து மாணவர்களும் ஜேகேஎஃப் அமைப்பிடமிருந்து பிளாக் பெல்ட்களைப் பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்," என்றார்.

    ×