என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "black circle under eyes"
- வீட்டில் உள்ள சில பொருள்களை வைத்தே அழகை தக்கவைத்துக்கொள்ள முடியும்.
- பார்லர் செல்வதால் கிடைக்கும் அழகை வீட்டிலேயே பெறமுடியும்.
தினமுமோ அல்லது இரண்டு நாள்களுக்கு ஒருமுறையோ கீழே கொடுக்கப்பட்டுள்ள ஃபேஸ் பேக்குகள் போட்டுக்கொள்வதன் மூலம், இழந்த அழகைத் திரும்பப் பெறமுடியும்.
பளிச் சருமத்துக்கான ஃபேஸ் பேக்:
தேவையானவை:
அரிசி கழுவிய நீர்- 6 டீஸ்பூன்
மஞ்சள்தூள்- 2 டீஸ்பூன்
பாசிப்பயறு மாவு- ஒரு டீஸ்பூன்
மூன்றையும் ஒன்றாகக் கலந்து பேக்காகப் போடவும். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும். சரும துவாரங்களில் அடைந்துள்ள அழுக்குகள் நீங்கி, முகம் பளிச் என மிளிரும்.
முகச்சுருக்கத்துக்கான பேக்:
தேவையானவை:
தேங்காய் எண்ணெய் - அரை டீஸ்பூன்
முட்டை வெள்ளைக் கரு - ஒரு டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - கால் டீஸ்பூன்
தேவையான எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, அரை மணி நேரம் பேக் போட்டு, பின்னர் முகத்தைக் கழுவவும். மாதம் நான்கு முறை இப்படிச் செய்துவந்தால், சருமச் சுருக்கங்கள் நீங்கி இளமையான தோற்றம் பெறலாம்.
முகத்தொய்வை நீக்கும் பேக்:
தேவையானவை:
யோகர்ட் - 5 டீஸ்பூன்
காபித்தூள்- கால் டீஸ்பூன்
தேன் - 2 டீஸ்பூன்
மூன்றையும் பேஸ்ட் பதத்துக்குக் கலந்து முகத்தில் அப்ளை செய்யவும். 20 நிமிடங்களுக்குப் பிறகு ஈரமான துணியால் முகத்தைத் துடைத்துவிட்டு, ரோஸ் வாட்டரால் முகத்தை லேசாக ஒற்றி எடுக்கவும். வாரம் ஒருமுறை இதைச் செய்துவர, முகத்தொய்வு சரியாகும்.
கருவளையத்திற்கான பேக் :
தேவையானவை:
தக்காளிச்சாறு - கால் டீஸ்பூன்
உருளைக்கிழங்கு சாறு - கால் டீஸ்பூன்
மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
தக்காளிச்சாறு, உருளைகிழங்குச்சாறு, மஞ்சள்தூள் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, கருவளையம் உள்ள இடத்தில் அப்ளை செய்யவும். 20 நிமிடங்கள் கழித்து கண்களைக் குளிர்ந்த நீரால் துடைக்க, கருவளையத்துக்கு டாட்டா சொல்லலாம்.
வேலைக்குச் செல்லும் பெண்களுக்குப் பொதுவாக பார்லர் செல்ல நேரம் இருப்பதில்லை. அந்த மாதிரியான சூழலில், வீட்டில் உள்ள சில பொருள்களைவைத்தே அழகை தக்கவைத்துக்கொள்ள முடியும். வீட்டில் கிடைக்கும் பொருள்களைவைத்து எளிமையான பேக்குகளை முயற்சிசெய்து, உங்களின் அழகை மெருகேற்றுங்கள். இனி பார்லர் செல்வதால் கிடைக்கும் அழகை வீட்டிலேயே பெறமுடியும்.
- செல்போன், கணினியை அதிக நேரம் பார்ப்பதால் கருவளையம் வரக்கூடும்.
- கருவளையத்தை எளிதாக நீக்க சித்த மருந்துகள் உதவும்.
ஆண்கள் மற்றும் பெண்களில் சிலருக்கு கண்களின் கீழும், கன்னங்களின் இரு பக்கமும் கருவளையம் காணப்படும். இதை எளிதாக நீக்க சித்த மருந்துகள் உதவும்.
ஜாதிக்காய்-1, கோஷ்டம் சிறிதளவு எடுத்துக்கொள்ளுங்கள். (நாட்டு மருந்து கடைகளில் இவை கிடைக்கும்) இவற்றை நன்றாக பொடித்து அத்துடன், 5 பாதாம் சேர்த்து தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள். இதை முகத்தில் பூசி சுமார் 2 மணி நேரம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர முகத்தில் வரும் அனைத்துவித கருப்பு, கரும்புள்ளிகள் மாறும்.
வாரம் இருமுறை சோற்றுக் கற்றாழை ஜெல்லுடன் எலுமிச்சை சாறு கலந்து, முகத்தை மசாஜ் செய்ய வேண்டும். இது முகத்திற்கு இயற்கை சூரிய எதிர்ப்பு கவசமாகத் திகழும்.
குங்குமாதிலேபம்: இது சித்த மருந்து கடைகளில் கிடைக்கும். இதை இரவு நேரத்தில் முகத்தில் பூசி தூங்கலாம். காலையில் முகம் கழுவிடலாம்.
கேரட், பப்பாளி பழம், தர்பூசணி பழம், மாதுளை, பாதாம், பிளாக்ஸ் விதைகள் சாப்பிட்டு வந்தால் முகம் வசீகரமாகும்.
சிவப்பு தாமரை இதழ்களை அரைத்து, அதன் விழுதில் ஒரு 25 கிராம், விளக்கெண்ணெய் 25 கிராம், தேன் 10 கிராம் எடுத்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். தினமும் குளிக்கும் முன்பும், இரவு தூங்கும் முன்பும் இதில் சிறிது எடுத்து கண்களைச் சுற்றி பேக் போல தடவி, அரை மணி நேரம் கண்களை மூடி ஓய்வெடுத்து, பிறகு கழுவி விடலாம்.
திக்கான கிரீன் டீ டிகாக்ஷன் 10 மில்லி எடுத்து, அதில் 5 கிராம் சுருள் பாசி (ஸ்பைருலினா) தூள், 10 சொட்டு லாவண்டர் ஆயில், 10 சொட்டு லெமன்கிராஸ் ஆயில் கலந்து இரண்டு மணி நேரம் திறந்தாற்போல வைக்க வேண்டும். பிறகு, இதை எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து, தினமும் குளிக்கும் முன்பும், இரவு தூங்கும் முன்பும் சிறிது எடுத்து கண்களைச் சுற்றி பேக் போல தடவி, அரைமணி நேரம் கண்களை மூடி ஓய்வெடுத்து… பிறகு, கழுவிவிடலாம்.
கண்ணுக்கு கீழ் வரும் பை: சிலருக்கு கண்ணுக்கு கீழ் சதைப் பை தோன்றி, முக அழகையே கெடுத்துவிடும். இதற்கு, பாதாம் ஆயில் 2 சொட்டு, விளக்கெண்ணெய் 2 சொட்டு இரண்டையும் கலந்து, கண்ணின் வெளி நுனிப்பகுதியில் ஆள்காட்டி விரலை வைத்து அழுத்தி, வெளிப்பக்கமா இழுத்துப் பிடித்துக்கொண்டு, இன்னொரு கை விரலால் எண்ணெய்க் கலவையைத் தொட்டு, இழுக்கும் திசையில் வெளிப்பக்கமாக மசாஜ் செய்ய வேண்டும். ஒவ்வொரு கண்ணுக்கும் 10 - 15 முறை இப்படி மசாஜ் செய்த பின், இரண்டு கண்களையும் மூடி, ஐஸ் தண்ணீரில் நனைத்த திக்கான பஞ்சை அதன் மேல் வைத்து ஐந்து நிமிடம் கழித்து எடுத்துவிட வேண்டும். தினமும் இருமுறை இதைத் தொடர்ந்து செய்துவந்தால், நாளடைவில் கண் பை குறையும்.
கருவளையத்தைப் போக்கும் புதுமை சிகிச்சைகள்…
ஹோம்மேட் ஹனி ஐ கிரீம்
வெள்ளரி துண்டு - 3
உருளை ஸ்லைஸ் - 3
தேன் - 1 டீஸ்பூன்
கற்றாலை ஜெல் - 1 டீஸ்பூன்
வெள்ளரியையும் உருளைக்கிழங்கையும் நன்றாக கழுவி தனி தனியாக மிக்ஸியில் அரைத்து ஜூஸ் எடுத்துக் கொள்ளவும்.
இதில் தேனும், கற்றாலை ஜெல் கலந்து நன்கு கலக்கவும். இப்போது ஹனி ஐ கிரீம் ( homemade honey eye cream) ரெடி.
இந்த கிரீமை கண்களை சுற்றி தடவுவதற்கு முன், பன்னீரால் கண்களை சுற்றி சுத்தமாக துடைத்த பின் இந்த கீரிமை போட வேண்டும். மறுநாள் காலை கழுவி விடலாம். இந்த தினமும் போட்டு வரவேண்டும். தொடர்ந்து 2 வாரங்கள் செய்து வந்தால் நல்ல வித்தியாசம் தெரிவதை காணலாம்.
கருவளையத்தைப் போக்க, பால் அல்லது மூலிகை கிரீம்களைப் பயன்படுத்தி, க்ளென்சிங் செய்யப்படும். பிறகு, ஐஸ் கட்டிகள், கேரட் ஜூஸ் என, அவரவர் சருமத்துக்கு ஏற்றபடி கண்களைச் சுற்றி மிருதுவாக மசாஜ் செய்யலாம்.
இமைகளின் மீது பஞ்சுவைத்து, அதன் மேல், வேப்பிலை, கற்றாழை, துளசி, ஆப்பிள் உள்ளிட்ட சில இயற்கை, மூலிகைப் பொருட்களால் ஆன கலவையை வைத்து, அரை மணி நேரம் அதன் சாறு சருமத்தில் இறங்கும் வகையில் விட வேண்டும். அதன் பிறகு, தூய நீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
இந்த சிகிச்சையினால், கண்களைச் சுற்றியுள்ள சருமப்பகுதிக்குச் சீரான ரத்த ஓட்டம் ஏற்பட்டு, கருவளையம் மறையத் தொடங்குகிறது. இந்த சிகிச்சைக்கு அரை மணி நேரம் தேவைப்படும். வாரத்துக்கு ஒரு முறை செய்துகொண்டால், இரண்டே மாதங்களில் கருவளையம் முற்றிலுமாக மறையும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்