என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » block tracks
நீங்கள் தேடியது "Block Tracks"
கல்வி, வேலைவாய்ப்பில் குஜ்ஜார் இன மக்களுக்கு உரிய இடஒதுக்கீடு ராஜஸ்தானில் மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்றுவரும் ரெயில் மறியல் உள்ளிட்ட போராட்டத்தால் பதற்றம் நிலவுகிறது. #Gujjarsdharna #dharnaonrailtracks
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தானில் குஜ்ஜார் சமூகத்தினர், தங்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 2007ம் ஆண்டில் இருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சாலை மறியல் மற்றும் ரெயில் மறியல் போராட்டங்கள் தீவிரமாக நடத்தினர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதையடுத்து குஜ்ஜார் சமூகத்தினருக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என கடந்த 2017-ம் ஆண்டில் அம்மாநில அரசு வாக்குறுதி அளித்தது. இதற்காக சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட், மசோதாவை நிறுத்திவைத்தது. இதனால் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்ந்து இழுபறியாகவே உள்ளது.
இந்நிலையில், குஜ்ஜார் சமூகத்தினர் கடந்த 8-ம் தேதியில் இருந்து மீண்டும் ரெயில் மறியல் உள்ளிட்ட போராட்டத்தை தொடங்கி உள்ளனர். ரெயில்கள் செல்லும் தண்டவாளத்தின்மீது தற்காலிக கூடாரங்களை அமைத்து அவர்கள் இரவு, பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் நேற்றும் நேற்று முன்தினமும் பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. இன்றும் 3 ரெயில்கள் வெவ்வேறு பாதைகளில் திருப்பி விடப்பட்டுள்ளன. ஒரு ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தொடர் போராட்டத்தால் சில இடங்களில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
குறிப்பாக, இன்று பிற்பகல் தோல்பூர் நெடுஞ்சாலையில் போராட்டக்காரர்கள் வாகனங்களை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்த வந்த போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் வெடித்தது. இந்த ஆத்திரத்தில் சிலர் வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர். இப்பகுதியில் அசம்பாவிதம் மேலும் அதிகரிக்காத வகையில் கூடுதலாக போலீஸ் படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். #Gujjarsdharna #dharnaonrailtracks
ராஜஸ்தானில் குஜ்ஜார் சமூகத்தினர் இடஒதுக்கீடு கேட்டு மீண்டும் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. #GujjarsProtest #GujjarsQuota
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தானில் குஜ்ஜார் சமூகத்தினர், தங்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 2007ம் ஆண்டில் இருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சாலை மறியல் மற்றும் ரெயில் மறியல் போராட்டங்கள் தீவிரமாக நடத்தினர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதையடுத்து குஜ்ஜார் சமூகத்தினருக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என 2017ல் மாநில அரசு வாக்குறுதி அளித்தது. இதற்காக சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட், மசோதாவை நிறுத்திவைத்தது. இதனால் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்ந்து இழுபறியாகவே உள்ளது.
இந்நிலையில், குஜ்ஜார் சமூகத்தினர் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். அரசு வாக்குறுதி அளித்தபடி, 5 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, மீண்டும் ரெயில் மறியல் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்றும்போது, ஏன் எங்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற முடியாது? என குஜ்ஜார்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இன்றும் ரெயில் மறியல் போராட்டம் நீடிக்கிறது. போராட்டக்காரர்கள் தண்டவாளத்தை மறித்து கூடாரங்கள் அமைத்து, அதற்குள் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் காரணமாக இன்றும் மும்பை-டெல்லி வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இன்று 5 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த 3 அமைச்சர்கள் கொண்ட குழுவை அரசு அமைத்துள்ளது. அவர்கள் விரைவில் பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளனர். #GujjarsProtest #GujjarsQuota

டெல்லி-மும்பை பிரதான ரெயில் பாதையில், சவாய் மதோபூர் மாவட்டம் மக்சுதன்புரா என்ற இடத்தில் நேற்று ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. ஏராளமானோர் தண்டவாளத்தில் அணிவகுத்துச் சென்று, பின்னர் தண்டவாளத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக 4 ரெயில்கள், சேர வேண்டிய இடங்களுக்கு முன்னதாகவே நிறுத்தப்பட்டன. 7 ரெயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. ஒரு ரெயில் ரத்து செய்யப்பட்டது.
இன்றும் ரெயில் மறியல் போராட்டம் நீடிக்கிறது. போராட்டக்காரர்கள் தண்டவாளத்தை மறித்து கூடாரங்கள் அமைத்து, அதற்குள் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் காரணமாக இன்றும் மும்பை-டெல்லி வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இன்று 5 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த 3 அமைச்சர்கள் கொண்ட குழுவை அரசு அமைத்துள்ளது. அவர்கள் விரைவில் பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளனர். #GujjarsProtest #GujjarsQuota
×

X