search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Blockade protest"

    • தமிழக விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • வலைதளங்களில் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.

    152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. பல வருடங்களாகவே முல்லைப்பெரியாறு அணை குறித்து கேரள அரசியல் வாதிகள் மற்றும் தன்னார்வலர்கள் என்ற பெயரில் உலாவும் நபர்கள் வதந்தி கிளப்பி வருகின்றனர்.

    கேரளாவில் அமைந்திருந்தாலும் அணை தமிழக நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு பலகோடி செலவில் தமிழக அரசு அணையை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.

    இந்த பணி முடிந்தபின்னர் 152 அடி வரை உயர்த்த முயற்சி செய்தனர். ஆனால் கேரளா அரசு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. உச்சநீதிமன்றம் அமைத்த குழுக்கள் தொடர்ந்து அணைப்பகுதியில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

    கடந்த 2006-ம் ஆண்டு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடி வரை தேக்கிக்கொள்ளலாம் என இவர்கள் பரிந்துரையின் பேரில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    ஆனால் இதனை அமல்படுத்தாமல் கேரள அரசு தொடர்ந்து தாமதப்படுத்தி வந்தது. இதனால் கடந்த 2010ம் ஆண்டு டிசம்பரில் தேனி மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடைபெற்றது.

    கடந்த 2024ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம். பேபி அணையை பலப்படுத்திய பின்னர் 152 அடியாக உயர்த்தலாம் என தெரிவித்திருந்தது.

    அதனைத் தொடர்ந்து கண்காணிப்பு குழுவினர் தொடர்ந்து அணைப்பகுதியை ஆய்வு செய்து வருகின்றனர். ஒவ்வொரு பருவமழையின்போது அணைப்பகுதியை ஆய்வு செய்து அணை பலமாக உள்ளது என்ற அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்து வருகின்றனர்.

    சமீபத்தில் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் வீடுகள், உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் முல்லை ப்பெரியாறு அணை விவகாகரத்தை நிலச்சரிவுடன் ஒப்பிட்டு கேரள அரசியல் வாதிகள், தன்னார்வலர்கள் வலைதளங்களில் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    இது தமிழக விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே தொடர்ந்து வதந்தி பரப்பி வரும் கேரளாவை கண்டித்து தமிழக-கேரள எல்லையான குமுளியில் முற்றுகை போராட்டம் நாளை நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.

    கடந்த 2006 மற்றும் 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என கேரளா சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எர்ணாகுளம் எம்.பி. முல்லைப்பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும் என பாராளுமன்றத்தில் பேசி உள்ளார்.

    எங்கு இயற்கை பேரழிவு நடந்தாலும் அதனை பெரியாறு அணையுடன் ஒப்பிட்டு பேசுகின்றனர். எனவே இதனை கண்டித்து நாளை குமுளியில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களும் இணைந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

    • திருமங்கலம் அருகே 4 அரசு பஸ்களை சிறைபிடித்து கிராம மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
    • ஒரு மாத காலமாக முறையாக இயக்கப்படவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.கொக்குளம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து நாள்தோறும் நூற்றுக்க ணக்கானோர் மதுரை, திருமங்கலம் உள்ளிட்ட நகரங்களுக்கு அரசு பஸ்களில் சென்று வருகின்றனர். மேலும் மாணவ, மாணவிகளும் பள்ளிக்கு செல்ல அரசு பஸ்களையே நம்பியுள்ளனர்.

    மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு தினமும் காலை, மதியம், மாலை என 3 வேளை டி.கொக்குளம் கிராமத்திற்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக காரியாபட்டி பேருந்து பணிமனைக்கு உட்பட்ட டி.கொக்குளம் கிராமத்திலிருந்து மதுரை அண்ணா பஸ் நிலையத்திற்கு செல்லும் அரசுப் பேருந்து முறையாக இயக்கப்ப டவில்லை. தினமும் காலை நேரத்தில் வரக்கூடிய பேருந்து உரிய நேரத்திற்கு வராமல் தொடர்ந்து கால தாமதமாக வருவதால் வேலைக்கு செல்வோர் பள்ளி கல்லூரிகளுக்கு செல்வோர் பாதிக்கப் பட்டனர்.

    மேலும் மாலை வேளையில் பஸ்கள் வருவதில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இதுகுறித்து பலமுறை போக்குவரத்து அலுவலர்களிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் இன்று காலை கிராமத்திற்கு வந்த திருமால், புதுப்பட்டி, கிருஷ்ணாபுரம் பகுதிகளில் இருந்து பெரியார் பஸ் நிலையம் செல்லும் அரசு பஸ்சை சிறை பிடித்தனர். தொடர்ந்து அடுத்தடுத்து திருமங்கலம் பகுதியில் இருந்து காரியாபட்டி செல்லும் அரசு பஸ், மதுரையில் இருந்து தூம்பக்குளம் செல்லும் அரசு பஸ் என 4 பஸ்களையும் சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

    தகவலறிந்த கூடக்கோவில் போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அலுவலர்கள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தினந்தோறும் காலை மாலை உரிய நேரத்திற்கு பேருந்து வரும் என எழுதி என உறுதி அளித்தனர். அதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

    • தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.
    • தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய மாநாடு கட்சி அலுவலகத்தில் நடந்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய மாநாடு கட்சி அலுவலகத்தில் நடந்தது. முருகேசன் தலைமை தாங்கினார். பாக்கியம் கொடி ஏற்றி வைத்தார்.

    விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தங்கமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கண்ணகி, விவசாய தொழி லாளர் சங்க மாவட்டச் செயலாளர் சாத்தையா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் சங்கையா, விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கணேசன் உள்ளிட்ட பலர் பேசினர்.

    விவசாய தொழிலாளர் சங்கத்தின் மானாமதுரை ஒன்றிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். செயலா ளராக கணேசன், தலைவராக முருகேசன், பொரு ளாளராக சோனையா, துணைச் செயலாளராக நாகேந்திரன், துணைத் தலைவராக அரியமுத்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் நாகராஜன், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் முருகேசன் மற்றும் விவசாய தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்டத்தை நிறுத்தும் நிலையை தடுக்க வேண்டும், மானாமதுரை ஒன்றியம் பதினெட்டான் கோட்டை கிராமத்தில் ஆதி திராவிடர்களுக்கு கொடுக்கப்பட்ட இடத்தில் நடந்துள்ள முறைகேடு குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். புத்தனேந்தல் கிராமத்தில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்ய ப்பட்டதையும், இங்குள்ள மயானத்தை பிற கிராமத்தினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதையும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் 2 பெண்கள் உள்பட 53 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கண்டிக்கின் றோம், கண்டிக்கின்றோம், மத்திய அரசை கண்டிக்கிறோம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பி.எஸ்.என்.எல் மற்றும் தபால் அலுவலகங்களில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் இளையராஜா, நகர தலைவர் குமார், நகராட்சி கவுன்சிலர் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், இதில் மந்தைவெளியில் இருந்து 50 -க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் சிலிண்டருக்கு பாடைகட்டி தூக்கிக்கொண்டு ஊர்வலமாக வந்து பி.எஸ்.என்.எல் அலுவலகம் மற்றும் அதன் அருகில் உள்ள தபால் அலுவலகங்களில் முன்பு முற்றுகையிட்டனர். அப்போது கண்டிக்கின் றோம், கண்டிக்கின்றோம், மத்திய அரசை கண்டிக்கிறோம், குறைத்திடு குறைத்திடு பெட்ரோல், டீசல், சிலிண்டர் மறறும் விலைவாசி உயர்வை குறைத்திடு, போடாதே, போடாதே, காங்கிரஸ் தலைவர்கள் மீது பொய் வழக்கு போடாதே என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பி முற்றுகையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மாவட்டத் தலைவர் மற்றும் 2 பெண்கள் உள்ளிட்ட 53 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தார் மாலை அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

    ×