என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Blue Tick"
- இந்தியாவில் கடந்த வாரம் மெட்டா வெரிஃபைடு சேவை அறிவிக்கப்பட்டது.
- மெட்டா வெரிஃபைடு சேவை அமெரிக்கா, கனடா, பிரிட்டன் என ஆறு நாடுகளில் கிடைக்கிறது.
மெட்டா நிறுவனம் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட்களுக்கு வெரிஃபிகேஷன் பேட்ஜ் வழங்கும் திட்டத்தை ஜூன் 7 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதன் மூலம் பயனர்கள் மெட்டா வெரிஃபைடு சேவையை கட்டண முறையில் பெற்றுக் கொள்ள முடியும். இவ்வாறு கட்டணம் செலுத்தி வெரிஃபைடு சேவையை பெறுவோருக்கு புளூ டிக் மற்றும் கூடுதல் அம்சங்களை வழங்கி வருகிறது.
இந்தியாவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஐஒஎஸ் மற்றும் ஆன்ட்ராய்டு செயலிக்கான வெரிஃபைடு சேவைக்கான கட்டணம் ரூ. 699 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து ரூ. 599 விலையில் வெப் வெர்ஷனுக்கான வெரிஃபைடு சேவை வரும் மாதங்களில் வெளியிடப்பட இருக்கிறது.
மெட்டா வெரிஃபைடு சேவை அரசு அடையாள சான்று மூலம் வழங்கப்படுகிறது. வெரிஃபைடு சேவையின் கீழ் அக்கவுன்ட் பாதுகாப்பு, நேரடி அக்கவுன்ட் சப்போர்ட் மற்றும் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் வெரிஃபைடு பெறுவது எப்படி?
ஆன்ட்ராய்டு அல்லது ஐஒஎஸ் சாதனத்தில் இன்ஸ்டாகிராம் அல்லது பேஸ்புக் செயலியை திறக்க வேண்டும்.
வெரிஃபைடு பெற வேண்டிய ப்ரோஃபைலை க்ளிக் செய்ய வேண்டும்.
செட்டிங்ஸ் -- அக்கவுன்ட் சென்டர் ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும்.
மெட்டா வெரிஃபைடு ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். ஒருவேளை அம்சம் காணப்படவில்லை எனில், செயலியை அப்டேட் செய்ய வேண்டும்.
கட்டண முறையை தேர்வு செய்ய வேண்டும்.
அரசு அடையாள முகவரி மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
சரிபார்க்கப்பட்ட பிறகு, பயனர்களின் அக்கவுன்டில் வெரிஃபைடு பேட்ஜ் வழங்கப்பட்டு விடும்.
வெரிஃபைடு பெற தேவையானவை:
இந்தியாவில் மெட்டா வெரிஃபைடு பெற நினைப்போரின் வயது 18 அல்லது அதற்கும் அதிகமாக இருக்க வேண்டும். மேலும் நிறுவனம் சார்பில் பயனர் பதிவுகள் உறுதிப்படுத்தப்படும். இவற்றை தொடர்ந்து அரசு அடையாள சான்று வைத்திருக்க வேண்டும். இதில் அடையாள சான்றில் உள்ள புகைப்படம், பெயர் இன்ஸ்டாகிராம் அல்லது பேஸ்புக் அக்கவுன்ட் உடன் ஒற்றுப் போக வேண்டும்.
பொது பிரபலங்கள், கிரியேட்டர்கள், பிரான்டுகள் அக்கவுன்ட் மற்றும் வெரிஃபைடு பெற விண்ணப்பிக்கலாம். தற்போது மெட்டா வெரிஃபைடு சேவை அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
- உலக கத்தோலிக்கர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் முதல் பில்கேட்ஸ் வரை பலரது கணக்குகளின் புளூ டிக்குகள் நீக்கப்பட்டுள்ளன.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர்கள் ரஜினி, விஜய், விஜய் சேதுபதி உள்பட பலரது டுவிட்டர் புளூ டிக்குகள் நீக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்:
டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பின்னர் புதிய சீர்திருத்தங்களை கொண்டு வந்தார்.
அதன்படி டுவிட்டர் கணக்குகளை சரிபார்க்கும் சேவைக்கு நிறுவனம் கட்டணம் நிர்ணயித்தது. இதற்காக ஒரு பயனர் ஒரு மாதத்திற்கு 8 டாலர் கட்டணம், அதாவது இந்திய ரூபாயில் 650 செலுத்த வேண்டும் என்றும் அறிவித்தது.
இதற்கு டுவிட்டர் வாடிக்கையாளர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் இந்த அறிவிப்பை வரவேற்றனர்.
டுவிட்டர் கணக்கு சரிபார்ப்புக்கு வரவேற்பு தெரிவித்த வாடிக்கையாளர்கள் அதற்கான கட்டணத்தை செலுத்தினர். ஆனால் பல வாடிக்கையாளர்கள் இந்த கட்டணத்தை செலுத்தாமல் இருந்தனர்.
இதையடுத்து கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களின் புளூ டிக் கணக்குகளை நீக்கி விடுவோம் என்று டுவிட்டர் நிறுவனம் தெரிவித்தது. அதன் பின்பும் வாடிக்கையாளர்கள் இதற்கான கட்டணத்தை செலுத்தவில்லை.
இதையடுத்து டுவிட்டர் நிறுவனம் கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களின் கணக்குகளில் புளூ டிக்கை நீக்க தொடங்கியது.
உலக கத்தோலிக்கர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் முதல் பில்கேட்ஸ் வரை பலரது கணக்குகளின் புளூ டிக்குகள் நீக்கப்பட்டுள்ளன.
இதுபோல தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர்கள் ரஜினி, விஜய், விஜய் சேதுபதி உள்பட பலரது டுவிட்டர் புளூ டிக்குகள் நீக்கப்பட்டுள்ளது.
- தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான குஷ்பு தற்போது தீவிர அரசியலில் ஈடுப்பட்டு வருகிறார்.
- இவர் தனது டுவிட்டர் கணக்கில் புளூ டிக்கை இழந்துள்ளார்.
தமிழ் திரையுலகிற்கு 1988-ம் ஆண்டு வெளியான தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் குஷ்பு. அதன்பின் பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து பிரபலமடைந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த குஷ்பு சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.
இவர் நடிப்பது மட்டுமல்லாமல் அரசியல் வாதியாகவும் வலம் வருகிறார். சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நடிகை குஷ்பு தனது டுவிட்டர் கணக்கின் புளு டிக்கை இழந்தார். இது குறித்து டுவிட்டரிடம் கேள்வி எழுப்பிய குஷ்பு, டியர் டுவிட்டர், என் புளூடிக் ஏன் ஒரே இரவில் காணாமல் போனது?? எனது கணக்கு செயலில் உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
இந்திய பயனாளர்கள் மாதத்திற்கு ரூ.900 கட்டணம் செலுத்தி உறுப்பினராக இணைந்து கொள்ளலாம் என்றும் ஏப்ரல் 20-ம் தேதிக்குள் கட்டணம் செலுத்தாத டுவிட்டர் கணக்குகளின் புளூ டிக்குகள் அகற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Dear @TwitterBlue why has my bluetick disappeared overnight?? My account is active.
— KhushbuSundar (@khushsundar) April 21, 2023
- டுவிட்டரில் பிரபலங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் தங்களது டுவிட்டர் கணக்குக்கு பயன்படுத்தும் புளூ டிக்குக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
- தற்போது சந்தா செலுத்தாத ரஜினி, தனுஷ், சிம்பு உள்ளிட்ட பல பிரபலங்கள் கணக்கில் புளூ டிக்கை டுவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.
உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் டுவிட்டர் உரிமையாளரானதை தொடர்ந்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். டுவிட்டரில் பிரபலங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் தங்களது டுவிட்டர் கணக்குக்கு பயன்படுத்தும் புளூ டிக்குக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்திய பயனாளர்கள் மாதத்திற்கு ரூ.900 கட்டணம் செலுத்தி உறுப்பினராக இணைந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏப்ரல் 20-ம் தேதிக்குள் கட்டணம் செலுத்தாத டுவிட்டர் கணக்குகளின் புளூ டிக்குகள் அகற்றப்படும் என்று டுவிட்டர் சி.இ.ஓ எலான் மஸ்க் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் சந்தா செலுத்தாத அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் கணக்கில் புளூ டிக்கை டுவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட கணக்குகளின் புளூ டிக்குகளை டுவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.
நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், தனுஷ், சிலம்பரசன், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கார்த்தி, ஷாருக்கான் உள்ளிட்டோரின் புளூ டிக்குகள் நீக்கப்பட்டுள்ளன. இயக்குனர்கள் சங்கர், செல்வராகவன், அட்லீ, லோகேஷ் கனகராஜ், நடிகைகள் சமந்தா, கீர்த்தி சுரேஷ் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்டோரின் கணக்குகளின் புளூ டிக்கும் நீக்கப்பட்டுள்ளது.
சந்தா கட்டியவர்களின் கணக்குளின் புளூ டிக்குகள் நீக்கப்படவில்லை. எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரின் கணக்குகளில் புளூ டிக்குகள் உள்ளன. நடிகர்கள் கமல்ஹாசன், சூர்யா உள்ளிட்டோரின் புளூ டிக்குகள் நீக்கப்படவில்லை.
- ப்ளூ டிக் அங்கீகாரம் பெற்றுள்ள பயனர்களிடத்தில் இருந்து மாதம் தோறும் கட்டண சந்தா செலுத்த அறிவுறுத்தப்பட்டது.
- சந்தா கட்டணங்களை செலுத்தாத டுவிட்டர் கணக்குகளில் இருந்து வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் ப்ளூ டிக் அகற்றப்படுகிறது.
டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்தார். அதில் பிரபலங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் தங்களது டுவிட்டர் கணக்குக்கு பயன்படுத்தும் 'ப்ளூ டிக்குக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. ப்ளூ டிக் அங்கீகாரம் பெற்றுள்ள பயனர்களிடத்தில் இருந்து மாதம் தோறும் கட்டண சந்தா செலுத்த அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் சந்தா கட்டணங்களை செலுத்தாத டுவிட்டர் கணக்குகளில் இருந்து வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் ப்ளூ டிக் அகற்றப்படும் என்று டுவிட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது. பழைய சரிபார்ப்பு திட்டத்தை படிப்படியாக நீக்கி, சந்தா செலுத்தாத கணக்குகளில் ப்ளூ டிக் அகற்றப்படும் என்று டுவிட்டரில் நீல நிற சரிபார்ப்பு அடையாளத்தை வைத்திருந்த தனிநபர்கள் டுவிட்டர் ப்ளூவில் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்