என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Boomerang"

    ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `பூமராங்' படத்தின் முன்னோட்டம். #Boomerang #Atharvaa #MeghaAkash #Indhuja
    மசாலா பிக்ஸ் நிறுவனம் சார்பில் கண்ணன் தயாரித்துள்ள படம் `பூமராங்'.

    அதர்வா நாயகனாகவும், மேகா ஆகாஷ் நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில் இந்துஜா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், சுஹாசினி மணிரத்னம், மகேந்திரன், உபேன் பட்டேல், நாராயண் லக்கி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இசை - ரதன், ஒளிப்பதிவு - பிரசன்ன எஸ்.குமார், படத்தொகுப்பு - ஆர்.கே.செல்வா, கலை - சிவ யாதவ், சண்டைப்பயிற்சி - ஸ்டண்ட் சில்வா, பாடல்கள் - விவேக், நடனம் - பிருந்தா, ஆடை வடிவமைப்பு - பூர்னிமா, தயாரிப்பு - ஆர்.கண்ணன், எழுத்து, இயக்கம் - ஆர்.கண்ணன்.



    படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஆர்.கண்ணன் பேசியதவது, “கடைக்குட்டி சிங்கம் படத்துக்கு பிறகு விவசாயத்தை பற்றிய ஒரு படம் பூமராங். 130 கோடி மக்கள் இருந்தும் நஷ்டத்தில் போகிற ஒரு துறை விவசாய துறை தான். அதை படம் பேசும். இது கமர்சியல் படமாகவும், நல்ல கருத்தை சொல்லும் படமாகவும் இருக்கும். அதர்வா இந்த படத்தில் அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்“.

    அதர்வா பேசும்போது “நாம் நல்லதோ, கெட்டதோ எது செய்தாலும் அது ஒரு நாள் நம்மை வந்து சேரும் என்பதுதான் பூமராங். கண்ணன் தயாரிப்பாளர்களின் இயக்குநர் என்பது உண்மை தான் என்றார். #Boomerang #Atharvaa #MeghaAkash

    பூமராங் டிரைலர்:

    `இமைக்கா நொடிகள்' படத்தை தொடர்ந்து அதர்வா நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் `பூமராங்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளிவைத்துள்ளது. #Boomerang #Atharvaa
    ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா - மேகா ஆகாஷ், இந்துஜா, உபென் படேல், சுஹாசினி மணிரத்னம், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்க, மசாலா பிக்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `பூமராங்'.

    படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி இருக்கும் இந்த படத்தை முதலில் டிசம்பர் 21-ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் அதே நாளில் தான் விஜய் சேதுபதியின் சீதக்காதி, தனுஷின் மாரி 2, ஜெயம் ரவியின் அடங்க மறு, விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட படங்கள் ரிலீசாக இருக்கின்றன.

    இதனால் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் பூமராங் ஒரு வாரம் தள்ளிப்போய் வருகிற டிசம்பர் 28-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநாளில் தான், ஜி.வி.பிரகாஷின் சர்வம் தாள மயம் படமும் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு, அர்ஜுன் ரெட்டி புகழ் ரதன் இசையமைக்க, செல்வா ஆர்.கே. படத்தொகுப்பை கவனித்திருக்கிறார். #Boomerang #Atharvaa #MeghaAkash

    `இமைக்கா நொடிகள்' படத்தை தொடர்ந்து அதர்வா நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் `பூமராங்' படத்திற்காக நடிகர் அதர்வா மொட்டையடித்துக் கொண்டு நடித்திருக்கிறார். #Boomerang #Atharvaa
    கண்ணன் இயக்கத்தில் அதர்வா - மேகா ஆகாஷ், இந்துஜா, உபென் படேல், சுஹாசினி மணிரத்னம், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்க, மசாலா பிக்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `பூமராங்'.

    படப்பிடிப்பு முடிந்து அடுத்த மாதம் வெளியாக இருக்கும் இந்த படத்தில் ஒரு முக்கிய காட்சிக்காக நடிகர் அதர்வா மொட்டை அடித்துக் கொண்டு நடித்திருக்கிறார். இதுகுறித்து படத்தின் இயக்குநர் கண்ணன் பேசும்போது,

    அதர்வா இயக்குனரின் நடிகர் என்பதை தமிழ் சினிமா விரைவில் அறியும். சினிமாவில் தனது ஆரம்ப காலகட்டத்திலேயே பாலாவின் பரதேசி படத்தில் யாரும் செய்யத் துணியாத கதாபாத்திரத்தில் நடித்து தன்னை நிரூபித்தவர். படத்தில் வரும் அவர் கதாபாத்திரத்தின் மூன்று வெவ்வேறு தோற்றங்களின் தீவிரத்தை பற்றி நான் விளக்கியவுடன், அவர் அதனுள் ஒன்றிவிட்டார். 



    உடனடியாக படத்தின் முக்கிய காட்சிகக்காக தனது தலையை மொட்டையடிக்க தயாரானார். இந்த காட்சிகளை சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 5 நாட்கள் கடைசி கட்ட படப்பிடிப்பில் படம் பிடிக்க முடிவு செய்தோம். மொட்டை அடித்ததால், முடி வளர இரண்டு மாதங்கள் எந்த படத்திலும் நடிக்காமல் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியது. எங்கள் படத்துக்காக அவர் அதை தியாகம் செய்ய வேண்டியிருந்தது. இமைக்கா நொடிகள் போலவே இந்த படத்துக்காகவும் அவருக்கு பாராட்டுக்கள் கிடைக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்" என்றார். 

    பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு, அர்ஜுன் ரெட்டி புகழ் ரதன் இசையமைக்க, செல்வா ஆர்.கே. படத்தொகுப்பை கவனித்திருக்கிறார். #Boomerang #Atharvaa #MeghaAkash

    `செம போத ஆகாதே' படத்தை தொடர்ந்து அதர்வா நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் `பூமராங்' படத்தின் டிரைலரை பிரபல இயக்குநர் மணிரத்னம் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். #Boomerang #Atharvaa
    `செம போத ஆகாதே' படத்திற்கு பிறகு அதர்வா நடிப்பில் `ருக்குமணி வண்டி வருது', `இமைக்க நொடிகள்', `ஒத்தைக்கு ஒத்த', `பூமராங்' உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. 

    இதில் `பூமராங்' படத்தை `இவன் தந்திரன்' படத்தை இயக்கிய ஆர்.கண்ணன் இயக்கியிருக்கிறார். அதர்வா ஜோடியாக மேகா ஆகாஷும், முக்கிய கதாபாத்திரங்களில் இந்துஜா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், சுஹாஷினி மணிரத்னம், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். வில்லனாக பாலிவுட் நடிகர் உபேன் படேல் நடித்திருக்கிறார்.

    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் தீவரமாக நடந்து வரும் நிலையில், படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நாளை நடைபெற இருக்கிறது. இதில் படத்தின் டிரைலரை நாளை காலை 10.20 மணிக்கு பிரபல இயக்குநர் மணிரத்னம் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

    மசாலா பிக்ஸ் சார்பில் கண்ணன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ரதன் இசையமைக்க, பிரசன்னா.எஸ்.குமார் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். படம் அக்டோபரில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Boomerang #Atharvaa 

    பூமராங் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் இந்துஜா, என்னுடைய வேலையை எளிதாக்கினார் என்று இயக்குனர் ஆர்.கண்ணன் கூறியிருக்கிறார். #Indhuja
    ஆர்.கண்ணன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் ‘பூமராங்’. இதில் அதர்வா முரளி நாயகனாகவும், மேகா ஆகாஷ் நாயகியாகவும் நடித்து வருகிறார்கள். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் இந்துஜா, ஆர்ஜே பாலாஜி நடித்துள்ளார்கள்.

    மேயாதமான் படம் மூலம் புகழ் பெற்ற இந்துஜாவை பற்றி இயக்குனர் கண்ணன் கூறும்போது, ‘இந்துஜாவின் திறமையை பற்றி கூற 'திறமை' என்ற வார்த்தை மிக சாதாரண வார்த்தையாக இருக்கலாம். ஒவ்வொரு காட்சியிலும் தன்னிச்சையான நடிப்பின் மூலம் எனது வேலையை எளிதாக்கினார். அவரது கதாபாத்திரத்தின் மிக உயர்ந்த தரத்தை உணர்ந்து, மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்" என்கிறார் இயக்குனர் கண்ணன். 

    அவரது கதாபாத்திரம் குறித்து மேலும் கூறும்போது, "அதர்வா முரளி மற்றும் மேகா ஆகாஷ் கதாபாத்திரங்கள் 'பூமராங்' ஸ்கிரிப்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஸ்கிரிப்ட் அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் போது, மிகச்சிறப்பான நடிப்பை வழங்கும் இன்னும் ஒரு திறமையான கலைஞரைக் கோருகிறது. இந்துஜா நடித்த இரண்டு படங்களில் அவரது நடிப்பை பார்த்தவுடன், இந்த  கதாபாத்திரத்துக்கு அவர் உடனடி தேர்வாக அமைந்தார்’ என்றார்.



    ஆக்‌ஷன் - த்ரில்லர் படமான பூமராங் போஸ்ட் புரொடக்சன் பணிகளின் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். இசை,  டிரெய்லர் மற்றும் உலக அளவில் வெளியிடும் தேதி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    கண்ணன் இயக்கத்தில் அதர்வா, மேகா ஆகாஷ், ஆர்ஜே பாலாஜி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பூமராங்’ படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Boomerang
    கண்ணன் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பூமராங்’. அதர்வா நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் மேகா ஆகாஷ் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் ஆர்.ஜே.பாலாஜி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ரதன் இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் இசையை வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியிட இருக்கிறார்கள். குறிப்பாக, சமீபத்திய 'அர்ஜுன் ரெட்டி' ஆல்பத்தின் மிகப்பெரிய வெற்றியால் புகழின் உச்சியில் இருக்கும் இந்த இளம் இசையமைப்பாளர் இசையமைத்திருப்பதால், பூமராங் படத்துக்கு இசை வெளியாகும் முன்பே எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

    "மிகச்சரியாக, நேர்மையாக சொல்வதென்றால், நான் அர்ஜுன் ரெட்டிக்கு முன்பே ரதனின் பெரிய ரசிகனாக இருந்திருக்கிறேன். தமிழ் மற்றும் தெலுங்கில் தனித்துவமான இலக்கணத்தை கொண்டு, உணர்வுகளை தூண்டும் இசையை வழங்கி வருகிறார். வெறும் இசையமைப்பதில் மட்டுமல்லாமல், மிக்ஸிங் செய்வதிலும், பாடல்களை முழுமையாக கொடுப்பதிலும் ரதன் செலுத்தும் கவனம் சிறப்பானது. அவருடன் இணைந்து பணிபுரிந்தது மொத்த 'பூமராங்' குழுவுக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது" என்கிறார் இயக்குனர் கண்ணன்.



    ஆகஸ்ட் 3ஆம் தேதி படத்தின் இசையோடு சேர்த்து படத்தின் ட்ரைலரும் வெளியிடப்பட இருக்கிறார்கள்.
    ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் பூமராங் படத்தில் நடிகை மேகா ஆகாஷ் முதல்முறையாக சொந்த குரலில் டப்பிங் பேசியிருக்கிறார். #Boomerang #MeghaAkash
    நடிகை மேகா ஆகாஷ் எனை நோக்கி பாயும் தோட்டா, ஒரு பக்கக் கதை என இரு படங்களில் நடித்து முடித்துவிட்டாலும், இரு படங்களுமே இன்னமும் ரிலீசாகவில்லை. இந்த நிலையில், மூன்றாவதாக அதர்வா ஜோடியாக பூமராங் என்ற படத்திலும் நடித்து முடித்துவிட்டார்.

    பூமராங் படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், முதல்முறையாக பூமராங் படத்தில் மேகா ஆகாஷ் தனது சொந்தக் குரலில் டப்பிங் பேசியிருக்கிறார். 

    இது பற்றி இயக்குனர் கண்ணன் கூறும்போது, "மேகா ஆகாஷை சொந்த குரலில் டப் செய்ய வலியுறுத்துவதற்கு முக்கிய காரணமே நடிகை மேகா ஆகாஷ் தான். பக்கத்து வீட்டு பெண் கதாபாத்திரத்தில் அவருடைய சிறப்பான நடிப்பு அப்படி. மிக சிறப்பாக நடித்திருக்கிறார், படத்தை பார்த்து நாங்கள் வியந்தோம். அவருடைய திறமைகள், டப்பிங் செய்யும் வேறு சில கலைஞர்களால் மறைந்து போவதை நாங்கள் விரும்பவில்லை. ஆரம்பத்தில், மேகா ஆகாஷ் தயக்கத்தோடு தான் இருந்தார். ஆனால் அவர் டப்பிங் செய்தபோது, ​​எங்களுக்கு நிறைவாக அமைந்தது" என்றார்.



    இந்த படத்தை மசாலா பிக்ஸ் சார்பில் இயக்குநர் கண்ணனே தயாரிக்கிறார். அதர்வா ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் மேயாத மான் இந்துஜா ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் உபென் படேல் வில்லனாக நடித்திருக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி காமெடியில் கலக்க, காமெடி நடிகர் சதீஷும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. #Boomerang #MeghaAkash

    அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா இல்லாமல் பூமராங் திரைப்படம் இவ்வளவு சீக்கிரம் முடிந்திருக்காது என்று இயக்குனர் கண்ணன் கூறியிருக்கிறார். #Boomerang
    அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா நடிக்க, இயக்குனர் கண்ணன் தயாரித்து இயக்கி இருக்கும் படம் ‘பூமராங்’. இப்படம் பற்றி இயக்குனர் கண்ணன் கூறும்போது, ‘படத்தின் திரைக்கதையை எழுதி முடித்தவுடனேயே, படத்தை முடிக்க 90 நாட்கள் தேவைப்படும் என்று தெளிவாக தெரிந்தது. மேலும் மிக அதிகமான முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டோம். 4 வெர்சன் திரைக்கதை இருந்தது, ஒரு நாளைக்கு 2 காட்சிகளை எடுக்க திட்டமிட்டிருந்தோம். அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா ஆகியோரின் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்திருந்தால் 45 நாட்களில் படப்பிடிப்பை முடிப்பது சாத்தியமில்லாத ஒன்றாக மாறியிருக்கும்" என்றார். 

    அதர்வாவை பற்றி கூறும்போது, "முழு படமும் அதர்வாவை சார்ந்தது. அவரிடம் இருந்து 3 வித்தியாசமான தோற்றங்கள் இந்த படத்துக்கு தேவைப்பட்டது. புரோஸ்தடிக் மேக்கப் செயல்முறையின் போது மிகவும் சுறுசுறுப்பாக இருந்தார். மிகச்சிறந்த புரோஸ்தடிக் ஒப்பனை கலைஞர்களான ப்ரீத்தி ஷீல் சிங் மற்றும் மார்க் ட்ராய் டிஸோசா 12 மணி நேர உழைப்பிற்கு பிறகு அதர்வாவுக்கு சிறந்த, சரியான தோற்றத்தை கொண்டு வந்தனர்.

    ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள இந்த படம் சென்னை, அருப்புக்கோட்டை, விருதுநகர் மற்றும் அந்தமான் தீவில் ஒரு சில பகுதிகளில் ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்பட்டுள்ளது.



    போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் 60 நாட்கள் கால அளவில் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது, ஆகஸ்ட் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருக்கிறார்கள். பாலிவுட் நடிகர் உபென் படேல், ஆர்ஜே பாலாஜி, சதீஷ், சுஹாசினி மணிரத்னம் மற்றும் பல முக்கியமான நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். 
    ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா - மேகாஷ் நடிப்பில் உருவாகும் `பூமராங்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Boomerang #Atharvaa
    `ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' படத்திற்கு பிறகு அதர்வா நடிப்பில் அடுத்ததாக `செம போத ஆகாதே' படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. 

    அதர்வா தற்போது `ருக்குமணி வண்டி வருது', `இமைக்க நொடிகள்', `ஒத்தைக்கு ஒத்த', `பூமராங்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் `பூமராங்' படத்தை இவன் தந்திரன் படத்தை இயக்கிய ஆர்.கண்ணன் இயக்குகிறார். இந்த படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக கண்ணன் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 



    இந்த படத்தில் அதர்வா ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்திருக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், சுஹாஷினி மணிரத்னம், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வில்லனாக பாலிவுட் நடிகர் உபேன் படேல் நடித்திருக்கிறார்.

    மசாலா பிக்ஸ் சார்பில் கண்ணன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ரதன் இசையமைக்க, பிரசன்னா.எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். #Atharvaa #Boomerang

    அதர்வாவும், சதீஷும் தற்போது நடித்து வரும் ‘பூமராங்’ படத்தின் இயக்குனர் ஆர்.கண்ணனை கட்டிப்போட்டு வீடியோ ஒன்றை எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள். #Boomerang
    அதர்வா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘பூமராங்’. இதில் அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். மேலும், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், சுஹாஷினி மணிரத்னம் ஆகியோர் நடிக்கிறார்கள். அதர்வாவுக்கு எதிராக மோதும் மிரட்டலான வில்லன் வேடத்தில் ஹிந்தி நடிகர் உபேன் படேல் நடிக்கிறார். 

    இந்தப் படத்தை ஆர்.கண்ணன் இயக்கி வருகிறார். இவர் இதற்கு முன்பு 'ஜெயங்கொண்டான்', 'இவன் தந்திரன்' ஆகிய படத்தை இயக்கியுள்ளார்.

    இந்நிலையில் காமெடி நடிகர் சதீஷ் ஒரு வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இயக்குனர் ஆர்.கண்ணனை கட்டிப் போட்டுவிட்டு நடிகர் அதர்வாவும் சதீஷும் ரூமை சாத்திவிட்டு வெளியே வருகிறார்கள். 



    'சிஎஸ்கே மேட்ச் நடக்குற அன்னிக்கு ஷூட்டிங் வச்சா இது தான் நிலைமை' எனச் சொல்லிவிட்டு அதர்வாவும், சதீஷும் நடந்து வருவது போல அந்த வீடியோவை காமெடியாக எடுத்திருக்கிறார்கள். 'சிஸ்கே ரசிகன் டாவ்வ்.. இருந்தாலும் நைட் ரெண்டு மணி வரைக்கும் நல்லபடியா ஷூட்டிங்கை முடிச்சிட்டோம்ப்பா' எனக் கூறியுள்ளார் சதீஷ். 
    ×