என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Brinda"
- பிருந்தா தொடர் ஓடிடி தளமான சோனி லைவில் வெளியாகியுள்ளது.
- இந்த தொடரில் பெண் எஸ் ஐ காவலர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு முன்னணி நட்சத்திர கதாநாயகியாக இருப்பவர் நடிகை திரிஷா. தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே கடந்த 22 வருடங்களாக தக்க வைத்துள்ளார் என்பது பெருமைக்குறியது.
கடந்தாண்டு வெளியான லியோ மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு படங்களிலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார் திரிஷா, இந்த இரண்டு திரைப்படமும் மாபெரும் வெற்றியை பெற்றது.
தற்பொழுது தக் லைஃப் , விடா முயற்சி , கோட் ஆகிய டாப் ஹீரோ திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் திரிஷா நடித்து இருக்கும் பிருந்தா எனும் வெப் தொடர் தற்பொழுது வெளியாகியுள்ளது.
திரிஷா ஓடிடி தொடரில் நடிப்பது இதுவே முதல்முறை, இது ஓடிடி தளமான சோனி லைவில் வெளியாகியுள்ளது.
சஸ்பன்ஸ் திரில்லர் கதைக்களத்துடன் அமைந்திருக்கும் இக்கதையில் இந்திரஜித் சுகுமாரன், ஜெய பிரகாஷ், ஆமானி, ரவிந்திர விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஷக்திகாந்த் கார்த்திக் இசை அமைத்துள்ளார். இத்தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, மராத்தி மற்றும் பெங்காலி மொழிகளில் வெளியாகியுள்ளது.
இந்த தொடரில் பெண் எஸ் ஐ காவலர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இத்தொடர் பத்திக்கையாளர் மற்றும் விமர்சர்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கி வருகிறது. இந்த வீக்கெண்டை சிறப்பாக தொடங்க ஓடிடியில் பிருந்தாவை காணத்தவறாதீர்கள்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தற்பொழுது தக் லைஃப் , விடா முயற்சி , கோட் ஆகிய டாப் ஹீரோ திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
- வெப் தொடர் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு முன்னணி நட்சத்திர கதாநாயகியாக இருப்பவர் நடிகை திரிஷா. தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே கடந்த 22 வருடங்களாக தக்க வைத்துள்ளார் என்பது பெருமைக்குறியது.
கடந்தாண்டு வெளியான லியோ மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு படங்களிலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார் திரிஷா, இந்த இரண்டு திரைப்படமும் மாபெரும் வெற்றியை பெற்றது.
தற்பொழுது தக் லைஃப் , விடா முயற்சி , கோட் ஆகிய டாப் ஹீரோ திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் திரிஷா நடித்து இருக்கும் பிருந்தா எனும் வெப் தொடர் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
திரிஷா ஓடிடி தொடரில் நடிப்பது இதுவே முதல்முறை, தொடரின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இத்தொடரை சூர்யா வங்களா இயக்கியுள்ளார். இது ஓடிடி தளமான சோனி லைவில் வெளியாகவுள்ளது.
சஸ்பன்ஸ் திரில்லர் கதைக்களத்துடன் அமைந்திருக்கும் இக்கதையில் இந்திரஜித் சுகுமாரன், ஜெய பிரகாஷ், ஆமானி, ரவிந்திர விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஷக்திகாந்த் கார்த்திக் இசை அமைத்துள்ளார். இத்தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, மராத்தி மற்றும் பெங்காலி மொழிகளில் வெளியாகவுள்ளது.
படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. இந்த தொடரில் பெண் எஸ் ஐ காவலர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ட்ரைலரின் முதல் காட்சியிலே திரிஷாவை ஒரு கொலை வழக்கில் குற்றவாளியை கண்டு பிடிக்க முடியாததால் சஸ்பெண்ட் செய்யப்படுகிறாள். பின் பிளாஷ் பேக்கில் அவள் எப்படி திறமையான் போலீஸ் அதிகாரியாக இருந்தாள் மற்றும் கிரிமினலை எப்படி அவள் கண்டுப்பிடித்தல் என்பதே தொடரின் அடிப்படை கதைக்களம் ஆகும். இந்த தொடரின் மீது ரசிகர்கள் மத்தியின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடன இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'தக்ஸ்'.
- இப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
பிரபல நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இரண்டாவது திரைப்படம் 'தக்ஸ்'. இப்படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா சிபு தயாரித்துள்ளார். இப்படத்தில் ஹிருது ஹரூன், சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை பிரியேஷ் குருசாமி மேற்கொண்டுள்ளார்.
தக்ஸ்
இப்படத்தின் கதாப்பாத்திர அறிமுக விழா கடந்த ஆண்டு சென்னையில் திரைப்பிரபலங்கள் முன்னிலையில் நடைப்பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்துள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
- கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான படம் வெந்து தணிந்தது காடு.
- இப்படத்தில் இடம்பெற்ற மல்லிப்பூ பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்திருந்த 'வெந்து தணிந்தது காடு' கடந்த 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் சித்தி இத்தானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியிருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நேற்று படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் அனைவரையும் கவர்ந்து ஹிட் அடித்தது. குறிப்பாக மல்லிப்பூ என்று தொடங்கும் பாடல் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைவரின் முணுமுணுப்பாக இருந்தது.
இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தில் இடம்பெற்ற மல்லிப்பூ என்ற பாடல் குறித்து அந்த பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றிய பிருந்தா நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில், மல்லிப்பூ பாடலின் நினைவு. இந்த பாடலுக்காக இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் மிகவும் அழகான நடனக் கலைஞர் சிம்புவுக்கு நன்றி. இந்த பாடலை ஒரே ஷாட்டில் முடித்தவுடனே பாடலுக்கான வரவேற்பைப் பார்த்தேன், நீங்கள் அனைவரும் பாடலை விரும்புவீர்கள் என்று எனக்குத் தெரியும். அதற்குக் காரணம் ஏ.ஆர்.ரகுமான் ஐயாவின் மந்திர இசை என்று குறிப்பிட்டுள்ளார்.
#Mallipoo memory🌸 thanks to @menongautham for this song🤗 and the most graceful dancer @SilambarasanTR_ 💕🌟 I saw the response for the song as soon as we completed the song in one shot and I knew you would all love the song ❤️ it's because of @arrahman sir's magical music🌟🌟🙏 pic.twitter.com/DziEP1W05r
— Brindha Gopal (@BrindhaGopal1) September 19, 2022
- இந்திய திரையுலகில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியவர் நடன இயக்குனர் பிருந்தா.
- இவர் இயக்கும் திரைப்படத்தின் டைட்டிலை பிரபலங்கள் இன்று வெளியிடுகின்றனர்.
இந்திய திரையுலகில் பல மொழிகளில் ஆயிரத்திற்கும் மேலான படங்களில் பணியாற்றியவர் நடன இயக்குனர் பிருந்தா. இவர் முதன் முதலாக ஆக்ஷன் படம் ஒன்றை இயக்குகிறார். ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பல மொழிகளில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் லுக் இன்று வெளியாகவுள்ளது. இதனை முன்னணி நட்சத்திர நடிகர்களான விஜய் சேதுபதி, ஆர்யா, ராணா, நிவின் பாலி, அனிருத் ரவிசந்தர், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பல கலைஞர்களுடன் லோகேஷ் கனகராஜ், தேசிங்கு பெரியசாமி ஆகிய இயக்குனர்களும், முன்னணி திரைப்பட விமர்சகர்களான தரன் ஆதர்ஷ் மற்றும் ஸ்ரீதர் பிள்ளை ஆகியோர் வெளியிடுகின்றனர்.
மேலும், இப்படத்தில் பணியாற்றும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படத்தை தயாரிக்கும் ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை பல்கலைக்கழக உடற்கல்வியியல் துறை சார்பில் ஏ.எல்.முதலியார் பொன்விழா நினைவு 51-வது தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. மத்திய அமலாக்கத்துறை உதவி இயக்குனர் டெர்ரான்ஸ் ரோட்ரிஜோ போட்டியை தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் சென்னை பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் வி.மகாதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நாளை வரை நடைபெறும் இந்த போட்டியில் 66 கல்லூரிகளை சேர்ந்த 1,200 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
பெண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் எம்.ஐஸ்வர்யாவும், உயரம் தாண்டுதலில் வினோதாவும், டிரிபிள் ஜம்ப்பில் ஆர்.ஐஸ்வர்யாவும், 5 கிலோ மீட்டர் நடைப்பந்தயத்தில் லாவண்யாவும் (4 பேரும் எம்.ஓ.பி.வைஷ்ணவா), 400 மீட்டர் தடை ஓட்டத்தில் திவ்யாவும் (அண்ணா ஆதர்ஷ்), 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சுஷ்மிதாவும் (எஸ்.டி.என்.பி.வைஷ்ணவா) முதலிடம் பிடித்தனர்.
ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அஜய் தர்மாவும், போல்வால்ட்டில் சந்தோஷ்குமாரும், டிரிபிள்ஜம்ப்பில் அரவிந்தும், 20 கிலோ மீட்டர் நடைப்பந்தயத்தில் வெற்றிவேலும் (4 பேரும் டி.ஜி.வைஷ்ணவா), சங்கிலி குண்டு எறிதலில் முரளிதரனும், 400 மீட்டர் தடை ஓட்டத்தில் கெவின் குமார் ராஜூம் (2 பேரும் லயோலா) தங்கம் வென்றனர். #UniversityofMadras #AthleticChampionship
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்