என் மலர்
நீங்கள் தேடியது "Britain economy"
பிரிட்டன் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை இந்தியா முந்தும் காலம் வெகு தூரத்தில் இல்லை என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். #Britaineconomy #Modi
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்துக்குட்பட்ட அன்ஜார் நகரில் முன்ட்ரா இயற்கை எரிவாயு முனையம், அன்ஜார்- முன்ட்ரா எரிவாயு குழாய் திட்டம், பலன்பூர்-பாலி-பார்மர் எரிவாயு குழாய் திட்டம் ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
இந்த தொடக்க விழாவின்போது அங்கு கூடியிருந்த மக்களிடையே பேசிய மோடி, கடந்த 20 ஆண்டுகளில் கட்ச் மாவட்டம் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.
முன்னர், தண்ணீர் பற்றாக்குறைக்கு பயந்து இந்த மாவட்டத்துக்கு வரவே பலரும் பயந்தனர். அப்படி இருந்த கட்ச் மாவட்டம் இன்று பெற்றுள்ள வளர்ச்சியை 2001-ம் ஆண்டுக்கு பின்னர் பிறந்தவர்களால் புரிந்துகொள்ள இயலாது.
எரிபொருளுக்கான பற்றாக்குறை உள்ள எந்த நாடும் வறுமையின் பிடியில் இருந்து வெளியே வர முடியாது.
நாடு சுதந்திரம் அடைந்த 60 ஆண்டுகளில் இதுவரை 13 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 10 கோடி இணைப்புகளை நாங்கள் ஆட்சிக்கு வந்த நான்காண்டுகளில் கொடுத்திருக்கிறோம்.
விரைவில் பிரிட்டன் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை இந்தியா முந்தும் காலம் வெகு தூரத்தில் இல்லை எனவும் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். #Indiawillovertake #Britaineconomy #Modi