என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Broadband"

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜிகாஃபைபர் பிராட்பேன்ட் சேவைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கும் நிலையில், சேவையின் விலை மற்றும் முழு விவரங்கள் லீக் ஆகியுள்ளது.
    ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் ஃபைபர் சார்ந்த ஹோம் பிராட்பேன்ட் சேவைகள் நவம்பர் மாதம் முதல் இந்தியாவின் 15 முதல் 20 நகரங்களில் துவங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முன்பதிவின் போது அதிக வரவேற்பை பெறும் நகரங்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சேவைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேன்ட் சேவைகள் விலை மாதம் ரூ.500 முதல் ரூ.700 முதல் துவங்கும் என்றும் குறைந்தபட்சம் 100 ஜிபி டேட்டா, 100Mbps வேகத்தில் வழங்கப்படும் என்றும், பிராட்பேன்ட் சேவையுடன் இன்டர்நெட் டிவி மற்றும் வீடியோ காலிங் உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    முன்னதாக ஜியோ சேவைகள் துவங்கப்பட்ட போது, சில மாதங்களுக்கு சேவைகள் இலவசமாக வழங்கப்பட்ட நிலையில், புதிய ஜிகாஃபைபர் சேவைகளும் இலவசமாக வழங்கபப்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர புதிதாய் ஃபைபர் சார்ந்த இணைப்புகளை ஒவ்வொரு வீடுகளுக்கும் வழங்க வேண்டிய கட்டாயத்தில் நிறுவனத்துக்கு உள்கட்டமைப்பு போன்ற பணிகளுக்கு சவால் காத்திருக்கும் என வல்லுநர்கள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி ஜூலை 5-ம் தேதி நடைபெற்ற ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ஜிகாஃபைபர் பிராட்பேன்ட் சேவைகளை அறிவித்து, 1100 நகரங்களில் சுமார் 5 கோடி வீடுகளுக்கு பிராட்பேன்ட் சேவைகளை வழங்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்தார். எனினும், ஜிகாஃபைபர் சலுகைகள் மற்றும் விலை குறித்து எவ்வித தகவலையும் அவர் வழங்கவில்லை.



    ஆகஸ்டு 15-ம் தேதி முதல் ஜிகாஃபைபர் சேவைக்கான முன்பதிவுகள் துவங்கப்பட இருக்கும் நிலையில், அதிக முன்பதிவுகளை பெறும் வட்டாரங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சேவைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போதைய பிராட்பேன்ட் மற்றும் செட்-டாப் பாக்ஸ் சலுகைகளின் விலையை விட ஜிகாஃபைபர் விலை மிகவும் குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என ஜெ.பி. மார்கன் ஸ்டான்லி தெரிவித்து இருக்கிறார்.

    தற்சமயம் பாரதி ஏர்டெல் நிறுவனம் சென்னையில், மாதம் 100 ஜிபி டேட்டாவினை, அதிகபட்சம் 8Mbps வேகத்தில் ரூ.499 என கட்டணம் நிர்ணயம் செய்து இருக்கிறது. இதேபோன்று பெங்களூருவில் மாதம் 50 ஜிபி டேட்டாவை 40Mbps வேகத்தில் ரூ.799 விலையில் வழங்குகிறது. இந்நிலையில், ஜியோவின் ரூ.700-க்கும் குறைவான விலையில் 100 ஜிபி டேட்டா வழங்கும் சேவைகள் கடும் போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக பாரதி ஏர்டெல் பிராட்பேன்ட் சேவையை மாற்றியமைத்தது. முதற்கட்டமாக ஐதராபாத் நகரில் தினசரி டேட்டா கட்டுப்பாடு அளவு நீக்கப்பட்டு அனைத்து சலுகைகளிலும் அன்லிமிட்டெட் டேட்டா வழங்கப்படுகிறது. இதனால் அதிவேக இன்டர்நெட் இணைப்பு எவ்வித டேட்டா கட்டுப்பாடும் இன்றி பயன்படுத்த முடியும்.

    ஏர்டெல் பிராட்பேன்ட் சேவைகள் ரூ.349 விலையில் துவங்கி அதிகபட்சம் ரூ.1,299 வரை வழங்கப்படுகிறது. ஆறு மாதம் மற்றும் ஒருவருடத்திற்கான பிராட்பேன்ட் சலுகைகளை தேர்வு செய்வோருக்கு ஏர்டெல் நிறுவனம் 20% வரை தள்ளுபடி வழங்குவதாக அறிவித்தது.
    ஜியோ ஜிகாஃபைபர் சேவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதும் பாரதி ஏர்டெல் நிறுவன பிராட்பேன்ட் சலுகைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



    இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜிகாஃபைபர் பிராட்பேன்ட் சேவை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், பாரதி ஏர்டெல் பிராட்பேன்ட் சேவையை மாற்றியமைத்து இருக்கிறது. முதற்கட்டமாக ஐதராபாத் நகரில் தினசரி டேட்டா கட்டுப்பாடு அளவு நீக்கப்பட்டு இருக்கிறது. ஜியோ பிராட்பேன்ட் சேவைகளில் 1Gbps வேகத்தில் இன்டர்நெட் வழங்கப்பட இருக்கும் நிலையில், பிராட்பேன்ட் சந்தையில் சேவையை வழங்கும் மற்ற நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடி சூழல் ஏற்பட இருக்கிறது.

    ஐதராபாத் வட்டாரத்தில் ஏர்டெல் பிராட்பேன்ட் சேவைகள் ரூ.349 விலையில் துவங்கி அதிகபட்சம் ரூ.1,299 வரை வழங்கப்படுகிறது. ஆறு மாதம் மற்றும் ஒருவருடத்திற்கான பிராட்பேன்ட் சலுகைகளை தேர்வு செய்வோருக்கு ஏர்டெல் நிறுவனம் 20% வரை தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது.

    புதிய மாற்றங்களை தொடர்ந்து ஐதராபாத் நகரில் வழங்கப்படும் அனைத்து சலுகைகளிலும் அன்லிமிட்டெட் டேட்டா வழங்கப்படுகிறது. இதனால் அதிவேக இன்டர்நெட் இணைப்பு எவ்வித டேட்டா கட்டுப்பாடும் இன்றி பயன்படுத்த முடியும். இதே போன்ற சலுகைகள் ஐதராபாத் தவிர மற்ற நகரங்களில் ஏர்டெல் பிராட்பேன்ட் பயன்படுத்துவோருக்கு வழங்கப்படவில்லை. சென்னையில் ரூ.999 விலைக்கு 300 ஜிபி டேட்டா 100Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது.



    ஐதராபாத்தில் ரூ.349 பிராட்பேன்ட் சேவையை தேர்வு செய்வோருக்கு 8Mbps வேகத்தில் இன்டர்நெட் வழங்கப்படுகிறது, இதேபோன்று ரூ.1,299 சேவையில் அதிகபட்சம் 100Mbps வேகத்தில் இன்டர்நெட் வழங்கப்படுகிறது. இத்தகைய வேகத்தை கொண்டு மின்னஞ்சல், ஆடியோ அல்லது வீடியோ தரவுகளை டவுன்லோடு செய்யவும், இணையத்தில் பிரவுசிங் செய்யவும் முடியும்.

    எனினும் ஜியோ ஜிகாஃபைபர் சேவைகள் அதிகபட்சம் 1Gbps வேகத்தில் இன்டர்நெட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவைக்கான முன்பதிவுகள் இந்தியா முழுக்க 1,100 நகரங்களில் ஆகஸ்டு 15-ம் தேதி முதல் துவங்க இருக்கிறது.

    ஏர்டெல் சேவைகளில் அன்லிமிட்டெட் டேட்டா சீரான வேகத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையிலும், இவற்றில் உண்மையில் குறிப்பிட்ட அளவு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. தற்சமயம் தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் மட்டும் வணிகமில்லா பயன்பாடுகளுக்கு அன்லிமிட்டெட் சலுகைகள் வழங்கப்படுகின்றன. மாதம் 3000 ஜிபி-க்கும் அதிக டேட்டா பயன்படுத்தப்படுவதை வணிக ரீதியிலானவை என ஏர்டெல் குறிப்பிடுகிறது.

    அன்லிமிட்டெட் டேட்டா சலுகையில் முதற்கட்டமாக ஐதராபாத் நகரில் ஏர்டெல் நிறுவனம் ரூ.349, ரூ.449, ரூ.699 மற்றும் ரூ.1,299 விலையில் நான்கு சலுகைகளை அறிவித்திருக்கிறது. கடந்த மாதம் ஏர்டெல் பிராட்பேன்ட் சேவைகளை ஒரு வருடத்திற்கு வாங்குவோருக்கு 20% தள்ளுபடி வழங்குவதாக ஏர்டெல் அறிவித்தது. இதேபோன்று ஆறு மாதத்திற்கு கட்டணம் செலுத்துவோருக்கு 15% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகை நாட்டில் ஏர்டெல் பிராட்பேன்ட் சேவை வழங்கப்படும் அனைத்து வட்டாரங்களிலும் வழங்கப்படுகிறது.
    புதிதாய் லேப்டாப் அல்லது கணினி வாங்குவோருக்கு 20Mbps வேகத்தில் பிராட்பேன்ட் இணைப்பை இலவசமாக வழங்குவதாக பி.எஸ்.என்.எல். தெரிவித்துள்ளது.
     




    பிரீபெயிட் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு புதிய சலுகைகள அறிவித்து வரும் பி.எஸ்.என்.எல். தற்சமயம், பிராட்பேன்ட் சேவையில் புதிய பயனர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளது.

    பி.எஸ்.என்.எல். அறிவித்திருக்கும் புதிய சலுகையில் அந்நிறுவனம் 20Mbps வேகத்தில் பிராட்பேன்ட் இணைப்பை இலவசமாக வழங்குவதாக தெரிவித்துள்ளது. அதன்படி இலவச இணைப்பு கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் வாங்குவோருக்கு வழங்கப்படுகிறது. 

    இந்த சலுகையில் தேர்வாகும் வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ்.என்.எல். சமீபத்தில் அறிமுகம் செய்த பி.எஸ்.என்.எல். பிபிஜி காம்போ யுஎல்டி 45 ஜிபி திட்டம் வழங்கப்படுகிறது.

    இந்த சலுகை 20Mbps வேகத்தில் பி.எஸ்.என்.எல். அறிவித்த பல்வேறு சலுகைகளுடன் சேர்த்து அறிவிக்கப்பட்டது. பி.எஸ்.என்.எல். பிபிஜி காம்போ யுஎல்டி 45 சலுகையின் கட்டணம் ரூ.99 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    இது குறித்து டெலிகாம் டாக் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி புதிதாய் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர் வாங்குவோருக்கு பி.எஸ்.என்.எல். சலுகை இலவசமாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதிய பிபிஜி காம்போ யுஎல்டி 45 ஜிபி சலுகையில் ரூ.99 விலையில் தினமும் 1.5ஜிபி டேட்டா 20Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா அளவை கடந்ததும் இன்டர்நெட் வேகம் 1Mbps ஆக குறைக்கப்படும். இத்துடன் இந்த சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.

    இந்த சலுகையுடன் பி.எஸ்.என்.எல். பிபிஜி காம்போ யுஎல்டி 150 ஜிபி சலுகையில் ரூ.199, பி.எஸ்.என்.எல். பிபிஜி காம்போ யுஎல்டி 300 ஜிபி சலுகை ரூ.299 மற்றும் பி.எஸ்.என்.எல். பிபிஜி காம்போ யுஎல்டி 600ஜிபி டேட்டா ரூ.399 விலையில் மூன்று சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இதில் ரூ.199 சலுகையில் தினமும் 5 ஜிபி டேட்டா, 10 ஜிபி டேட்டா மற்றும் 20 ஜிபி டேட்டா தினமும் வழங்கப்படுகிறது.
    பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்திருக்கும் புதிய சலுகையில் மூன்று நம்பர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
    புதுடெல்லி:

    பிஎஸ்என்எல் நிறுவனத்தின் புதிய பிராட்பேன்ட் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1,199 விலையில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய சலுகை ஃபேமிலி பிளான் என அழைக்கப்படுகிறது. இந்த சலுகையில் பிராட்பேன்ட் இன்டர்நெட் மற்றும் மொபைல் டேட்டா உள்ளிட்டவற்றை வழங்குகிறது.

    புதிய பிஎஸ்என்எல் ஃபேமிலி சலுகையில் 10Mbps வேகத்தில் பிராட்பேன்ட் இணைப்பு மற்றும் பிஎஸ்என்எல் பிரீபெயிட் கனெக்ஷன்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்தியா முழுக்க அறிவிக்கப்பட்டுள்ள புதிய சலுகையில் 10Mbps பிராட்பேன்ட் இன்டர்நெட் மாதம் 30 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த டேட்டா அளவு கடந்ததும் டேட்டா வேகம் 2Mbps  ஆக குறைக்கப்படும்.

    பிஎஸ்என்எல் புதிய சலுகைக்கான அறிவிப்பு அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரீசார்ஜ் செய்யும் போது வாடிக்கையாளர்கள் மூன்று பிஎஸ்என்எல் எண்களை தேர்வு செய்யலாம். ஒவ்வொரு சிம் கார்டிலும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 



    இந்த சலுகையின் கீழ் வழங்கப்படும் டேட்டா அளவு நிறைவுற்றதும், டேட்டா வேகம் 40Kbps ஆக குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பிஎஸ்என்எல் சலுகையில் எஸ்எம்எஸ் வசதி வழங்கப்படவில்லை. எனினும், பிரத்யேக ரிங்பேக் டோன் சேவை இலவசமாக வழங்கப்படுகிறது.

    வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் மூன்று பிஎஸ்என்எல் எண்களில் ஒன்றுக்கு இலவச ஆன்டைன் டிவி சேவை வழங்கப்படுகிறது. மேலும் ஒரு சிம் கார்டுக்கு ஆன்லைன் கல்வியில் ஒரு பாடத்திற்கு ஒருமாத சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.

    சமீபத்தில் ஜியோ ஃபைபர் சேவைக்கு போட்டியாக பிஎஸ்என்எல் சார்பில் ஃபைபர் பிராட்பேன்ட் சேவை துவங்கப்பட்டது. இத்துடன் மூன்று FTTH சலுகைகளில் டேட்டா அளவை மும்மடங்கு அதிகரித்தது. ஃபைபர் பிராட்பேன்ட் சலுகைகளில் ரூ.1045, ரூ.1395 மற்றும் ரூ.1895 விலையிலான சலுகைகளில் அதிகபட்சம் 200 ஜிபி டேட்டா கூடுதலாக வழங்குவதாக அறிவித்தது.
    ×