search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Broken Pipe"

    • உடன்குடி பஜார் பகுதியில் அனைத்து இடங்களிலும் மத்திய அரசின் கேபிள் லைன் பதிக்கும் பணிக்காக ஜே.சி.பி. எந்திரங்களின் மூலம் தோண்டப்பட்டு வருகிறது.
    • இதனால் 2 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விடப்படும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

    உடன்குடி:

    உடன்குடி பஜார் பகுதியில் அனைத்து இடங்களிலும் கிராமத்திற்காக வேண்டி மத்திய அரசின் கேபிள் லைன் பதிக்கும் பணிக்காக ஜே.சி.பி. எந்திரங்களின் மூலம் தோண்டப்பட்டு வருகிறது. இவ்வாறு தோண்டுகின்ற போது அனைத்து இடங்களிலும் 18 வார்டுகளுக்கு செல்லக்கூடிய மெயின் குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் குடிதண்ணீர் வீணாகிறது. இதனால் 2 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விடப்படும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 8 நாட்களாக நகரம் முழுவதும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கிடப்பது மற்றும் தண்ணீர் தேங்கி வீணாக செல்வதால் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் போக்குவரத்து நெருக்கடியில் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமம் அடைந்து உள்ளனர். அனைத்து வார்டுகளில் உள்ள பொதுமக்கள் வெயில் காலத்தில் தண்ணீர் வினியோகம் இல்லாத காரணத்தினால் அவதிப்படுவதாக புகார் கூறுகிறார்கள்.

    • தென்காசி மாவட்டம் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குழாய் மூலமாக தாமிரபரணி கூட்டு குடிநீர் வழங்கப்படுகிறது.
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு தண்ணீரானது சாலையில் வீணாக வெளியேறி வருகிறது.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை, பாவூர்சத்திரம், வழி சுரண்டை நெடுஞ்சாலை வழியாக 20-க்கும் மேற்பட்ட கிராமங்க ளுக்கு குழாய் மூலமாக தாமிரபரணிகூட்டு குடிநீர் வழங்கப்படுகிறது.

    செங்கோட்டை சன்னதி தெரு நடுமுடுக்கு வழியாக புதூர் பேரூராட்சி பகுதி களுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் செல்லும் பைப் லயன் செல்லுகிறது. இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு தண்ணீரானது சாலையில் வீணாக வெளியேறி வருகிறது. இதனால் அங்கு சகதிகாடாக காட்சி யளிக்கிறது. அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த 3 நாட்களாக குடிநீர் குழாய் பழுதாகி குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.
    • இந்த நீர் சாலையில் உள்ள பள்ளங்களில் தேங்கி கிடக்கிறது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த பேட்டை-டவுன் சாலையில் குளத்தங்கரை பள்ளிவாசல் அருகே கடந்த 3 நாட்களாக குடிநீர் குழாய் பழுதாகி குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.

    இந்த நீர் சாலையில் உள்ள பள்ளங்களில் தேங்கி கிடக்கிறது. இதனால் சாலை சேதம் அடைவதோடு அந்த வழியாக செல்கின்ற வாகனங்களும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

    மேலும் வேகமாக செல்லும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் இந்த பள்ளத்தில் இறங்கும்போது அந்த வழியாக நடந்து செல்பவர்கள் மீது அசுத்தமான தண்ணீர்பட்டு வருகிறது.

    எனவே தண்ணீர் வீணாகாமல் தடுக்க உடனடியாக குடிநீர் குழாய் பழுதை சரி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×