என் மலர்
நீங்கள் தேடியது "Bronze"
18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். #AsianGames2018
ஜகார்தா:
18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேசியாவில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.
இந்தியா, சீனா, ஜப்பான், கொரியா உள்பட 45 நாடுகளை சேர்ந்த 11,300 வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றனர். 40 விளையாட்டுகளில் 465 பிரிவுகளில் பந்தயம் நடக்கிறது.
இந்தியா சார்பில் 312 வீரர்களும், 257 வீராங்கனைகளும் ஆக மொத்தம் 570 பேர் பங்கேற்று உள்ளனர். 36 விளையாட்டுகளில் இந்தியா கலந்து கொள்கிறது. ஆசிய விளையாட்டில் இன்று முதல் போட்டிகள் தொடங்கியது.
தொடக்க நாளில் துப்பாக்கி கூடுதலில் இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. 10 மீட்டர் ஏர்ரைபிள் கலப்பு அணிகள் பிரிவில் அபுர்வி சண்டிலா-ரவிக்குமார் ஆகியோர் வெண்கல பதக்கத்தை பெற்றுக் கொடுத்தனர்.
இந்நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. அபுர்வி சண்டிலா-ரவிக்குமார் ஆகியோர் வெண்கல பதக்கம் வென்றுள்ளதற்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.