என் மலர்
நீங்கள் தேடியது "brothers strangled"
கிருமாம்பாக்கம் அருகே குடும்ப தகராறில் அண்ணனை கழுத்தை நெரித்து கொல்ல முயன்ற தம்பியை போலீசார் தேடி வருகிறார்கள்.
பாகூர்:
கிருமாம்பாக்கம் அருகே ஈச்சங்காடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது40),கூலித்தொழிலாளி. இவரது தம்பி செந்தில். இருவர் குடும்பத்தினருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது.
அதேபோல் நேற்றும் இருவர் குடும்பத்திற்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த செந்தில், ரமேசை சரமாரியாக தாக்கி அவரது கழுத்தை நெரித்தார். மேலும் இதனை தடுக்க முயன்ற ரமேஷின் மனைவி குப்பம்மாளை (34) தாக்கி விட்டு செந்தில் தப்பி ஓடிவிட்டார்.
கழுத்து நெரிக்கப்பட்டதால் ரமேஷ் ஆபத்தான நிலையில் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து குப்பம்மாள் கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து செந்திலை தேடி வருகிறார்கள்.