search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "brown sugar"

    • 12 கிலோ ஹெராயின் மற்றும் பிரவுன் சுகர் பறிமுதல் செய்யப்பட்டது.
    • முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    ஆசாம் மாநிலம், தோலாய் பகுதியில் உள்ள லோக்நாத்பூரில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில், மர்ம நபர்களிடம் இருந்து 110 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

    சம்பவ இடத்தில் இருந்து,12 கிலோ ஹெராயின் மற்றும் பிரவுன் சுகர் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    இந்த கடத்தல் போதைப் பொருட்கள் தோல் பைகள் மற்றும் சோப்பு பெட்டிகளில் வைக்கப்பட்டு அண்டை மாநிலத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டபோது பிடிபட்டது.

    அசாம் போலீசார் கைது செய்யப்பட்டுள்ள நபரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    காஷ்மீரில் ரூ.36 கோடி மதிப்பிலான 12 கிலோ எடையுடைய பிரவுன் சுகர் மற்றும் ஆயுதங்களை எல்லைப்பாதுகாப்பு படையினர் இன்று பறிமுதல் செய்தனர்.
    ஸ்ரீநகர் :

    காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தில் உள்ள  எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே 36 கோடி ரூபாய் மதிப்பிலான 12 கிலோ எடையுடைய பிரவுன் சுகர் மற்றும் ஆயுதங்களை வைத்திருந்த 4 பேரை எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் இன்று கைது செய்தனர்.

    இந்த கைது சம்பவம் குறித்து பேசிய எல்லை பாதுகாப்புப்படை ஐ.ஜி. சோனாலி மிஷ்ரா, ’போதை மருந்து கடத்தப்படுவதாக எல்லை பாதுகாப்புப்படையின் நுண்ணறிவு பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை சாவடிகளில் கண்கானிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

    கர்னா பகுதியில் அமைந்துள்ள சத்போரா சோதனை சாவடியில் இரண்டு வாகனங்களை சோதனை செய்த போது, அதில் 12 பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டிருந்த 12 கிலோ எடையுடைய பிரவுன் சுகர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன், மொத்த மதிப்பு 36 கோடி ரூபாய் ஆகும். போதைப்பொருளை கடத்தி வந்தவர்கள், ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கி குண்டுகளையும் உடன் வைத்திருந்தனர்.

    இதையடுத்து, வாகனத்தில் இருந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையின் போது கைது செய்யப்பட்டவர்களில் ஆலம் பார் மற்றும் யூசுப் கவாஜா எனும் இருவர் மட்டுமே இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது’ என தெரிவித்தார்.

    மேலும், இதுதொடர்பாக வழக்கு பதியப்பட்டு விரிவான விசாரணை மேற்கொண்டு வருவதாக சோனாலி மிஷ்ரா கூறினார்.
    ×