என் மலர்
நீங்கள் தேடியது "Building permit"
- கட்டமைப்பு வசதிக் கட்டணங்களில் இருந்து 100 சதவீதம் விலக்கு இதில் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- கட்டிடப்பணி நிறைவடைந்ததும் முடிவுச் சான்று பெற வேண்டியதிலிருந்து விலக்கு போன்ற சலுகைகளும் இத்திட்டத்தில் உள்ளது.
சென்னை:
நடுத்தர மக்களின் வீடு கட்டும் திட்டத்தை எளிதாக்கும் வகையில், கட்டிட அனுமதியை ஆன்லைன் மூலம் பெறும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைக்கிறார்.
2500 சதுரடி வரையுள்ள மனையில் 3500 சதுர அடியில் கட்டப்பட உள்ள வீடுகளுக்கு இத்திட்டம் பொருந்தும் என்றும் பரிசீலனை மற்றும் கட்டமைப்பு வசதிக் கட்டணங்களில் இருந்து 100 சதவீதம் விலக்கு இதில் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
www.onlineppa.tn.gov.in ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரர் அளிக்கும் விவரத்தின் அடிப்படையில் இவற்றுக்கு உடனடி அனுமதி கிடைக்கும் என்றும் விண்ணப்பதாரர் எந்த அலுவலகத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. கட்டிடப்பணி நிறைவடைந்ததும் முடிவுச் சான்று பெற வேண்டியதிலிருந்து விலக்கு போன்ற சலுகைகளும் இத்திட்டத்தில் உள்ளது.
- வீடுகள் கட்டும் மக்களின் கனவை எளிதாக்கவே ஆன்லைன் மூலம் கட்டட அனுமதி.
- ஆய்வின்போது விண்ணப்பத்தில் இருக்கும் விபரங்கள் சரியாக இருக்க வேண்டும்.
சென்னை:
ஆன்லைன் மூலம் உடனடியாக கட்டட அனுமதி பெறுவது தொடர்பாக அமைச்சர் முத்துசாமி விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* வீடுகள் கட்டும் மக்களின் கனவை எளிதாக்கவே ஆன்லைன் மூலம் கட்டட அனுமதி அளிக்கப்படுகிறது.
* ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரர் அளிக்கும் விபரங்கள் அடிப்படையில் உடனடி அனுமதி அளிக்கப்படும்.
* ஆய்வின்போது விண்ணப்பத்தில் இருக்கும் விபரங்கள் சரியாக இருக்க வேண்டும் என்று கூறினார்.