search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "building worker died"

    மோட்டார் சைக்கிள் விபத்தில் கட்டிட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனியை அடுத்த மேலகிருஷ்ணன் புதூர் ராமன் புதூரைச் சேர்ந்தவர் சிவசக்தி (வயது 38), கட்டிடத் தொழிலாளி. இவர், நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டு வந்தார். மாலை வேலை முடிந்து நாகர்கோவிலில் இருந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். இருளப்பபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் சிவசக்தி தூக்கி வீசப்பட்டார். தலை மற்றும் உடல் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்ட அவருக்கு ரத்தம் கொட்டியது. ரத்த வெள்ளத்தில் சிவசக்தி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    இதையடுத்து ஏராளமான மக்கள் அங்கு திரண்டனர். பின்னர் அவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிவசக்தியை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே சிவசக்தி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்து பற்றி தகவல் அறிந்ததும், நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பலியான சிவசக்தியின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரியில் திரண்டிருந்தனர்.

    பலியான சிவசக்திக்கு ஜெயந்தி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    சாத்தூர் அருகே பைக் விபத்தில் பலத்த காயம் அடைந்த கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

    சாத்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்த முருகன் மகன் சண்முகசுந்தரம் (35). இவர் சிவகாசியில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

    சிவகாசியில் இருந்து கோவில்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது சாத்தூர் ஓடைப்பட்டி அருகே நெடுஞ்சாலை ஒரத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலியில் எதிர் பாராதவிதமாக மோதியதில் சண்முகசுந்தரம் படுகாயமடைந்தார்.

    அவர் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சண்முகசுந்தரம் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மகள் மாயமானது குறித்து ஊரார் தவறாக பேசிவிடுவார்களோ என்று எண்ணி கட்டிட தொழிலாளி தீக்குளித்து இறந்த சம்பவம் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பர்வதனஅள்ளி சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (வயது 38). கட்டிடதொழிலாளி. இவரது மனைவி விமலாராணி (31). இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளனர். இவர் கடந்த 10-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிபோன அவர்கள் மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.

    கடந்த 11-ந்தேதி அவர் மீண்டும் வீட்டிற்கு வந்து விட்டார். தனது மகள் மாயமாகி மீண்டும் திரும்பி வந்ததால் ஊரார் ஏளனமாக பேசி விடுவார்களோ என்று கந்தசாமி மிகவும் மனவருத்தத்துடன் காணப்பட்டார்.

    நேற்று மகளுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்படுவதாக பள்ளியில் இருந்து அழைப்பு வந்தது. விமலாராணி தனது கணவரிடம் பள்ளிக்கு சென்று சான்றிதழை வாங்கி வருமாறு கூறினார். அதற்கு அவர் நான் வீட்டிலேயே இருக்கிறேன். நீ பள்ளிக்கு சென்று சான்றிதழை வாங்கி வா என்று கூறி விமலா ராணியை அனுப்பி வைத்தார்.

    உடனே விமலாராணி பள்ளிக்கு சென்று சான்றிதழை வாங்கி கொண்டு திரும்பி வந்தார். அப்போது அங்கு உடலில் மண்எண்ணையை ஊற்றி கொண்டு கையில் தீப்பெட்டியுடன் கந்தசாமி நின்று கொண்டிருந்தார். இதனை கண்ட விமலா ராணி வேண்டாம் என்று கதறினார். அதற்குள் அவர் உடலில் தீவைத்துக் கொண்டார். 

    இதில் அவரது உடல் முழுவதும் தீ பரவியதால் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து கந்தசாமியை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    சம்பவம் குறித்து பென்னாகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனது மகள் மாயமானது குறித்து ஊரார் தவறாக பேசிவிடுவார்களோ என்று எண்ணி கட்டிட தொழிலாளி தீக்குளித்து இறந்த சம்பவம் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அருகே பழையபேட்டை நரசிம்மன்சாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 65). கட்டிட தொழிலாளி. இவர் தனது மொபட்டில் சம்பவத்தன்று நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள சாலையில் சென்றார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்பாராத விதமாக பெருமாள் வந்த மொபட்டு மீது மோதியது. இதில் தூக்கில் வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். 

    அப்போது அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு அருகில் இருந்த கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பெருமாள் வரும் வழியிலேயே உயிர் இழந்தார் என்று தெரிவித்தனர். 

    இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    களக்காடு அருகே பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மலையடிபுதூரை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 22). கட்டிட தொழிலாளி. இவரும் இவரது நண்பருமான மாவடியை சேர்ந்த குமாரும் (20) நேற்று இரவில் மோட்டார்சைக்கில் களக்காட்டில் இருந்து மாவடிக்கு சென்றனர். சாலைப்புதூர் அடுத்த அண்ணா நகரில் சென்ற போது வள்ளியூரில் இருந்து களக்காடு நோக்கி வந்த அரசு பஸ் பைக் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட பாஸ்கர் சம்பவ இடத்திலேயே பலியானார். குமார் படுகாயம் அடைந்தார்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் களக்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்த குமாரை மீட்டு களக்காடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பாஸ்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதுபற்றி களக்காடு இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிலா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திருவட்டார் அருகே அரசு பஸ்- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
    திருவட்டார்:

    திருவட்டார் அருகே செறுகோல் பகுதியை சேர்ந்தவர் தங்கையன். இவரது மகன் அனில்குமார் (வயது 32) கட்டிட தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இன்று காலை அவர் மோட்டார் சைக்கிளில் திருவட்டாரில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது மார்த்தாண்டத்தில் இருந்து பெரும் சிலம்பு நோக்கி அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. கல்லுப்பாலம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளும், அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. 

    இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து அனில்குமார் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு ஆற்றூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். வழக்கமாக அந்த சாலை அதிகமான போக்குவரத்து நெருக்கடி நிறைந்த சாலையாகும். அந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்களும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
    களக்காடு அருகே பைக் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்

    களக்காடு:

    களக்காடு அருகில் உள்ள கீழப்பத்தை வடக்குத் தெருவை சேர்ந்தவர் சுடலையாண்டி மகன் உச்சி மாகாளி (38). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி சகுந்தலா (34) என்ற மனைவியும், முகேஷ் (9) என்ற மகனும், ஹரினி (7) என்ற மகளும் உள்ளனர். 

    இந்நிலையில் நேற்று உச்சிமாகாளியு,ம், படலையார்குளத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி சிவன்பாண்டி (38) யும் கோவில் கொடை விழாவிற்கு ஆடு வாங்குவதற்காக பைக்கில் சேரன்மகாதேவி நோக்கி சென்றார். பத்மநேரி ரோட்டில் சென்ற போது எதிரில் களக்காடு நோக்கி வந்து கொண்டிருந்த அழகப்ப புரத்தை சேர்ந்த கண்னன் என்பவர் ஓட்டி வந்த பைக்கும், உச்சிமாகாளி சென்ற பைக்கும் மோதியது. 

    இதில் உச்சிமாகாளி சம்பவ இடத்திலேயே இறந்தார். அவருடன் சென்ற சுடலையாண்டி மற்றொரு பைக்கை ஓட்டி வந்த அழகப்பபுரத்தை சேர்ந்த கண்ணன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது பற்றி களக்காடு இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×