search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bus price சென்னை பஸ்"

    சென்னையில் இருந்து செல்லும் வெளியூர் பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்து வருவதற்கு பயணிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். #Diwali

    சென்னை:

    அரசு பஸ்களில் பல்வேறு வகையான கட்டணம் நிர்ணயித்து வசூலிக்கப்படுகிறது. சாதாரண பஸ், எக்ஸ்பிரஸ், சூப்பர் டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ் என வகைப்படுத்தப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் இயக்கப்படும் பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

    சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பஸ்களில் நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.

    பூந்தமல்லியில் இருந்து திருவள்ளூருக்கு எக்ஸ்பிரஸ் பஸ் கட்டணம் ரூ.31 ஆகும். ஆனால் ரூ.35 வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு பயணியிடமும் ரூ.4 கூடுதலாக பெறப்படுகிறது. சில்லறை தட்டுப்பாட்டை காரணம் காட்டி முழு தொகையாக வசூலிக்கப்படுகிறது.

    மேலும் சூப்பர் டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ் என்ற பெயரில் அதிக கட்டணம் சாதாரண பேருந்துகளுக்கு வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களில் இருக்க வேண்டிய எந்த வசதியும் இல்லாமல் சாதாரண இருக்கைகள் உள்ள பஸ்களுக்கு அதிக கட்டணம் பெறப்படுகிறது. மேலும் பெரும்பாலான பஸ் நிறுத்தங்களிலும் இந்த பஸ் பயணிகளை இறக்கி, ஏற்றி செல்கின்றனர். அல்ட்ரா டீலக்ஸ் என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலித்து வருவதற்கு பயணிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

    சென்னையில் இருந்து திருண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி, ஆரணி, வேலூர், வந்தவாசி, காஞ்சீபுரம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்களில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்பதற்கு பயணிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    கட்டண விரங்களில் அடங்கிய பட்டியலை பொது மக்களிடம் வினியோகித்து அரசு பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை திருவள்ளூர் பஸ் நிலையத்தில் பகிரங்கமாக வெளிப்படுத்தினர்.

    இதுகுறித்து விழுப்புரம் போக்குவரத்து கழக அதிகாரி கூறுகையில், கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை என்று மறுத்துள்ளார். #Diwali

    ×