search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bus route day"

    • எம்டிசி பேருந்தின் மீது ஏறி ரகளை செய்யும் வீடியோ சமூக வளைத்தளங்களில் வைரலானது.
    • வானகரம் மற்றும் திருவேற்காடு பகுதியை சேர்ந்த 2 மாணவர்கள் கைது.

    கோடை விடுமுறை முடிந்த நிலையில், சென்னையில் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் சாலையில் கும்பலாகவும், பேருந்துகளில் கானா பாடல்கள் பாடியும், முக்கியமாக கல்லூரிக்கு தினசரி வந்து செல்லும் பேருந்து மற்றும் ரெயில் வழித்தடங்களில் ரூட் தல என்ற பெயரில் ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், கல்லூரி மாணவர்கள் தங்களின் 'ரூட் தல' கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக எம்டிசி பேருந்தின் மீது ஏறி ரகளை செய்யும் வீடியோ சமூக வளைத்தளங்களில் வைரலானது.

    பிராட்வே மற்றும் பூந்தமல்லி இடையே இயக்கப்படும் வழித்தட எண் 53, எம்டிசி பேருந்தின் மேற்கூரையில் மாணவர்கள் ஏறிச் சென்றனர். அவர்களில் சிலர் சாலையில் ரகளை செய்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அரும்பாக்கம் மற்றும் டிபி சத்திரம் காவல் எல்லையில், ஜூலை 5 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த வீடியோ வைரலானதை அடுத்து, பேருந்தில் ஏறி ரகளையில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மூன்று போலீசார் கைது செய்துள்ளனர்.

    வானகரம் மற்றும் திருவேற்காடு பகுதியை சேர்ந்த 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தியதில் 53 பஸ் ரூட்டை சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    ×