search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BWF World Championships"

    • எச்எஸ் பிரனோய் 24-22, 21-10 என்ற நேர்செட்டில் காலே கோல்ஜோனை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
    • இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் 21-12, 21-7 என்ற நேர்செட்டில் ஜார்ஜெஸ் ஜூலியன் பாலை தோற்கடித்து 2-வது சுற்றை எட்டினார்.

    28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க் தலைநகர் ஹோபன்ஹேகன் நகரில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் எச்எஸ் பிரனோய் 24-22, 21-10 என்ற நேர்செட்டில் காலே கோல்ஜோனை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் 21-12, 21-7 என்ற நேர்செட்டில் ஜார்ஜெஸ் ஜூலியன் பாலை தோற்கடித்து 2-வது சுற்றை எட்டினார்.

    இதனையடுத்து நடந்த மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் சுற்றிலேயே வெளியேறி ஏமாற்றம் அளித்துள்ளார். அவர் டென்மார்க் வீரரான நிஷிமோட்டோவிடம் 14-21, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

    • உலக சாம்பியனான ஜப்பான் ஜோடியை வீழ்த்தி இந்திய ஜோடி அசத்தியது.
    • சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராஜ் ஷெட்டி ஜோடி 24-22, 15-21, 21-14 என்ற செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறியது.

    டோக்கியோ:

    உலக பேட்மிண்டன் சாம்பியன் ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.

    ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று கால் இறுதி ஆட்டங்கள் நடந்தது. ஒரு ஆட்டத்தில் இந்தியாவின் எம்.ஆர். அர்ஜுன்-துருவ் கபிலா ஜோடி இந்தோனேசியாவின் முகமது ஹசன்-ஹந்திரா செடியவான் ஜோடியுடன் மோதியது.

    இதில் இந்திய ஜோடி 8-21, 14-21 என்ற நேர் செட் கணக்கில் தோற்று அரை இறுதி வாய்ப்பை இழந்தது. மற்றொரு கால் இறுதியில் இந்தியாவின் சாத்விக் ரங்கி ரெட்டி-சிராஜ் ஷெட்டி ஜோடி ஜப்பான் ஜோடியான கோபயாஷி-ஹோக்கியுடன் பலப்பரீட்சை நடத்தியது.

    இதில் முதல் செட்டை இந்திய ஜோடி 24-22 என்ற கணக்கில் கைப்பற்றியது. 2-வது செட்டை ஜப்பான் ஜோடி தனதாக்கியது.

    இதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டை கைப்பற்ற இரு ஜோடிகளும் போராடினர். இதில் இந்திய ஜோடியின் கை ஓங்கியது.

    அந்த செட்டை 21-14 என்ற கணக்கில் கைப்பற்றினர். இதன் மூலம் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராஜ் ஷெட்டி ஜோடி 24-22, 15-21, 21-14 என்ற செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறியது. உலக சாம்பியனான ஜப்பான் ஜோடியை வீழ்த்தி இந்திய ஜோடி அசத்தியது.

    அரை இறுதிக்கு தகுதி பெற்றதால் இந்திய ஜோடி பதக்கத்தை உறுதி செய்தது. இதன் மூலம் உலக பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் முதல் முறையாக சாத்விக் ரங்கி ரெட்டி-சிராஜ் ஷெட்டி ஜோடி உறுதிசெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்றில் இந்தியாவின் அஸ்வினி-சிக்கி ரெட்டி ஜோடி வெற்றி பெற்று 2-வது சுற்றுக்குள் நுழைந்தது.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை மால்விகா பான்சோத் தோல்வியடைந்தார்.

    டோக்கியோ:

    27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று தொடங்கியது. அதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 21-19, 21-9 என்ற நேர்செட்டில் ஹாங்காங்கின் சியுங் நாகன் யியை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மேலும், பெண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்றில் இந்தியாவின் அஸ்வினி-சிக்கி ரெட்டி ஜோடி வெற்றி பெற்று 2-வது சுற்றுக்குள் நுழைந்தது. அதேபோல கலப்பு இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் இஷான் பத்நாகர்-தனிஷா கிரஸ்டோ இணை வெற்றி பெற்று 2-வது சுற்றுக்குள் நுழைந்தது.

    மறுபுறம் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை மால்விகா பான்சோத் தோல்வியடைந்தார்.

    ×