search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cake mixing ceremony"

    • ஃபேரோஸ் நட்சத்திர ஓட்டலில், பாரம்பரிய கிறிஸ்துமஸ் கேக் மிக்ஸிங் விழா பிரம்மாண்டமாக நடந்தது.
    • கேக்கிற்கான கலவையை கொண்டு 70 முதல் 80 கிலோ வரையிலான கேக் தயாரிக்கப்படவுள்ளதாம்.

    உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, கிறிஸ்துமஸ் பண்டிகையை கோலாகலமாக கொண்டாட கிறிஸ்தவ மக்கள் டிசம்பர் மாத தொடக்கத்திலேயே அதற்கான ஏற்பாடுகளை செய்ய தொடங்கிவிடுவார்கள். 

    ஏசு கிறிஸ்துவின் வருகையை குறிக்கும் வகையில் வீட்டு வாசலில் நட்சத்திரங்களைத் தொங்கவிடுவது, அவரது பிறப்பைச் சித்தரிக்கும் வகையில் இல்லங்களில் கிறிஸ்துமஸ் மரங்கள் வைத்து குடில்கள் அமைப்பது, கிறிஸ்துமஸ் கேரல்ஸ் பாடுவது, கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிவது, கேக் தயாரிப்பது ஆகிய பணிகளை மேற்கொள்வார்கள்.

    அதிலும் பாரம்பரிய கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணியை நவம்பர் மாத பாதியிலேயே தொடங்கிவிடுவார்கள். கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பு என்பது ஒரு விழாவாகவே கொண்டாடப்படுகிறது.

    கிறிஸ்துமஸ் "கேக் மிக்ஸிங் செரிமனி" என நடக்கும் இந்த விழா, 17-ம் நூற்றாண்டின் மத்தியில் இங்கிலாந்தில் தொடங்கி, பின்னர் ஐரோப்பா முழுவதும் பரவியது. விக்டோரியா ராணி காலத்தில் அமெரிக்காவுக்கும் பரவிய இந்த கேக் தயாரிப்பு விழா, தற்போது ஆசிய நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தியாவில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், கிறிஸ்துமஸ் கேக் மிக்ஸிங் விழாவை ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடி வருகின்றன. 

    அந்தவகையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஃபேரோஸ் நட்சத்திர ஓட்டலில், பாரம்பரிய கிறிஸ்துமஸ் கேக் மிக்ஸிங் விழா பிரம்மாண்டமாக நடந்தது.

    ஓட்டல் வாடிக்கையாளர்கள், சுற்றுலா பயணிகள், பணியாளர்கள் என அனைவரும் ஒன்றாக இணைந்து மகிழ்ச்சியாக விழாவில் பங்கேற்றனர். 

    கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்புக்காக சுமார் 50 கிலோ அளவிலான உலர் பழங்கள் மற்றும் உலர் கொட்டைகளை மதுக்கலவையில் மிக்ஸ் செய்தனர். இந்த கலவையை கொண்டு 70 முதல் 80 கிலோ வரையிலான கேக் தயாரிக்கப்படவுள்ளதாம்.

    • கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக கேக் தயாரிப்பது ஒரு விழாவாகவே கொண்டாடப்படுகிறது.
    • பாரம்பரியம் மிக்க 'ரிச் பிளம் கேக்' உலகளவில் பிரபலமானது.

    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான ஆயத்தப் பணிகள் தற்போதே தொடங்கிவிட்டன. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக கேக் தயாரிப்பது ஒரு விழாவாகவே கொண்டாடப்படுகிறது. பல வகை கேக்குகள் கடைகளில் கிடைத்தாலும், ஓட்டல்களில் தயாரிக்கப்படும் பாரம்பரியம் மிக்க 'ரிச் பிளம் கேக்' உலகளவில் பிரபலமானது.


    சென்னை பார்க் எலன்சா ஹோட்டலில் 5-ஆம் வருட கேக் மிக்ஸிங் விழா நடைபெற்றது. இதில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் நடிகர்கள் சுப்பு பஞ்சு, பிரித்வி பாண்டியராஜன், நடிகை ஷாலு சம்மு, இயக்குனர் சசி, தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

    ×