என் மலர்
முகப்பு » calls colleague handsome
நீங்கள் தேடியது "calls colleague handsome"
குவைத்தில் டிவி நேரலையின் போது சக ஊழியரை ஹேண்ட்சம் என்று அழைத்த தொகுப்பாளினியை அந்நிறுவனம் பணியை விட்டு நீக்கிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. #KuwaitiTVpresenter
குவைத் சிட்டி:
குவைத்தில் உள்ள பிரபல தொலைக்காட்சியில் நேரலை நிகழ்ச்சி ஒளிப்பரப்பு செய்யப்பட்டு கொண்டிருந்தது. அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளினி ஒருவர் தொகுத்து வழங்கினார். அவர் வீடியோ வாயிலாக பத்திரிக்கையாளர் நவாஃப் அல் ஷாரக்கியிடம் பேசினார். அப்போது நவாஃப் தனது தலைப்பாகையை சரி செய்தார். அதற்கு தொகுப்பாளினி, நீங்கள் இப்போது அழகாக தான் உள்ளீர்கள். அதனால் தலைப்பாகையை சரி செய்ய வேண்டாம் என கூறினார்.
அவர் ஹேண்ட்சம் என கூறியது நேரலையில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. இதனை கண்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து அந்த தொகுப்பாளினியை பத்திரிகை நிறுவனம் பணியிலிருந்து நீக்கியது.
ஹேண்ட்சம் என்று கூறியதற்காக பெண் ஒருவருக்கு எதிராக பலர் கருத்து தெரிவிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. #KuwaitiTVpresenter

×
X