என் மலர்
நீங்கள் தேடியது "Cambodia"
- தலைப்பகுதி இருந்த இடத்தில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் உடற்பகுதி கண்டெடுக்கப்பட்டது.
- சிலையின் உடற்பகுதி கண்டுபிடிக்கப்பட்டது எங்களுக்கு பெரிய ஆச்சரியமாக இருக்கிறது.
நாம்பென்:
கம்போடியா நாட்டின் அங்கோர்வாட் கோவில் வளாகம், இந்து மற்றும் புத்தமத வழிபாட்டு தலம் ஆகும்.
அந்த கோவிலை உள்ளடக்கிய அங்கோர் பகுதியின் 400 சதுர கி.மீ. பரப்பளவில் அகழ்வாராய்ச்சி நடந்து வருகிறது. தெற்கு ஆசியாவின் மிக முக்கியமான அகழ்வாராய்ச்சி பகுதியாக அது கருதப்படுகிறது. கடந்த ஆண்டு அங்கு 10 லட்சம் சர்வதேச சுற்றுலா பயணிகள் வந்தனர்.
கம்போடியாவில் 9-ம் ஆம் நூற்றாண்டு முதல் 15-ம் நூற்றாண்டுவரை ஆட்சி செய்த மன்னர்களின் தலைநகரங்களின் சிதிலமடைந்த பகுதிகளை தோண்டி எடுக்க அகழ்வாராய்ச்சி நடந்து வருகிறது. கோவில் வளாகத்தில் சிதறிக்கிடக்கும் கலைப்பொருட்களை சேகரித்து, கம்போடியாவின் கலாசார பெருமையை பறைசாற்றுவதும் அகழ்வாராய்ச்சியின் நோக்கம் ஆகும்.
அங்கோர்வாட் கோவில் வளாகத்தில் கடந்த 1927-ம் ஆண்டு ஒரு புத்தர் சிலையின் தலைப்பகுதி கண்டெடுக்கப்பட்டது. அது, அங்குள்ள தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவில் வளாகத்தில் சமீபத்தில் கம்போடிய நிபுணர்களும், இந்திய நிபுணர்களும் நடத்திய அகழாய்வின்போது, புத்தர் சிலையின் உடற்பகுதி கண்டெடுக்கப்பட்டது. அதை 'ஸ்கேன்' செய்தபோது, ஏற்கனவே கண்டெடுக்கப்பட்ட தலைப்பகுதியுடன் பொருந்துகிறது.
தலைப்பகுதி இருந்த இடத்தில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் உடற்பகுதி கண்டெடுக்கப்பட்டது. இதனால் தொல்லியல் அறிஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அந்த சிலை, 12 அல்லது 13-வது நூற்றாண்டை சேர்ந்ததாக கருதப்படுகிறது. சிலையின் அங்கமாக கருதப்படும் 29 துண்டுகளுடன் உடற்பகுதி கண்டெடுக்கப்பட்டது. 1.16 மீட்டர் உயரம் கொண்ட அச்சிலை, பேயோன் கலை வடிவத்தில் இருக்கிறது.
இதுகுறித்து தொல்லியல்துறை அறிஞர் நேத் சைமன் கூறியதாவது:-
இதுவரை கிடைத்தவை எல்லாம் சிறு துண்டுகள். இப்போது சிலையின் உடற்பகுதி கண்டுபிடிக்கப்பட்டது எங்களுக்கு பெரிய ஆச்சரியமாக இருக்கிறது.
இன்னும் கிடைக்கவில்லை. கலாசார மந்திரியிடம் ஒப்புதல் பெற்று, தலையையும், உடற்பகுதியையும் பொருத்தி, பொதுமக்கள் பார்வைக்கு வைக்க விரும்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வெடி விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
- வெடி விபத்து குறித்த தகவலை கம்போடியாவின் பிரதமர் ஹன் மானெட் பகிர்ந்துள்ளார்.
கம்போடியா நாட்டின் மேற்கு பகுதி, கம்போங் ஸ்பியூ மாகாணத்தில் மிகப்பெரிய ராணுவ தளம் அமைந்துள்ளது.
அங்கு, வெடி பெருட்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், வெடிபொருட்கள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.
இதில், அங்கு கரும் புகை மண்டலமாக உருவானது. இந்த பயங்கர வெடிவிபத்தில் 20 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
மேற்கூறிய தகவல்களை கம்போடியாவின் பிரதமர் ஹன் மானெட் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
- 5000 இந்தியர்கள் ஆள் கடத்தல் கும்பல்கள் மூலம் கம்போடியாவுக்கு கடத்தப்பட்ட சம்பவம் கடந்த மாதம் பரபரப்பை ஏற்படுத்தியது.
5000 இந்தியர்கள் ஆள் கடத்தல் கும்பல்கள் மூலம் கம்போடியாவுக்கு கடத்தப்பட்ட சம்பவம் கடந்த மாதம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று கம்போடியாவில் 300 இந்தியர்கள் தங்கள் கையாள்களுக்கு எதிராக 'கிளர்ச்சி' செய்ததாக ஆந்திரப் பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் வெளி நாட்டில் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திராவைச் சேர்ந்த 150 இளைஞர்கள் கம்போடியாவில் =ஒரு வருடமாக சிக்கிக் கொண்டுள்ளனர், அங்கு சீன ஏஜெண்டுகளால் சிறைபிடிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு மற்றும் டாஸ்க் கேம் மோசடி, பங்குச் சந்தை மோசடி உள்ளிட்டவற்றை செய்ய சீன ஏஜெண்டுகளால் வற்புறுத்தப் படுகிறார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
விசாகப்பட்டினம் போலீஸ் கமிஷனர் ஏ ரவிசங்கர் கூறுகையில், இந்த கடத்தப்பட்ட இந்தியர்கள் கம்போடியாவில் உள்ள ஜின்பே மற்றும் கம்பவுண்ட், சிஹானூக்வில் ஆகிய இடங்களில் பெரிய அளவிலான கலவரங்களை ஏற்படுத்தினர். இது சைபர் குற்றங்களுக்கான மையமாக கூறப்படுகிறது.
காவல்துறையின் எண்களுக்கு போன் செய்து அதுதொடர்பான வீடியோக்களை அனுப்பியுள்ளனர். நேற்று சுமார் 300 இந்தியர்கள் கம்போடியாவில் தங்கள் ஏஜெண்டுகளுக்கு எதிராக பெரிய அளவில் 'கிளர்ச்சி' செய்தனர் என்று தெரிவித்தார். மேலும் அவர்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
முன்னதாக சிங்கப்பூரில் டேட்டா என்ட்ரி வேலை வாங்கித்தருவதாக கூறி இந்தியாவைச் சேர்ந்த இளைஞர்களைக் கடத்துவதாக மே 18 அன்று, விசாகப்பட்டினம் காவல் துறையினர் சுக்கா ராஜேஷ், எஸ் கொண்டலா ராவ் மற்றும் எம் ஞானேஷ்வர் ராவ் ஆகியோரை மனித கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
ஆசியான் அமைப்பில் உள்ள நேசநாடான வியட்நாம் வெளியுறவுத்துறை மந்திரி பாம் பின் மின் தலைமையிலான இந்தியா - வியட்நாம் வெளியுறவுத்துறை சார்ந்த 16-வது கூட்டத்தில் பங்கேற்பதற்காக சுஷ்மா சுவராஜ் வரும் 27-ம் தேதி வியட்நாம் நாட்டுக்கு பயணமாகிறார்.
இந்த பயணத்தின்போது, இருநாட்கள் வியட்நாமில் தங்கியிருக்கும் சுஷ்மா, இந்திய பெருங்கடல்சார்ந்த மாநாட்டின் மூன்றாவது அமர்வை தொடங்கி வைக்கிறார். வியட்நாம் பிரதமர் நுகுயென் க்சுவான் ஃபுக்-ஐயும் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
அங்கிருந்து 29-ம் தேதி கம்போடியா நாட்டுக்கு செல்லும் அவர், அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி பிராக் சோக்ஹான், கம்போடியா பிரதமர் ஹூன் சென் மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் சேய் சும் ஆகியோரை சந்தித்து இந்தியா - கம்போடியா இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். #Sushma #Vietnamvisit #Cambodiavisit
கம்போடியா நாட்டில் அடுத்த மாதம் 29-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதில் அந்நாட்டின் இளவரசரும், முன்னாள் பிரதமருமான நோரோடோம் ரனாரித் தனிக்கட்சி தொடங்கி போட்டியிடுகிறார். இவர் கம்போடிய மன்னர் சிஹாமோனியின் ஒன்றுவிட்ட சகோதரர் ஆவர். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக ரனாரித் மற்றும் அவருடைய மனைவி அவுக் பால்லா(வயது 39) இருவரும் நேற்று பிரீச் ஷிஹானுக் மாகாணத்திற்கு ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிரே வந்த வாடகை கார் அவர்கள் பயணித்த கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் ரனாரித்தும், அவுக் பால்லாவும் படுகாயம் அடைந்தனர். இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் சில மணி நேரத்துக்கு பின்பு அவுக் பால்லா சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். ரனாரித் 1993-ம் ஆண்டு முதல் 1997-ம் ஆண்டு வரை கம்போடியாவில் பிரதமராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Combodia #PrinceRanariddh #Tamilnews