என் மலர்
நீங்கள் தேடியது "car glass broke"
பாகூர்:
பாகூர் சிவன் கோவில் அருகே டீக்கடை பகுதியில் கடந்த 3 நாட்களாக விடுதலை சிறுத்தை கட்சி கொடியுடன் தமிழக பதிவெண் கொண்ட கார் நிறுத்தப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று அப்பகுதியில் மாட்டு பொங்கலையொட்டி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடந்தது. அப்போது யாரோ மர்ம நபர்கள் நிறுத்தப்பட்ட இருந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி விட்டு சென்று விட்டனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் திடீர் பதட்டம் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததம் பாகூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் தொடர்ந்து கார் அங்கு நிறுத்தப்பட்டால் பிரச்சினை ஏற்படலாம் என கருதி அந்த காரை கிருமாம்பாக்கம் போலீஸ் நிலைய வளாகத்தில் கொண்டு வந்து நிறுத்தினர்.
தொடர்ந்து அந்த கார் யாருக்கு சொந்தமானது, கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.