search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Case against 8 people"

    • அனில்குமார் (27). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகன் (50) என்பவருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
    • 8 பேர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள ஆரூர்பட்டி கிராமம் கணக்குப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அனில்குமார் (27). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகன் (50) என்பவருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த தகராறு தொடர்பாக இரு தரப்பிலும் கொடுத்த புகாரின் பேரில் முருகன் (50), சிவன் (26), ரஞ்சித்குமார் (25), அனில்குமார் (27), சிவா (26), அன்பு (30), அரவிந்தன் (25), ராஜமுத்து (55) உட்பட 8 பேர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • செல்வம் (வயது 60). இவருக்கும் விஷ்வநாதன் (45) ஆகியோருக்கும் இடையே நிலத்தகராறு தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.
    • குடிநீர் பைப் லைன் போடும் போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகி லுள்ள மல்லியக்குட்டை கிராமம், மன்னாதன் காட்டுவளவு பகுதியை சேர்ந்த செல்வம் (வயது 60). இவருக்கும் விஷ்வநாதன் (45) ஆகியோருக்கும் இடையே நிலத்தகராறு தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த 8-ந்தேதி மல்லிகுட்டை ஊராட்சி சார்பில் குடிநீர் பைப் லைன் போடும் போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கை கலப்பாக மாறியது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    இதுபற்றி இரு தரப்பும் கொடுத்த புகாரின் பேரில் விஸ்வநாதன். சந்தோஷ். பிரபாகரன், செல்வம், சரவணன், குமார், மூர்த்தி உள்ளிட்ட 8 பேர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோகன்ராஜ் திடீரென்று குடிப்போதையில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார்.
    • நந்தினியை மானபங்கம் படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் அருேக தூக்கணாம்பாக்கம் பகுதி சின்ன குட்டியாங்குப்பம் ஊரைச் சேர்ந்தவர் ரஞ்சித். இவரது மனைவி நந்தினி (வயது 27). சம்பவத்தன்று இவரது உறவினர் மோகன்ராஜ் என்பவர் திடீரென்று குடிப்போதையில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார். வீட்டிலிருந்த டிவி, கதவு உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நந்தினி தரப்பினருக்கும், மோகன்ராஜ் தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் நந்தினியை மானபங்கம் படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் நந்தினி மற்றும் விஜயகுமார் ஆகியோர் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்‌. 

    இது குறித்து தூக்கணாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் நந்தினி கொடுத்த புகாரின் பேரில் மோகன்ராஜ், கலைவாணி, விஜயகுமார், கலையூரை சேர்ந்த சிவரஞ்சனி ஆகியோர் மீதும், விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் மகேஸ்வரி, நந்தினி, காரைக்காட்டை சேர்ந்த ரமணி, ரம்யா உட்பட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிலத் தகராறில் அடியாட்களுடன் வந்து ராஜகணபதியின் குடும்பத்தி னரை தாக்கியதாகவும், இதுகுறித்து இரும்பாலை போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
    • அரசு ஊழியர்களான 2 பேர் உள்பட அதே பகுதியை சேர்ந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் சித்தர்கோவில் அடுத்த பெத்தாம்பட்டியை சேர்ந்தவர் ராசமுத்து மகன் ராஜகணபதி (வயது 42). விசைத்தறி தொழிலாளி. இவர் கடந்த திங்கட்கிழமை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் முகாமிற்கு வந்து மனு கொடுத்தார்.

    அதில், அதே பகுதியை சேர்ந்த துணை தாசில்தார் ஒருவரும், தொழில் மையத்தில் உதவியாளராக பணியாற்றும் ஒருவரும் சேர்ந்து நிலத் தகராறில் அடியாட்களுடன் வந்து ராஜகணபதியின் குடும்பத்தி னரை தாக்கியதாகவும், இதுகுறித்து இரும்பாலை போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதையடுத்து ராஜகணபதி கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் போலீசாரிடம் அறிவுறுத்தினார். இதன் எதிரொலியாக தற்போது இரும்பாலை போலீசார், அரசு ஊழியர்களான காந்தி தேசாய், சிங்காரவேலு ஆகிய 2 பேர் உள்பட அதே பகுதியை சேர்ந்த முருகன், வேல்முருகன், கந்தசாமி, பச்சியப்பன், கார்த்திகேயன், வெள்ளையதேவன் ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் அருகே டி. புதுப்பாளையம் சேர்ந்தவர் நேதாஜி. இவரது தம்பி அபிஷேக்.
    • நேதாஜி, கோபிநாத் ஆகிய 2 பேரும் அதே பகுதியில் பெட்ரோல் போடுவதற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே டி. புதுப்பாளையம் சேர்ந்தவர் நேதாஜி. இவரது தம்பி அபிஷேக். அதே பகுதியை சேர்ந்த நண்பர் கோபிநாத் தம்பி கோகுல் என்பவரும் பஸ்சில் சென்று புதுப்பாளை யம் பகுதியில் இறங்கினர். அப்போது பஸ்சில் வந்த 2 பேருக்கும், அதே பகுதி யை சேர்ந்த தமிழ்ச்செல்வன், அருள் ஆகியோருக்கும் திடீரென்று வாய் தகராறு ஏற்பட்டு தாக்கி கொண்டனர். உடனே அந்த வழியாக வந்தவர்கள் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

    சம்பவத்தன்று நேதாஜி, கோபிநாத் ஆகிய 2 பேரும் அதே பகுதியில் பெட்ரோல் போடுவதற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட4 பேர் திடீ ரென்று 2 பேரை வழி மறித்து தகராறில் ஈடுபட்டு கத்தியால் தாக்கி அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர். அதோடு வீட்டின் எதிரில் தமிழ்ச்செல்வன் மற்றும் அருளை, நேதாஜி தரப்பினர் தாக்கி நாற்காலியை உடைத்த தாக கூறப்படுகிறது. இந்த கோஷ்டி தகராறில் நேதாஜி, கோபிநாதன், தமிழ்ச்செல்வன், அருள் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.

    இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் நேதாஜி கொடுத்த புகாரின் பேரில் தமிழ்ச்செல்வன் மற்றும் 4 பேரும், தமிழ்ச்செல்வன் கொடுத்த புகாரின் பேரில் நேதாஜி உள்ளிட்ட 4 பேர் என 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    ×