என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
தாரமங்கலம் அருகே நிலத்தகராறில் மோதல்; 8 பேர் மீது வழக்கு
By
மாலை மலர்19 April 2023 3:14 PM IST

- செல்வம் (வயது 60). இவருக்கும் விஷ்வநாதன் (45) ஆகியோருக்கும் இடையே நிலத்தகராறு தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.
- குடிநீர் பைப் லைன் போடும் போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகி லுள்ள மல்லியக்குட்டை கிராமம், மன்னாதன் காட்டுவளவு பகுதியை சேர்ந்த செல்வம் (வயது 60). இவருக்கும் விஷ்வநாதன் (45) ஆகியோருக்கும் இடையே நிலத்தகராறு தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 8-ந்தேதி மல்லிகுட்டை ஊராட்சி சார்பில் குடிநீர் பைப் லைன் போடும் போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கை கலப்பாக மாறியது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இதுபற்றி இரு தரப்பும் கொடுத்த புகாரின் பேரில் விஸ்வநாதன். சந்தோஷ். பிரபாகரன், செல்வம், சரவணன், குமார், மூர்த்தி உள்ளிட்ட 8 பேர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
X