என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » catches fire
நீங்கள் தேடியது "catches fire"
ஈரானில் விமான நிலையத்தின் ஓடுபாதையில் விமானம் தரையிறங்கியபோது சற்றும் எதிர்பாரத வகையில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. #Iran #FlightFireAccident
தெஹரான்:
ஈரான் தலைநகர் தெஹரானில் உள்ள மெக்ராபாத் விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு, ‘ஈரான் ஏர்’ நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் வந்தது. விமானத்தில் 100 பயணிகளும், விமான ஊழியர்கள் சிலரும் இருந்தனர்.
விமான நிலையத்தின் ஓடுபாதையில் தரையிறங்கியபோது சற்றும் எதிர்பாரத வகையில் விமானத்தில் தீப்பிடித்தது. இதனால் பதற்றம் அடைந்த பயணிகள் பயத்தில் அலறினர்.
இதையடுத்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. விமானத்தில் இருந்து பயணிகள், விமான ஊழியர்கள் என அனைவரும் காயமின்றி பத்திரமாக மீட்கப்பட்டனர்.
அதனை தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் விமானத்தில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விமானத்தில் தீப்பிடித்ததற்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரிக்கப்படுகிறது. #Iran #FlightFireAccident

ஹால்டியா துறைமுகம் அருகே சரக்கு கப்பலில் நிகழ்ந்த தீ விபத்து காரணமாக கப்பலில் இருந்த மாலுமி உள்பட 22 ஊழியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். #ContainerShip #Fire #SailorsRescued
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலம் ஹால்டியா துறைமுகம் அருகே வங்கக்கடலில் ‘எம்.வி. எஸ்.எஸ்.எல். கொல்கத்தா’ என்ற சரக்கு கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த கப்பலில் நேற்று முன்தினம் இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த கப்பலில் இருந்த ஊழியர்கள், கடற்படை அதிகாரிகளிடம் உதவி கேட்டனர். இதையடுத்து கடற்படை கப்பல் மற்றும் சரக்கு விமானத்தில் வீரர்கள் சரக்கு கப்பல் இருந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். பலத்த காற்று மற்றும் மோசமான தட்பவெப்பநிலை காரணமாக மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது.
எனினும் அந்த கப்பலில் இருந்த மாலுமி உள்பட 22 ஊழியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அந்த கப்பலில் பிடித்த தீயை அணைக்கும் பணி நடந்தது. #ContainerShip #Fire #SailorsRescued #tamilnews

×

X