search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CBI special court"

    பத்திரிகையாளரை கொலை செய்த வழக்கில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. #GurmeetRamRahim
    சண்டிகர்:

    அரியானா மாநிலம் சில்சாந் அகரில் வசித்து வந்த பத்திரிகையாளர் சத்ரபதி. இவர் மாலை நாளிதழ் ஆசிரியராக இருந்தார்.
     
    இவரது நாளிதழில் அரியானா சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதாக செய்தி வெளியிட்டார். இதையடுத்து 2002ஆம் ஆண்டு அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    இதுதொடர்பாக, 2003ஆம் ஆண்டு சாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 2006ஆம் ஆண்டு இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.

    பாலியல் பலாத்காரம் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, 20 ஆண்டுகள் சிறை தண்டனையை ஏற்கனவே அவர் அனுபவித்து வருகிறார்.



    இதற்கிடையே, பத்திரிகையாளர் ராம்சந்தர் சத்ரபதி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம்  ரஹீம் சிங் குற்றவாளி என அரியானா மாநிலத்தின் சிபிஐ நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்தது.

    பத்திரிகையாளர் ராம்சந்தர் சத்ரபதி கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம்  ரஹீம் சிங் உள்ளிட்ட 4 பேர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கான தண்டனை வரும் 17-ம் தேதியன்று அறிவிக்கப்படும் என அரியானா பஞ்ச்குலா நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், பத்திரிகையாளரை கொலை செய்த வழக்கில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், மற்ற குற்றவாளிகளான குல்தீப் சிங், நிர்மல் சிங், கிரிஷன் லால் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

    மேலும், அவர்கள் நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனையுடன் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. #GurmeetRamRahim
    ஏர்செல் மாக்சிஸ் விசாரணை தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் காணப்படும் விவரங்கள் ஊடகங்களுக்கு கசிந்தது தொடர்பாக டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் வழக்கு தொடர்ந்துள்ளார். #AircelMaxisCase #CBI #Chidambaram
    புதுடெல்லி:

    ஏர்செல் மாக்சிஸ் ஊழல் வழக்கில் முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த குற்றப்பத்திரிகையின் சில விவரங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டதாக ப.சிதம்பரம் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று வழக்கு பதிவு செய்துள்ளார்.

    அவரது மனுவில், சிபிஐ குற்றப்பத்திரிகையை ஊடகங்களுக்கு வெளியிடுவதன் மூலம், இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த விரும்புவதாகவும், நீதி விசாரணையை விடுத்து ஊடகங்கள் மூலம் வெற்றி பெற சிபிஐ நினைப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    முன்னதாக, சிபிஐ குற்றப்பத்திரிகையை சம்பந்தபட்டவர்களுக்கு வழங்குவதற்கு முன்னதாக, ஊடகங்களுக்கு வழங்குவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியிருந்தார்.

    ப.சிதம்பரத்தின் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஓ.பி.ஷைனி, வழக்கு குறித்து அக்டோபர் 8-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு சிபிஐ-க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #AircelMaxisCase #CBI #Chidambaram
    ×