search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cell Phone Robbery"

    • ரெயில் புறப்பட்ட நேரத்தில் வாலிபர்கள் இருவர் சேர்ந்து செல்போனை பறித்து இழுத்ததால் பிரீத்தி தவறி கீழே விழுந்தார்.
    • ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்து விசாரணை நடத்தினர்.

    சென்னை:

    சென்னையில் ரெயில் பயணிகளை குறிவைத்து செல்போன் பறிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. இதுபோன்ற நேரங்களில் ரெயிலில் இருந்து பயணிகள் உயிரிழப்பதும் தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் சென்னையில் பறக்கும் ரெயிலில் இளம்பெண் ஒருவர் செல்போன் பறிப்பின்போது தவறி விழுந்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கோட்டூர்புரத்தை சேர்ந்தவர் பிரீத்தி. பட்டதாரி இளம்பெண்ணான இவர் படித்து முடித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்கராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2-ந் தேதி பறக்கும் ரெயிலில் பயணம் செய்தார்.

    அடையாறு இந்திரா நகர் ரெயில் நிலையத்தில் வைத்து நடைமேடையில் நின்று கொண்டிருந்த 2 பேர் பிரீத்தி செல்போனை பறித்தனர்.

    ரெயில் புறப்பட்ட நேரத்தில் வாலிபர்கள் இருவர் சேர்ந்து செல்போனை பறித்து இழுத்ததால் பிரீத்தி தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. மயக்க நிலைக்கு சென்று பிரீத்தி சுயநினை வை இழந்தார்.

    இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிரீத்தி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்து விசாரணை நடத்தினர். இதில் பட்டினப்பாக்கத்தை சேர்ந்த வினோத், அடையாறை சேர்ந்த மணிமாறன் ஆகிய இருவரும் பிரீத்தியின் செல்போனை பறித்து அவரது உயிரிழப்புக்கு காரணமானது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழிப்பறி மற்றும் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். ரெயில் நிலையங்களில் இதுபோன்று நடைபெறும் செல்போன் செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கொடுங்கையூர் அருகே தே.மு.தி.க. பிரமுகர் கடையில் ரூ.6½ லட்சம் மதிப்புள்ள செல்போன், ரூ.1½ லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Robbery
    பெரம்பூர்:

    வியாசர்பாடி, சாஸ்திரி நகரை சேர்ந்தவர் அருள் பாக்யராஜ். தே.மு.தி.க.வில் மாநில பொதுக்குழு உறுப்பினராக உள்ளார்.

    இவர் கொடுங்கையூர் அருகே மூலக்கடை, காந்தி நகர், காமராஜ் சாலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு புதிதாக செல்போன் கடை திறந்து இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று விற்பனை முடிந்ததும் ஊழியர்கள் கடையை பூட்டிச் சென்றனர். இன்று காலை கடையை திறக்க வந்தபோது 2 ‌ஷட்டர்களின் பூட்டு உடைந்து திறந்து கிடந்தது.

    உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த விலை உயர்ந்த செல்போன்கள் உள்பட அனைத்தையும் மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்று இருந்தனர். மேலும் பணப்பெட்டியில் இருந்த ரூ.1½ லட்சமும் சுருட்டப்பட்டு இருந்தது.

    கொள்ளை போன செல்போன்களின் மதிப்பு ரூ.6½ லட்சம் ஆகும். இது குறித்து கொடுங்கையூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உதவி கமி‌ஷனர் அழகேசன், இன்ஸ்பெக்டர் பத்மாவதி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்களின் உருவம் பதிவாதி உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகிறார்கள். #Robbery


    ×