என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "cellphone snatch"
- திருச்செந்தூர் குமாரபுரத்தை சேர்ந்தவர் சந்தனகுமார் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
- சந்தனகுமாரை வழிமறித்து அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் குமாரபுரத்தை சேர்ந்தவர் சந்தனகுமார் (வயது 29). இவர் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
மிரட்டி செல்போன் பறிப்பு
சம்பவத்தன்று பணி முடித்து மாலையில் வீடு திரும்பினார். சங்கிவிலை- குமாரபுரம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது அங்கு வந்த வீரபாண்டிய பட்டணம் முத்து நகரை சேர்ந்த நம்பிராஜன் (வயது24), வெங்கடேஷ் இருவரும் சேர்ந்து சந்தனகுமாரை வழிமறித்து அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.
அவரிடம் பணம் இல்லாததினால் அவரிடம் இருந்த செல்போனை பறித்தனர். மேலும் அவரது மோட்டார் சைக்கிளையும் எடுத்து சென்றனர். இது தொடர்பாக திருச்செந்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நம்பிராஜன், வெங்கடேஷ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து இவரது நண்பர் சதீஷ் , இரண்டு பேரும் தனியார் கம்பெனியில் ஊழியர்களாக வேலை பார்த்து வருகிறார்கள்.
இருவரும் பெரியகுப்பம் கற்குழாய் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த மர்ம நபர்கள் அவர்களை கத்தியைக் காட்டி பணம் பறிக்க முயன்றனர். பணத்தைத் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் மாரிமுத்து, சதீசை கத்தியால் வெட்டி 2 சவரன் நகை, ரூபாய் 13,000, செல்போன் உள்ளிட்டவற்றை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.
காயம்அடைந்த இருவரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கும்பகோணம், அக்.2-
கும்பகோணம் நகரப் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவரது மகன் தியாகராஜன் (வயது 27). இவர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் தனியார் காவலராக பணி புரிந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று தியாகராஜன் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் பணியில் நின்று கொண்டிருந்தார். அப்போது மணஞ்சேரியை சேர்ந்த முருகன் என்பவர் திடீரென அவசர சிகிச்சை வார்டில் நுழைந்து அங்கு இருந்த நோயாளிகளின் செல்போன்களை பறித்தார்.
இதை பார்த்த தியாகராஜன் அவரை பிடிக்க முற்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த முருகன் தியாகராஜனை சரமாரி தாக்கினார். இதில் தியாகராஜனுக்கு கண் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து வார்டில் இருந்தவர்கள் முருகனை பிடித்து கும்பகோணம் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். தியாகராஜனுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்